'புலிகளின் மீதானது மட்டுமல்ல எனது அக்கறை'' - வால்மிக் தாபர்
''புலிகளின் மீதானது மட்டுமல்ல எனது அக்கறை''
- வால்மிக் தாபர்
சஷி சன்னி
தமிழில்: ரோஸலின் கார்த்திக்
மூன்றாவது பகுதியான வைல்ட் ஃபயர், இந்தியாவின் பாலூட்டிவகைகளைக் கொண்ட நேர்த்தியான புகைப்படத்தொகுப்பினைக்கொண்டுள்ளது. இதுவரை கண்டிராத பல்வேறு பாலூட்டி வகைகளின் புகைப்படங்களைக் கொண்டு விசாலமானதாக உருவாக்கப்பட்டுள்ளது.
- வால்மிக் தாபர்
சஷி சன்னி
தமிழில்: ரோஸலின் கார்த்திக்
1961 ஆம் ஆண்டு வால்மிக் தாபர் கார்பெட் தேசியப்பூங்காவில் முதன்முதலாக புலிகளைப்பார்க்கிறார். 40 ஆண்டுகளுக்குப்பிறகான இன்றைய தினத்தில் அந்தப்பயணம் ரசவாதத்தை தன்வாழ்வில் நிகழ்த்தியிருக்கிறது என்கிறார் அவர்.
''வனவாழ்வு குறித்து ரசவாதம் போல என் மிச்ச வாழ்வை தொடர்வேன் என்று அப்போது எனக்குத்தெரியாது'' என்று கூறும் வால்மிக் தாபர் இந்தியாவின் முக்கியமான இயற்கையியலாளர் மற்றும் சூழல் பாதுகாப்பாளர் ஆவார். விலங்குகளையும், தாவரங்களையும் பாதுகாக்க முயற்சிக்கிறவன் என்று தன்னைப்பற்றி கூறிக்கொள்கிறார். வால்மிக் தாபர் எழுதியதும், தொகுத்ததுமாக தோராயமாக 25 புத்தகங்களையும் தாண்டுகிறது. பிபிசி நிறுவனத்திற்காக பல ஆவணப்படங்களை எடுத்துத் தந்திருக்கிறார். இதற்கான தொடக்கமாக, இந்தியாவில் அழியும் இயற்கை பாரம்பரியத்தை மாறி வரும் சூழலில் பாதிக்கப்படாமல் காப்பது குறித்த முயற்சிகள் இவை என்கிறார். இவரது அண்மைய நூலான வைல்ட் ஃபயர் னை ஆலெப் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு வெளியான டைகர் ஃபயர் நூலின் வரிசையில் இது இரண்டாவது நூலாக வெளியாகிறது. இறுதியான நூலாக இந்த வரிசையில் விங்க்டு ஃபயர் எனும் இந்திய பறவைகள் குறித்த நூல் இந்த ஆண்டு வெளிவர இருக்கின்றது.
''எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும்போது எனது முதல் காடு பற்றிய அறிதல் தொடங்கியது. என் மாமா உ.பி வன அதிகாரி எனவே எங்களது கோடை விடுமுறை பெரும்பாலும் கார்பெட் தேசியப்பூங்காவில் தான் அமையும். பிறகு ஆவணப்பட இயக்குநராக ராந்தம்போரினை வந்தடைந்தபோது, அதுதான் என் கற்றல்களுக்கு மூலமாக அமைந்த இடம் என்று உணர்ந்தேன். அங்குதான் பதேசிங் ரத்தோர் எனும் எனும் புலிகளின் குரு மற்றும் நண்பரை சந்தித்தேன். இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அதற்கு காரணம் அவர் எனக்குள் என்ன விதைத்தாரோ அதுதான். அவரிடம் மறக்கமுடியாத தன்மை என்னவென்றால், திறந்த கைகளோடும், மனதோடும் என்னை வனப்பகுதிகளுக்குள் அழைத்துச்சென்றதும், தன் சிந்தனைகளோடு எனது கருத்துக்களையும் கேட்டு கூட்டிணைவான சிந்தனைகள் மற்றும் மேம்பாட்டு முறைகளை பகிர்ந்துகொள்வதுமாகும். அவரின் தகுதிகள் இன்று ஒரு சில வனத்துறை அதிகாரிகளிடம்தான் இருக்கக்கூடும். வனப்பாதுகாப்பு குறித்த ஆர்வம், திட்டம் ஆகியவற்றுடன் உள்ளவர்களை வரவேற்கும் தன்மைதான் அது. '' என்று தீவிரமாக கூறுகிறார் வால்மிக் தாபர்.
வைல்ட் ஃபயர் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. முதல்பகுதி தாட்ஸ் ஆஃப் எல்ஸ்வேர் பகுதி 21 ஆம் நூற்றாண்டு பாரம்பரிய பகுதிகளுக்கு வேகமான சுற்றுலா சென்று வந்த அனுபவம் தருகிறது.
இரண்டாவது பகுதியான 'வைல்ட்லைஃப் ஆஃப் க்ரோனிக்கல்' முதல்நூற்றாண்டு இந்தியாவின் விலங்குவகைகளைப் பட்டியலிடுகிறது. பெரும் ஊனுண்ணிகளையும், பெரும் தாவர உண்ணிகள், குறிப்பிடத்தக்க எண்ணிக்கை கொண்ட விலங்குகள், அரிதான ஆற்று டால்பின்கள், வௌவால், சுண்டெலி வகைகள் ஆகியவை பற்றியும் இதில் உள்ளன. இதில் பங்களித்துள்ளவர்கள் பயணிகள், வேட்டையாளர்கள்,எழுத்தாளர்கள், புகைப்படக்காரர்கள், இயற்கையியலாளர்,பெர்னியர், இஸபெல் சவோகி, ஜிம்கார்பெட், ஜார்ஜ் பிலினி எல்டர், இப்ன் பட்டுடா, பாபுர், அக்பர், ப்ரான்கொஸ் கென்னத் ஆண்டர்சன், எம். கிருஷ்ணன், இ.ஆர்.சி டேவிதார், பீட்டர் ஜாக்சன் மற்றும் ரஸ்கின் பாண்டு ஆகியோர் ஆவர்.
பதிப்பகத்திலுள்ள கலந்துரையாடல் அறையில் வால்மிக் தாபரைச் சந்தித்தேன். நன்கு பருத்த நீளமான தாடிகொண்டவரின் கண்களில் தீவிரத்தன்மையை பார்த்தேன். அவை புலிகளின் மீதான நேசத்தைக் கூறிக்கொண்டு இருந்தன. அவரின் இருப்பில் அறை சிறியதாகத் தோன்றியது. அவர் புலிகளோடு வெளிப்புறத்தில் வசிப்பதையே விரும்புகிறார் என்று தெளிவாக புரிந்தது. ''வனவாழ்வு குறித்த வசீகரம் கொண்ட இந்த நூலை எழுதி முடிக்க ஒரு ஆண்டு தேவைப்பட்டது. மக்கள் நான் புலி குறித்து மட்டும் கவனம் கொள்வதாக நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. புலி வனப்பகுதி செழிப்பாக இருந்தால் மட்டுமே அப்பகுதியில் வசிக்கும். இந்த புத்தகம் புலியின் அகவுலகம் பற்றியது. பல்வேறு அரசு சார்ந்த வனப்பாதுகாப்பு குழுக்களிடையே பணியாற்றிய வால்மிக் அதன் நோக்கம் பற்றி ஆர்வம் கொண்டாலும், அதன் செயல்பாடு குறித்த விமர்சனங்களை தீர்க்கமாக முன்வைக்க கூடியவராக இருந்தார். இன்று தன் தொண்டுநிறுவனமான ராந்தம்போர் பவுண்டேஷன் எனும் அமைப்பின் மூலம் இயற்கையினை பாதுகாக்கும் செயல்பாடுகளை முயற்சித்து வருகிறார் '' மிச்சமுள்ள வனத்தினை காப்பாற்றுவதற்கான நேரம் நமக்குள்ளதை இந்த புத்தகவரிசை ஆவணப்படுத்தியுள்ளது என்று விளக்குகிறார். மக்கள் வனத்தினை வரலாற்றின் வழியே காண்பது, விலங்குகளை உயிர்ப்போடு பாதுகாப்பது குறித்ததுமாகும். இந்தியாவின் வனங்கள் அற்புதமானவை. பிரமிக்க வைக்கும் 16 பருவநிலை சூழலிடங்களை தன்னிடம் கொண்டிருக்கிறது '' என்கிறார் வால்மிக் தாபர்.
திரைப்பட நடிகர் சஷி கபூரின் மகளான சன்ஜனா கபூரை மணந்தவருக்கு, 10 வயதில் ஹமூர் என்ற மகன் இருக்கிறார். ஆண்டிற்கு இரு மாதங்கள் ஆஃப்ரிகா, இந்தியாவிலுள்ள வனங்கள் குறித்த வாழ்வை கற்பிக்கிறார் வால்மிக் தாபர். வால்மிக் தாபரிற்கு தன் துறை அதிகம் பலர் பின்தொடராதது குறித்து வருத்தமிருக்கிறதா என்பதற்கு, ''நிலைமைகள் மாறுமா என்றால் அது கடவுளுக்குத்தான் தெரியும். நாம் செயல்பாடுகளை உறுதியோடு செய்வோம்.வனத்தின் குற்றத்தடுப்பு காவல்பிரிவு சரியான அளவில் துடிப்பாக செயல்படவில்லை. பல்வேறு சட்டங்கள் சற்றும் மேம்படுத்தப்படவில்லை. அரசியல்வாதிகள் வருகிறார்கள்; போகிறார்கள் தவிர இச்சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏதுமில்லை '' என்கிறார். பன்னாட்டு நிறுவனங்களை வனவளத்தினை பாதுகாப்பதில் ஊக்குவிக்க அல்லது பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும். சுனில்மிட்டல், முகேஷ் அம்பானி, ராஜ் சால்கோங்கர், ஹிமாத்தி கோத்தாரி ஆகியோர் வனப்பாதுகாப்பு குறித்த ஆர்வம் கொண்டவர்கள் என்றாலும் இதில் அரசு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார் வால்மிக் தாபர். '' வனவாழ்வு குறித்த அறிய ஆர்வமாக உள்ளே வருபவர்களை உபசரித்து ஊக்கப்படுத்தி வரவேற்க வேண்டும். ரத்தோர் என்னை தன் இடத்திற்கு அவ்வாறு வரவேற்றார். இன்று அதுபோல செய்ய யார் இருக்கிறார்கள்? '' என்று தீர்க்கமானமுறையில் பேசுகிறார் வால்மிக் தாபர்.
நன்றி: டெக்கன் கிரானிக்கல், 1.2.2015
கருத்துகள்
கருத்துரையிடுக