இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்வியின் ஒளிக்கீற்று

  கல்வியின் ஒளிக்கீற்று அசாம் பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தில் மக்களின் பங்களிப்போடு செயல்பட்டுவரும் கல்விக்கூடம் இலவச கல்வியை 500 குழந்தைகளுக்கு வழங்கிவருகிறது. ப்ரசாந்தா மஜூம்தார் தமிழில்: வின்சென்ட் காபோ 12 ஆண்டுகளுக்கு முன்பு அசாம் - மேகாலயா எல்லையிலுள்ள பமோகி எனும் பழங்குடிமக்கள் வாழும் கிராமத்தில், 27 வயதான அறிவியல் பட்டதாரியான உத்தம் தெரோன் தம் மக்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தை கூறியபோது, அவரது நண்பர்களின் கேலிச்சிரிப்பில் கிராமமே அதிர்ந்தது. தன் எண்ணத்தில் உறுதியாக இருந்த தெரோன் கைவிடப்பட்ட மாட்டுக்கொட்டகை ஒன்றினை வகுப்பாகக்கொண்டு நான்கு மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்கத்தொடங்கினார். இன்று 500 க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகளிலிருந்து இளம்வயதினர் வரை தோராயமாக இவரது பரிஜித் அகாதெமி மூலம் 100% கல்வி அறிவினைப் பெற பெருமையோடு பயணித்துக்கொண்டிருக்கின்றனர். மாணவர்கள் மோகியிலிருந்து மட்டுமல்லாமல் அருகிலுள்ள பழங்குடி குக்கிராமங்களிலிருந்தும் தெரோன் பள்ளிக்கு கல்வி கற்க வருகிறார்கள். பள்ளியின் நோக்கம் குறித்து தெரோன் கூறுகையில், அடித்தட்டு மக்

நேர்காணல் ஜிதேந்தர் பார்க்கவா

     நேர்காணல் ஜிதேந்தர் பார்க்கவா ''ஸ்பைஸ் ஜெட் கிங்ஃபிஷரின் நிலையை சந்திக்காது என்று நம்புகிறேன்'' பொருளாதார சிக்கல்களால் ஸ்பைஸ்ஜெட் தள்ளாடி நிறுவனத்தை மூடும் விளிம்பிற்கு வந்துள்ளதை அரசிடம் தெரிவித்து உதவி கோரியுள்ளது. விமானத்துறை நிபுணரும், ஏர் இந்தியா முன்னாள் நிர்வாக அதிகாரியுமான திரு.ஜிதேந்தர் பார்க்கவா ஸ்பைஸ்ஜெட் என்ன தவறுகளைச்செய்தது? என்ன பாடங்களை வருங்காலத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் விளக்கமாகப்பேசுகிறார். ஸ்ரீதர் குமாரசுவாமி தமிழில்: அன்பரசு ஷண்முகம் 1.ஸ்பைஸ்ஜெட் வேகமாக ஆச்சர்யமூட்டும் விதத்தில் முதலீட்டாளரை தேடி அடையுமா? அல்லது நிறுவனம் விரைவில் மூடும் வாய்ப்புகள் உண்டா? ஸ்பைஸ்ஜெட் தற்போது சந்திக்கும் குழப்பங்கள் விமானத்துறை சார்ந்த நிபுணர்களுக்கு ஆச்சர்யம் தராது. இப்படியான நிலைமை வரும் என்று முன்பே அவர்கள் எதிர்பார்த்திருக்கக் கூடும். சில மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கைகளை பலர் கூறினாலும், விமானநிர்வாகம் அக்கருத்துக்களை புறந்தள்ளி, அக்கருத்துக்களை கூறியவர்களை நோக்கி தவறான யூகம் என்றார்கள். மேலும் இந்த

வானவில்லை இதயங்களில் வரைபவர்

வானவில்லை இதயங்களில் வரைபவர் மதுபானி வகை ஓவியங்களின் மூலம் பெறும் தொகையினை ஆதரவற்றோருக்கும் ஏழைகளுக்கும் செலவழிக்கிறார் மும்பையைச்சேர்ந்த அதிகாரி ஒருவர்.                                                                                                   சம்ஹதி மொகபத்ரா                                                                                  தமிழில்: ஜோஸபின் கார்த்திக் நீண்ட பகல்பொழுதின் வேலையின் பின் வணிக அதிகாரியான அம்ரிதா மிஸ்ரா வண்ணக்குப்பிகளோடும், தூரிகைகளோடும் அமர்ந்து ஒரு மரத்தின் கீழ் நிற்கும் கிராமத்துப்பெண் சித்திரத்திற்கு இறுதி வடிவமைப்புகளை கொடுக்கிறார். வளமான தூரிகை இழுப்புகள், பிரகாசிக்கும் வண்ணங்கள் என மதுபாணி முறையில் அமைந்த அவரின் ஓவியம் மெல்ல உயிர்பெற்று எழுகிறது. 27 வயதாகும் அம்ரிதா தன் வேலைநேரம் போக கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஓவியம் தீட்டுவது கலையின் மீதான நேசம் மட்டும் காரணமல்ல.  வணிக நிறுவன நிர்வாகியாக மும்பையில் பணிபுரியும் அம்ரிதா தனது மதுபானி ஓவியங்களை சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களிலும் விற்பதன் மூலம் உதவி தேவைப்படுபவர்க

நூல்வெளி ஆக்கம் ஜோஸபின் விஸ்பர் சார்லி ட்ராம்ப்

நூல்வெளி ஆக்கம் ஜோஸபின் விஸ்பர்  சார்லி ட்ராம்ப் தொகுப்பாளர்கள் ஷான் ஜே கிறிஸ்டின் வர்னிகா விஷ்வதி மின்னூல் பதிப்புரிமை ஆரா பிரஸ் வெளியீட்டு உரிமை Komalimedai.blogspot.in கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 2015 ன் கீழ் வெளியிடப்படும் இந்நூலினை யாரும் படிக்கலாம், பகிரலாம், வேறுவகையில் பயன்படுத்தும்போது, பதிப்புரிமை நிறுவனங்களை குறிப்பிடவேண்டும்.   1 இது யாருடைய வகுப்பறை இரா.நடராசன் பாரதி புத்தகாலயம் இந்த நூல் ஆசிரியர்களுக்கானது என்பதை முதலிலேயே கூறிவிடவேண்டிய அவசியம் உள்ளது. படித்துவிட்டு தூக்க மருந்தாக பயன்படுகிறது என்று கூறக்கூடாது. இந்த நூலில் கல்வி எப்படி இருக்கவேண்டும், பள்ளி என்பது என்ன, இதற்கான சிந்தனைகளை தோற்றுவித்தவர்கள் யார், அதன் பின்னிருந்த நோக்கம் என்ன என்று தீவிரமாக வரலாற்றுத்தகவல்களோடு பேசுகிற கல்வி குறித்த முக்கியமான நூல் இது. குழந்தைகளுக்கு கருணை போல ஒவ்வொரு ஆட்சியிலும் இடும் திட்டங்களுக்கெல்லாம் யுனிசெப், யுனெஸ்கோ உதவி செய்கிறது என்பது முக்கியமான தகவலாக உள்ளது.  பின்லாந்து கல

சேட்டன் பகத் 'இளைஞர்களின் இந்தியா' தமிழில் - வின்சென்ட் காபோ

     சேட்டன் பகத் 'இளைஞர்களின் இந்தியா' தமிழில் - வின்சென்ட் காபோ                         கவலை வேண்டாம் மகிழ்ச்சியாக இருப்போம் இது அவ்வளவு சிறப்பான செய்தியல்ல. நீல்சன் ஆய்வு ஒன்றின் மூலம் அதிக அளவு மன அழுத்தத்திற்கு உட்படுபவர்களில் இந்தியப் பெண்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். 87% விழுக்காடு பெண்கள் இதுபோல கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். வேலை செய்யும் சூழல் கொண்ட அமெரிக்காவில் கூட 53% விழுக்காடு பெண்கள்தான் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நம் பெண்களுக்களாக நாம் என்ன செய்யப்போகிறோம்? இந்தியப்பெண்கள் உலகிலேயே மிகவும் அழகானவர்கள். அம்மாவாக, அக்காவாக, மகளாக, தோழியாக, மனைவியாக நாம் அவர்களை விரும்புகிறோம். இவர்கள் இல்லாத வாழ்வை கற்பனை செய்து பார்க்க முடியுமா? உலகம் முழுவதும் ஏமாற்றம் கொண்ட, சீற்றமான, ஆணவம் கொண்ட ஆண்கள் உலகத்தினை நடத்திச்செல்ல காரணம் என்ன இருக்கிறது? அறை முழுக்க வியர்வை வாடையோடு, சாக்ஸ்கள் நிரம்பிக்கிடக்க, ஃப்ரிட்ஜினுள் சாப்பிட ஏதும் இருக்காது. பொழுதுபோக்கு

'புலிகளின் மீதானது மட்டுமல்ல எனது அக்கறை'' - வால்மிக் தாபர்

''புலிகளின் மீதானது மட்டுமல்ல எனது அக்கறை'' - வால்மிக் தாபர்                                                                     சஷி சன்னி தமிழில்: ரோஸலின் கார்த்திக் 1961 ஆம் ஆண்டு வால்மிக் தாபர் கார்பெட் தேசியப்பூங்காவில் முதன்முதலாக புலிகளைப்பார்க்கிறார். 40 ஆண்டுகளுக்குப்பிறகான இன்றைய தினத்தில் அந்தப்பயணம் ரசவாதத்தை தன்வாழ்வில் நிகழ்த்தியிருக்கிறது என்கிறார் அவர். ''வனவாழ்வு குறித்து ரசவாதம் போல என் மிச்ச வாழ்வை தொடர்வேன் என்று அப்போது எனக்குத்தெரியாது'' என்று கூறும் வால்மிக் தாபர் இந்தியாவின் முக்கியமான இயற்கையியலாளர் மற்றும் சூழல் பாதுகாப்பாளர் ஆவார். விலங்குகளையும், தாவரங்களையும் பாதுகாக்க முயற்சிக்கிறவன் என்று தன்னைப்பற்றி கூறிக்கொள்கிறார். வால்மிக் தாபர் எழுதியதும், தொகுத்ததுமாக தோராயமாக 25 புத்தகங்களையும் தாண்டுகிறது. பிபிசி நிறுவனத்திற்காக பல ஆவணப்படங்களை எடுத்துத் தந்திருக்கிறார். இதற்கான தொடக்கமாக, இந்தியாவில் அழியும் இயற்கை பாரம்பரியத்தை மாறி வரும் சூழலில் பாதிக்கப்படாமல் காப்பது குறித்த முயற்சிகள் இவை என்கிறார். இவரத

மின்னூல்,

படம்