வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டியதிருக்கிறது!
jenson huang
nvidia ceo
வயது 61 என அவரே சொன்னால்தான் தெரிகிறது. கறுப்பு ஜெர்கினும், ஷூக்களுமாக உற்சாகமாக பேசுகிறார். அவரோடு பேசும்போது அவரை நாம் நேர்காணல் செய்கிறோமா அல்லது அவர் நம்மைப் பற்றி விசாரிக்கிறாரா என்று கூட தெரியவில்லை. அந்தளவு பேச்சில் பல்வேறு விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்கிறார். ஏஐ சிப்களை உருவாக்கி வரும் என்விடியா முக்கியமான டெக் நிறுவனங்களில் ஒன்று. கூகுள், அமேசான், மெட்டா, ஏஎம்டி ஆகிய நிறுவனங்களுக்கு கடும்போட்டியை சந்தையில் அளித்து வருகிறது. வாரத்திற்கு ஏழு நாட்களும் வேலை செய்யும் இயக்குநர், எந்த மேடையிலும் சோர்ந்து அமர்ந்திருந்தது இல்லை. அவரிடம் பேசினோம்.
நீங்கள் பத்திரிகையாளர் ஆக விரும்பினீர்களா?
ஒருகாலத்தில் அப்படி நினைத்தேன்.
என்ன காரணத்திற்காக?
அடோப்பின் நிறுவனர் சாந்தனு நாராயண், நான் மதிக்கும் முக்கியமான வணிக தலைவர்களில் ஒருவர். அவர் பத்திரிகையாளராள ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். ஏனெனில், அந்த வேலை வழியாக கதைகளை சொல்ல விரும்பினார்.
வணிக்கத்திற்கு கதை சொல்வது முக்கியம் என்று கூறவருகிறீர்களா?
ஆமாம், நிறுவனத்தின் நிலைப்பாடு, கலாசார உருவாக்கம் ஆகியவை கதை சொல்லல்தான்.
அமேசான் தொடங்கப்படுவதற்கு ஓராண்டு முன்னர்தான் என்விடியா தொடங்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனத்தை விட என்விடியா சிறப்பாக வளர்ந்துள்ளது. எப்படி?
நான் தினசரி தூங்கி எழும்போது, அதுதான் எனக்கு முதல் நாள் என்பதுபோல நினைத்து வேலைகளை செய்யத் தொடங்குவேன். அதனால்தான், என்விடியாவின் முயற்சிகள் பலவும் புதிதாக இதுவரை செய்யாத ஒன்றாக இருக்கிறது. இதன் இன்னொருபக்கம், செய்யும் விஷயங்கள் எப்போது வேண்டுமானாலும் தோற்றுப்போக வாய்ப்புள்ளது. இப்போது கூட புதிய தயாரிப்பு ஒன்றைப் பற்றி பேசியிருக்கிறோம். அது எப்படி வரும் என தெரியவில்லை.
புதிய தயாரிப்பு பற்றி கூறுங்களேன்.
ஏஐ தொழிற்சாலை என்று கூறும் தகவல் மையங்களை உருவாக்கி வருகிறோம். இதன் வழியாக ஒருவர் தனது கணினி கோப்புகளை சேமித்து வைத்து எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். நாங்கள் இதற்கு பல்லாண்டுகளாக உழைத்து வருகிறோம். இப்போதுதான் விற்க கூடிய தயாரிப்பாக மாறி வந்திருக்கிறது. இதற்கு இன்னும் நாங்கள் பெயர் வைக்கவில்லை. எதிர்காலத்தில் கார் தயாரிப்பு நிறுவனங்கள், சில்லறை பொருட்கள் விற்பனை நிறுவனங்கள் கூட மேக கணிய தயாரிப்பை உருவாக்கிக்கொள்ளும். இப்போது நாங்கள் சொல்வதை எலன் மஸ்க் ஏற்கனவே செய்துவிட்டார். அவர் தொழில்துறையில் பலருக்கும் முன்னரே யோசித்து எதிர்காலத்திற்கு ஏற்ப விஷயங்களை செய்து வருகிறார்.
என்விடியாவை உருவாக்குவதற்கான காரணம் என்ன?
தொடக்க காலத்தில் முப்பது முதல் நாற்பது அதிகாரிகள் என்னிடம் தங்களது செயல்பாடு, முடிவு பற்றி கூறுவார்கள். நியாண்டர்தால் காலத்தில் நவீன உலகு போல செய்தி பரிமாற வசதிகள் இல்லை. இன்று நிறைய வசதிகள் வந்துவிட்டன. மேலிருந்து கீழாக செய்திகளை பரிமாறும் முறை அவசியம் இல்லை. மூரின் இரட்டையாதல் விதிப்படி நவீன தொழில்நுட்பங்கள் ஆண்டுதோறும் மாறி வருகின்றன. வேகமாகி வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் ஏஐ மூலம் நாம் நிறைய மாற்றங்களை எதிர்கொண்டுள்ளோம்.
இஸ்ரேலைச் சேர்ந்த மெலானாக்ஸை கையகப்படுத்தியது புத்திசாலித்தனமாக முடிவு என்று கூறுகிறார்களே?
அந்த நிறுவனத்தை கையகப்படுத்திய செயற்கை நுண்ணறிவு தொடர்பான நெட்வொர்க்கை அமைக்கத்தான். அதன் மூலம் ஏஐ சூப்பர் கணினியை உருவாக்கலாம். வலிமையான நெட்வொர்க் பின்னல் என்விடியாவின் வளர்ச்சிக்கு உதவும்.
ஏஐ ஸ்டார்ட்அப்கள் முப்பதிற்கும் மேலாக முதலீடு செய்திருக்கிறீர்கள். என்ன காரணம்?
அவர்கள் செய்யும் செயல்பாடுகள் திருப்தியாக இருக்கவே, அந்த நிறுவனங்களில் முதலீடு செய்தோம். உலகின் சிறப்பான புத்திசாலிகள் அந்த நிறுவனங்களில் உள்ளார்கள். நாங்கள் அவர்களின் திறமைக்கு உத்தரவாதம் அளிக்க தேவையில்லை. அவர்களோடு இணைந்து பணியாற்ற எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம்
சீனாவின் போட்டியை எப்படி பார்க்கிறீ்ர்கள்?
அவர்கள் தொழில்நுட்பத்தில் சிறப்பாக போட்டியிட்டு வருகிறார்கள். அரசு பல்வேறு வரம்புகளை வைத்திருப்பதால், தொழில்நுட்பத்தை எளிதாக அணுகமுடியாத சூழலிலும் அவர்கள் சாதிக்கிறார்கள். ஹூவாய் நிறுவனம், புதிய நானோ சிப்பை உருவாக்கி சாதித்தது. கட்டுப்பாடுகள், தடைகள் இருந்தாலும் பெரிய அளவிலான கணினி அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறார்கள்.
என்விடியா, சீனாவிற்கு சிப்களை விற்க ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது அல்லவா?
இல்லை அது தடை அல்ல. ஏற்றுமதிக்கான சில கட்டுப்பாடுகள் அவ்வளவே. அதற்கு ஏற்ப நாங்கள் பொருட்களை மாற்றி விற்பனை செய்து வருகிறோம்.
நீங்கள் இணையத்தில் சாட்ஜிபிடி அல்லது பார்ட் எதை பயன்படுத்துகிறீர்கள்?
பர்பிளெக்சிட்டி, சாட்ஜிபிடி என இரண்டையும் பயன்படுத்தி வருகிறேன். இரண்டுமே நன்றாக இருக்கிறது. கணினி உதவியுடன் மருந்துகளை கண்டுபிடிப்பது பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. நான் இந்த செய்திகளை துல்லியமாக தெரிந்துகொள்ள ஏஐ மாடல்களைப் பயன்படுத்துகிறேன்.
வெயிட் லிப்டிங் செய்பவர் என கேள்விப்பட்டேன் உண்மையா?
நான் ஒரு சோம்பேறி. புஷ் அப் நாற்பது செய்யலாம் என நினைப்பேன். சில நிமிடங்கள் கூட செய்ய மாட்டேன். பல் துலக்கும்போது ஸ்குவாட் பயிற்சி மட்டும் செய்து வருகிறேன்.
என்விடியாவை வெற்றிகரமாக உருவாக்க என்ன தியாகங்களை செய்திருக்கிறீர்கள்?
தொழிலதிபர்களும், தொழில்முனைவோர்களுக்கும் தங்களது கனவின் மீது நம்பிக்கை இருக்கும். ஆனால் அவர்களோடு உள்ளவர்களுக்கு அதே நம்பிக்கை இருக்காது. பாதுகாப்பின்மை, வலி, வேதனை ஆகியவற்றை அவரேதான் சுமந்து திரியவேண்டும். வெற்றி பெற்றால் நல்லது. தோல்வி அடைந்தால் அது பகிரங்கமானதாக மாறி அவமானப்படும்படி மாறிவிடும். நான் நிறுவனத்திற்காக கடுமையாக உழைக்கிறேன். ஆனால் அதையெல்லாம் யாரும் இங்கு கவனிப்பதில்லை. வெற்றி மதிக்கத்தக்கதாக உள்ளது. தடைக்கற்களாக வரும் தோல்வியின்போது அதை நீங்கள்தான் உங்கள் தோளில் தன்னந்தனியாக சுமக்கவேண்டும்.
வயர்ட் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக