இடுகைகள்

பி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிரிப்டோகரன்சியில் சம்பளம் வாங்கும் மெஸ்ஸி!

படம்
  பார்சிலோனா கிளப்பிலிருந்து கண்ணீர் மல்க வெளியேறினாலும் தற்போது கிரிப்டோகரன்சியில் சம்பளம் வாங்கி ஆசுவாசமாகியிருக்கிறார்  கால்பந்து வீரர் மெஸ்ஸி. பிரெஞ்சு கிளப் ஒன்றுக்கு இரண்டு ஆண்டுகள் சம்பளத்தில் ஒப்பந்தமாகியவர், தனது சம்பளத்தில் ஒருபகுதியை ஃபேன் டோக்கனாக வாங்கியுள்ளார்.  பேன் டோக்கன் என்பதை நான் ஃபங்கியபிள் டோக்கன் என அழைக்கின்றனர். புரியும்படி சொன்னால் இணையத்தில் பதிவேடுகளில் உள்ள மாற்ற முடியாத மதிப்பு கொண்ட சொத்து என்று வைத்துக்கொள்ளலாம். பிட்காயினை எப்படி கிரிப்டோகரன்சி என்று சொல்கிறார்களோ அதேபோலத்தான் இதுவும். இதனை அவர் பின்னாளில் பணமாக மாற்றிக்கொள்ளலாம். அல்லது அந்த டோக்கன்களை பயன்படுத்தி வேறு பொருட்களைக் கூட வாங்கலாம்.  கிரிப்டோ டோக்கன்களை யாராவது வாங்குகிறார்களா என்றால் அதற்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.இவர்கள் பணம் கொடுத்து இந்த டோக்கன்களை வாங்குகிறார்கள். இதைப் பயன்படுத்தி ஆக்மென்ட் விளையாட்டுகளை இணையத்தில் விளையாடலாம். கிளப்புகளில் எடுக்கும் சில முடிவுகளுக்கு வாக்களிக்க கூட இந்த டோக்கன்களை பயன்படுத்தும் வசதி உள்ளது. ஃபேன் டோக்கன்களை சோசியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வழங்கு

டைப் ஏ ஆளா நீங்கள்?

படம்
டைப் ஏ ஆளா நீங்கள் ? பொறுமையின்மை , கோபம் , ஆக்ரோஷம் , நேரந்தவறாமை , வேகம் ஆகியவை கொண்டவர்கள் டைப் ஏ ஆட்கள் எனவும் , நிதானமாக ரிலாக்ஸாக வேலை செய்பவர்களை டைப் பி எனவும் குறிப்பிடுகிறார்கள் . எப்படி வந்தது இந்த டைப் ஏ சொற்கள் ? 1959 ஆம் ஆண்டு மேயர் ஃப்ரீட்மன் மற்றும் ரே ரோஸ்மன் ஆகியோரின் ஆராய்ச்சி விளைவாக கடுமையான போட்டியாளர் , நிதானமற்ற , செயல்திறமை கொண்டவர்களுக்கு ஏழு மடங்கு பிறரைவிட இதயநோய் தாக்கும் என கண்டறிந்து அத்தகையோரை டைப் ஏ என மருத்துவ வட்டாரம் குறிப்பிடத்தொடங்கியது . மேற்கண்ட ஆராய்ச்சியாளர்கள் இந்த குணநலன்களைப் பற்றி Type A Behavior and Your Heart (1974)   என்ற நூலை எழுதினர் . பின்னரே மக்கள் மத்தியில் குணநலன்களைப் பற்றிய டைப் ஏ , பி சொற்கள் புழங்கத் தொடங்கின . இந்த ஆராய்ச்சியின் தொடக்கம் இருவரின் கிளினிக்கில் இருக்கைகளை பழுதுபார்க்கும்போது தொடங்கியது . சேர்களின் விளிம்பு மட்டும் அதிகம் சேதமுற்றிருந்தன . டாக்டர் தன்னை விரைவில் கூப்பிடுவார் என சீட்டின் நுனியில்  பதட்டமாக  க