loulon 

chinese movie


iqyi app


லூலோன் என்ற இடத்தில் உள்ள பொக்கிஷத்தை பாதுகாக்க நினைக்கும் நாயகன், அதை திருட நினைக்கும் ஜப்பான் கைக்கூலி என கதை செல்கிறது. சீனத் திரைப்படம் என்பதால், ஜெயம் நாயகன் பக்கம்தான் என்பதால் பெரிதாக கவலைப்படவேண்டியதில்லை. 


நாயகன் மத்திய வயதில் உள்ளவர். படத்தின் தயாரிப்பாளராக கூட இருக்கலாம். பொக்கிஷங்களைத் தேடும் படத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த படத்திற்கும் பொருந்தும். ஆக்ரோஷ நாட்டைக்காக்கும் நாயகன், அப்பாவைத் தேடும் நாயகி, போதை, பேராசை என வாழும் நண்பன், சீன பொக்கிஷங்களை அபகரிக்கும் ஜப்பானிய கைக்கூலி எல்லாம் பெரிதாக மாறவில்லை. 


இந்த படத்தில் ஜப்பானியர்களுக்கும், சீன நாயகனுக்குமான சண்டை நீண்டுகொண்டே செல்கிறது. போதும் போதும் மெயின் கதைக்கு வாங்கடா என்றால் வராமல் ஒளிந்து சண்டைபோட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நாயகன், ஜப்பானியர்களை ஆசை தீர சுட்டுக்கொன்றுகொண்டே இருக்கிறார். 


பொக்கிஷ குகையில் பூரான் போல ஒரு ஜந்து உள்ளது. அதுதான் அங்கு வருபவர்களைக் கொன்று பொக்கிஷத்தைக் காக்கிறது. அதைத்தாண்டி குகையில் பெரிய ஆபத்து ஏதும் இல்லை. மனிதர்களின் அமரத்துவ ஆசையைத் தவிர. அதுதான் இங்கேயும் முக்கியமான ஆபத்தை உருவாக்குகிறது. இறுதியாக குகை இடிந்துபோக, வில்லன் அவனது பெண் பாடிகார்ட் உள்ளேயே சிக்கிக்கொள்ள நாயகன் டீம் வெளியேறுகிறது. படம் சுபம். 


பெல்டில் உள்ள பக்கிள் போல ஒன்றை மேப்பில் வைத்து சூரிய வெளிச்சத்தில் காட்ட ஆதிகால நகரம் கண்களுக்கு தெரிய வரும் சிஜி காட்சி நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. நாயகன், ஜப்பானியர்களின் திட்டத்தை தெரிந்துகொள்ள பாலைவனத்தில் இருப்பது, அங்கு சண்டை போடுவது ஆகிய சாட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. 


படம் பொக்கிஷத்தைக் காப்பாற்றுவதை முக்கியமாக கொண்டுள்ளது. நாயகனுக்கு அதை விட பேரின்பம், ஜப்பானியர்களை சுட்டுக்கொல்வதுதான். படம் நெடுக வாய்ப்பு கிடைக்கும் சண்டைகளில் எல்லாம் ஜப்பானிய வீரர்களை கொன்று கொண்டே இருக்கிறார். அப்போதுதானே சீன தேசப்பற்றை மக்களுக்கு புரிய வைக்க முடியும்?


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்