குடும்பத்தை அழித்தவர்களை நிதானமாக துப்பறிந்து கொல்ல முயலும் நாயகன்!
Decline c drama 7 episodes சீன தொடர் சர்வ சாதாரணமாக 24, 35 என எபிசோடுகளை இழுத்துவிட்டு பார்வையாளர்களை கஷ்டப்படுத்துவது வழக்கம். ஆனால், இப்போது சில தொடர்கள் அதன் மையப்பொருட்களை பொறுத்து எபிசோடுகளை சுருக்கி வருகிறார்கள். கிடைக்கும் பயனாக, நமக்கு டேட்டா சற்று மிச்சமாகிறது. கதையை, துண்டு துண்டாக கூறி முக்கியமான முழுக்கதையை ஒருவழியாக இறுதியாக சொல்லி முடிக்கிறார்கள். நாயகன் ஒரு துப்பறிவாளன். நன்றாக வாழ்ந்து அழிந்துபோன குடும்பத்தின் வாரிசு. சீன நகரங்களில் நடக்கும் அமானுஷ்ய கொலைகளை ஆராய்ந்து குற்றங்களைக் கண்டுபிடிப்பதே அவனது வேலை. எதற்காக இதை செய்கிறான் என்பது அவனது குடும்பம் படுகொலையான விவகாரம் சம்பந்தப்பட்டது. கதையின் இடையே நாயகன் தனது கடந்தகாலம் பற்றி அவனது தற்காப்புக்கலை தெரிந்த நண்பனிடம் கூறுகிறான். அவன் அந்தளவு நெருக்கமான நண்பனா என்று கேட்டால், அதற்கு பதில் சொல்வது கடினம். ஒரு நாடக குழு நகரத்திற்கு வருகிறது. அதில் உள்ள பதினொரு பேர்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். இரண்டுபேர் மட்டும் காணவில்லை. இதன் பின்னாலுள்ள மர்மத்தை நாயகன் சூ சென்க்ஸி கண்டுபிடிக்கிறா...