ஏஐ மூலம் நோயாளிகளின் நோய்களைக் கண்டறிவது சிறப்பானதுதான்!

 










எரிக் டோபல், இதயவியல் மருத்துவர். இவர், டீப் மெடிசின் - ஹவ் ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் கேன் மேக் ஹெல்த்கேர் ஹியூமன் அகெய்ன் என்ற நூலை எழுதியிருக்கிறார். ஏஐ, மருத்துவர்களின் வேலையை மிச்சமாக்குவதோடு, நோயாளிகளுக்கு தேவையான தொடக்க கட்ட ஆலோசனைகளை கொடுக்கும் என நம்புகிறார். அவரிடம் பேசினோம். 


மருத்துவர், நோயாளி ஆகியோருக்கு இடையிலான உரையாடலை ஏஐ பதிவு செய்யத் தொடங்கிவிட்டது. உரையாடலை சிறு குறிப்பாக மாற்றி வருகிறது. மருத்துவ சிகிச்சையில் இது மாற்றத்தை ஏற்படுத்துமா?


மருத்துவர்கள் இதற்கு முன்னர் நோயாளி கூறும் பல்வேறு தகவல்களை கணினியில் கீபோர்டு வழியாக தட்டச்சு செய்யவேண்டியிருந்தது. ஆனால், இப்போது அந்த வேலை இல்லை. இதனால் மருத்துவ சிகிச்சையின் தரம் உயர வாய்ப்புள்ளது. நோயாளிகள் கூறுவதை ஏஐ சிறப்பாக மாற்றி குறிப்பாக கொடுக்கிறது. இதை முன்னர் மருத்துவர்கள் எழுதியதோடு ஒப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. அமெரிக்க மருத்துவமனைகளில் ஏஐயை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். 


மருத்துவர், நோயாளியின் உரையாடலில் என்னென்ன விஷயங்கள் இடம்பெறும்?


அனைத்து விதமான சிகிச்சை பற்றிய விஷயங்களும்தான். மருத்துவம், அறுவை சிகிச்சை, மருந்துகள், செய்யவேண்டிய மருத்துவ சோதனைகள் அனைத்துமே ஏஐயால் பதிவு செய்யப்படுகிறது. இதைத்தான் குறிப்பாக மாற்றுகிறோம். 


நோயைக் கண்டறிய சாட்ஜிபிடியை பயன்படுத்துகிறீர்களா?


நோயின் தொடக்க காலத்தை அறிய சாட் ஜிபிடியைப் பயன்படுத்துகிறேன். ஒரு பெண்மணியை சந்தித்தபோது அவருக்கு கொரோனா இருக்கிறது என்று கூறினார். அவரது அறிகுறிகளை சாட்ஜிபிடியில் உள்ளீடு செய்தபோது லிம்பிக் என்செபாலிடிஸ் என்ற நோய் இருப்பது தெரிய வந்தது. உடனே அவருக்கு சிகிச்சையை தொடங்கியதில், குணமானார். அதேபோல, பல மருத்துவர்களிடம் காட்டியும் சிறுவன் ஒருவனுக்கு முதுகெலும்பில் உள்ள ஒரு பிரச்னையை அடையாளம் காண முடியவில்லை. அறிகுறிகளை ஏஐயில் உள்ளிட்டபோது, நோயை அறிந்து வேகமாக சிகிச்சை செய்ய முடிந்தது. 


நீங்கள் சாட்ஜிபிடியில் நோயை கண்டுபிடிக்க முயன்றிருக்கிறீர்களா?


அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தவில்லை. சிக்கலான நோய்களுக்கு மட்டும் அதை பயன்படுத்தியிருக்கிறேன். வேடிக்கையாக சில நோய்களுக்கு பயன்படுத்தியதில் பயன்கள் தெரிந்தன. 


ஆனால் இப்படி செய்வது ஆபத்தானதில்லையா? சாட்ஜிபிடி தவறான பதில்களைக் கொடுத்தால் என்னாகும்?

மக்கள் இன்று தங்கள் நோயைப் பற்றிய மிகப்பெரிய கற்பனையுடன்தான் மருத்துவரை சந்திக்க வருகிறார்கள். மருத்துவரை சந்திக்கும் முன்னரே இணையத்தில் நோய் அறிகுறிகளை உள்ளிட்டு அந்த பதில்களை படித்துவிட்டு ஏராளமான கற்பனைகளை வளர்த்துக்கொண்டு கனவுகளை உருவாக்கிக்கொண்டு வருகிறார்கள். அப்போது அது தவறில்லையா? நோயைப் பற்றிய அறிகுறிகளை உள்ளிட்டு பல்வேறு கருத்துகளை தேடுவதும் பெறுவதும் தவறில்லை. சாட்ஜிபிடியும் தவறு செய்யும் என்பதை ஏற்கிறேன். ஆனால் இணையத்தில் இப்படி கருத்துகளை இலவசமாக பெறுவது நல்லதுதானே?


நீங்கள் பயிற்சியின்போது ஏஐயைப் பயன்படுத்துகிறீ்களா?


ஸ்மார்ட்போன் அல்ட்ரா சவுண்டைப் பயன்படுத்துகிறேன். இதில் சில நிமிடங்களில் நோயாளியின் நிலை பற்றி அறிந்துகொள்ளலாம். நோயாளியைச் சந்திக்கும்போது அவருக்கும் எனது போனில் உள்ள தகவல்களைக் காட்டி விளக்குகிறேன். இம்முறை எளிதாக உள்ளது. ஒருமுறை சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி வயிறு வலித்தபோது எனக்கான அல்ட்ராசவுண்ட் சோதனையை நானாகவே செய்துகொண்டு முடிவை சிகிச்சை மருத்துவரிடம் சொன்னேன். ஆனால் அவர்கள் அதை நம்பவில்லை. இறுதியாக சோதனைகளின் இறுதியில் நான் சொன்னதுதான் சரியாக இருந்தது. ஏஐயை நாம் எப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி சோதனைகளை செய்கிறோம் என்பதே இதில் முக்கியம்.  இன்று நோயாளியின் படுக்கையறையில் ஐசியூ அளவிலான சோதனைகளை ஏஐ மூலமே செய்துவிட முடியும். 


மனிதநேயத்தை மருத்துவத்தில் ஏஐதான் கொண்டு வரும் என கூறுகிறீர்கள். அதைப்பற்றி விளக்குங்களேன்.


இதில் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு. நோயாளிகள் ஏஐயைப் பயன்படுத்தி தானாகவே தங்களை சோதித்துக்கொள்ளலாம். அது சிலருக்கு பிடித்தமானதாக இருக்காது. மருத்துவர்கள், தாங்கள் அதிக கவனம் தேடுகிற நோயாளிகளுக்கு நேரத்தை செலவிடலாம். நேரம் வீணாகாது. இப்போது நோயாளிகள் கூறுவதை மருத்துவர்கள் காதுகொடுத்து கேட்பதில்லை. வேலை நெருக்கடி அதிகமாகி வருகிறது. நோயாளி தனது அறிகுறிகளை கூறும்போது மருத்துவர் கணினியில் அதை தட்டச்சு செய்துகொண்டிருப்பார். இப்போது தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. அதை பயன்படுத்திக்கொண்டால் நோயாளிக்கும் மருத்துவருக்கும் லாபம்தான். 


என்ன கூற வருகிறீர்கள்?


இன்று மருத்துவர்கள் அதிக நோயாளியைப் பார்த்து அதிக பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். ஒரு நோயாளிக்கு ஏழு நிமிடங்கள்தான் ஒதுக்குகிறார்கள். தேவையான நோயாளிக்கு கூட நேரம் ஒதுக்க முடிவதில்லை. இது மனிதநேயமான செயல் அல்ல. நான் சிக்கலான நோய் உள்ள நோயாளிக்கு ஒரு மணிநேரத்திற்கு மேல் நேரம் ஒதுக்கி பிரச்னைகளை கேட்டு சிகிச்சையளித்தேன். அவருக்கு நான் நல்ல மருத்துவர், தனக்கு துணையாக நிற்பார் என்ற நம்பிக்கை தோன்றிவிட்டது. இதைத்தான் மருத்துவர்கள் நோயாளிக்கு தரவேண்டும். நேரத்தை வீண் செய்யக்கூடாது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆக்கப்பூர்வமாக வேலைகளை செய்யவேண்டும். அது நல்ல பயன்களையே தரும். 


டைம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்