ஷி ஜின்பிங்கின் ஐரோப்பிய சுற்றுப்பயணம்!

 










ஷி ஜின்பிங்கின் ஐரோப்பிய சுற்றுப்பயணம்


சீன அதிபர் ஐரோப்பாவுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வருகை தருகிறார். அமெரிக்காவுடன் வணிகப்போர் நடந்துவருகிற நிலையில், அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது இதுவரையில் விட்டுப்போன உறவை மீண்டும் உருவாக்குவதற்காகவே என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 


பிரான்ஸ், செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு ஜின்பிங் செல்லவிருக்கிறார். அதிகாரப்பூர்வ பயணத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகளும் இருக்கும் என்பது எதிர்பார்க்க கூடியதே. ஆசியாவில் சீன முக்கியமான வளர்ந்து வரும் சக்தி. பிற நாடுகள் சாதி,மதம், இனம் என பிரிவினைக்குள்ளாகி வரும் நிலையில் தனது செல்வாக்கை திட்டமிட்டு வளர்த்துக்கொள்ளும் விதத்தில் சீனா சாமர்த்தியசாலிதான். ஒரே கட்சியைக் கொண்ட தீவிர கண்காணிப்பு முறையைக் கொண்ட நாடு சீனா. 


அமெரிக்காவைப் பொறுத்தவரை தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை சீனா பிரிக்க முயல்கிறதோ என நினைக்கலாம். 1999ஆம் ஆண்டு மே ஏழாம்தேதி பெல்கிரேட்டில் உள்ள சீன தூதரகத்தில் நேட்டோ படையின் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் மூன்று சீன பத்திரிகையாளர்கள் இறந்துபோனார்கள். அமெரிக்க அரசு இதற்காக வருத்தம் தெரிவித்தது. சீனாவின் பெய்ஜிங்கில் அமெரிக்க தூதரகத்தின் முன்னர் இதற்காக மக்கள் கூடிநின்று போராட்டம் நடத்தினர். ஷி, பெல்கிரேடிற்கு செல்வது பொருளாதார ரீதியான காரணத்தால்தான். இப்படி செல்வதன் மூலம் அமெரிக்கா, உலகளவிலான விதிமுறைப்படி நடந்துகொள்கிறதா என கேள்வியை எழுப்ப முடியும். பிறநாடுகளில் நேட்டோ படையின் தலையீடு பற்றிய கேள்வியை உருவாக்க முடியும் என்றார் ஐரோப்பிய யூனியனின் ஆசியா திட்ட இயக்குநரான ஜான்கா ஆர்டெல். 


அமெரிக்கா தனது பொருளாதார பலத்தை வைத்து உலக நாடுகளின் தலைவராக நினைத்து செயல்படுகிறது. சமீப காலங்களில் வலிமையான பொருளாதாரம் கொண்ட நாடாக வளர்ந்து வரும் சீனா, அந்த அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. அதோடு போட்டியிட்டு வருகிறது. ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவின் தலைவர் மனநிலையைக் கொண்டது அல்ல என்றார் சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள சர்வதேச வணிக, பொருளாதார பல்கலைக்கழகத்தின் வணிக கழகத்தின் துறைத்தலைவரான டு ஷின்குவான். 


ஐரோப்பிய யூனியன் சீனாவை பொருளாதார வளர்ச்சியில் போட்டியாளராக கருதுகிறது. அதேசமயம், வணிக கூட்டாளி, தொழில்ரீதியாக எதிரி என மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளது. இதை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி சுட்டிக்காட்டி, நீங்கள் காரில் செல்லும்போது, சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தால்தான் முன்னே செல்லமுடியும். ஒரே நேரத்தில் பச்சை, மஞ்சள், சிவப்பு என மூன்று விளக்குகளும் எரிந்தால் எப்படி பயணிப்பீர்கள்?  என்று வினவினார். சீன அதிபர், ஐரோப்பாவிற்கு செல்வது பச்சை விளக்கை எரியச்செய்யத்தான். 


ஐரோப்பிய யூனியனுக்கு சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக்கொள்ளும் ஆர்வம் உள்ளது. ஆனால் அதேசமயம் அதன் தொழில்துறை சீனாவில் நசிந்துவிடுமோ என்ற பயமும், பாதுகாப்பு சார்ந்த அச்சமும் உள்ளது. அதனால்தான் சீனா விவகாரத்தில் அதனால் தெளிவாக முடிவெடுக்க முடியவில்லை. 


பிரான்ஸ் அதிபர் மேக்ரான், அமெரிக்கா, சீனா பனிப்போர் விவகாரத்தில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அவர் ஐரோப்பா அமெரிக்காவை சார்ந்து இருக்காமல் தனித்த சக்தியாக உருவாக வேண்டுமென நினைக்கிறார். அதை வெளிக்காட்டும்படி, ஐரோப்பா அமெரிக்காவின் கையில் கையாளும் பாத்திரமாக இருக்காது என்று கூறினார். மேக்ரான், அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் பயணிக்க நினைக்கிறார். ஆனால் அது எந்தளவு சாத்தியம் என எதிர்காலத்தில் தெரியவரும். 


தற்போதைக்கு பிரான்சின் நிலைப்பாடு சீனாவுக்கு ஆதரவாக உள்ளது. எனவே, பிரான்ஸ் பற்றி ஆதரவான கருத்துகள் சீன நாளிதழ்களில் வெளியாகி வருகிறது. செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் சீன நிறைய முதலீடுகளை செய்துள்ளது. எனவே, இந்த நாடுகள் சீனாவைப் பற்றி ஐரோப்பிய யூனியனில் எந்த புகார்களையும் கூறப் போவதில்லை. 


2019ஆம் ஆண்டு சீன அதிபர் ஷி ஜின்பிங் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்தார். அன்றைய காலத்தை விட இன்று அதன் வணிகம் பதினைந்து சதவீதம் அதிகரித்துள்ளது. டாலர் அளவில் ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரம் சீனாவை விட பெரிதாக இல்லை. இதை டாலர் அளவில் கணக்கு வைத்து புரிந்துகொள்ளவேண்டும். 


கடந்த ஆண்டு ஐரோப்பிய யூனியனில் வழக்கு ஒன்று பதியப்பட்டது. ஜெர்மன் மின்வாகனங்கள், சீனாவில் தயாரிக்கப்பட அதிகளவு மானியம் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. அந்த வழக்கின் முடிவு விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. ஃபோக்ஸ் வேகன் நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் பாதி, சீனாவில் தயாரிக்கும் மின்வாகனங்களிலிருந்துதான் கிடைக்கிறது. இந்த வழக்கின் முடிவு ஜெர்மனி, சீனா உறவை பாதிக்க கூடியதாக மாறியுள்ளது. வணிகத்தைப் பொறுத்தவரை ஐரோப்பிய யூனியன் அதிக வரியை விதித்தால், சீனாவில் இருந்து வாகனங்களை தயாரித்து ஏற்றுமதி செய்வது கடினமானதாக மாறிவிடும். 


ஐஇ




கருத்துகள்