சேட்டன் பகத் 'இளைஞர்களின் இந்தியா' தமிழில் - வின்சென்ட் காபோ
சேட்டன் பகத் 'இளைஞர்களின் இந்தியா'
தமிழில் - வின்சென்ட் காபோ
கவலை வேண்டாம் மகிழ்ச்சியாக இருப்போம்
இது அவ்வளவு சிறப்பான செய்தியல்ல. நீல்சன் ஆய்வு ஒன்றின் மூலம் அதிக அளவு மன அழுத்தத்திற்கு உட்படுபவர்களில் இந்தியப் பெண்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். 87% விழுக்காடு பெண்கள் இதுபோல கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். வேலை செய்யும் சூழல் கொண்ட அமெரிக்காவில் கூட 53% விழுக்காடு பெண்கள்தான் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நம் பெண்களுக்களாக நாம் என்ன செய்யப்போகிறோம்? இந்தியப்பெண்கள் உலகிலேயே மிகவும் அழகானவர்கள். அம்மாவாக, அக்காவாக, மகளாக, தோழியாக, மனைவியாக நாம் அவர்களை விரும்புகிறோம். இவர்கள் இல்லாத வாழ்வை கற்பனை செய்து பார்க்க முடியுமா? உலகம் முழுவதும் ஏமாற்றம் கொண்ட, சீற்றமான, ஆணவம் கொண்ட ஆண்கள் உலகத்தினை நடத்திச்செல்ல காரணம் என்ன இருக்கிறது? அறை முழுக்க வியர்வை வாடையோடு, சாக்ஸ்கள் நிரம்பிக்கிடக்க, ஃப்ரிட்ஜினுள் சாப்பிட ஏதும் இருக்காது.
பொழுதுபோக்கு துறை மெல்ல இறக்கும். நடிகைகள் இல்லாத படங்களை யார் பார்க்க விரும்புவார்கள்?
குழந்தைகள் அலட்சியம் செய்யப்பட்டு பத்து வயதிற்குள்ளாக போதைப்பொருட்களுக்கு அடிமையாவார்கள் அல்லது மனநோயாளியாவார்கள். விரைவிலேயே உலகில் உள்ள பல்வேறு தலைவர்களும் தங்களின் இயல்பான குணத்தை இழந்து மூர்க்கமாகி, தங்களின் திறமைகளை, அறிவினை இழந்துவிடுவார்கள். விரைவில் பெண்களின் விவேகமான அறிவு இல்லாததினால் உலகம் அழிவை நோக்கி பயணிக்கும்.
சிறிது இந்தியர்களான நம்மை கவனிப்போம். ஆன்மிகம் தழைத்த தேசத்தினரான நாம் பெண்களை எப்படி மதிக்கிறோம் என்று பார்ப்போம். பெண்குழந்தைகளை பிறப்பதற்கு முன்பே கருவிலேயே அழிக்கிறோம், அவர்களின் குழந்தைப்பருவத்தில் அலட்சியப்படுத்துகிறோம், சித்திரவதை செய்கிறோம், தொந்தரவு செய்கிறோம், அவர்களை விற்கிறோம், வன்புணர்வு செய்கிறோம், மேலும் உச்சமாக கௌரவக்கொலை செய்கிறோம். இதுபோன்ற குற்றச்செயல்பாடுகளை செய்பவர்கள் குறிப்பிட்ட சதவீதம் கொண்டவர்களே.
மேலும், பெரும்பாலானவர்களை நாம் குறைந்த அளவிலான குற்றங்களில் ஈடுபடுகிறோம். பெண்களினை மதிப்பிட்டு அவர்களிடம் உள்ளதை விட அதிகமாக எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கான இடத்தினை தராது, அவர்களது தனித்தன்மையை அழிப்பதுமாக சூழல் உள்ளது. நினைத்துப்பாருங்கள் இதனையே ஒரு ஆணுக்கு ஏற்படுத்தும்போது, அவர்கள் மனஅழுத்தத்திலிருந்து மீள முடியுமா?
பரந்த் அளவில் இதனைப்பார்க்கும்போது, இது வெறும் பெண்கள் சார்ந்தது மட்டுமல்ல. இந்தியர்களான நாம் அதிகாரம் இல்லாத யாரையும் சுரண்டலுக்கு, சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறோம். இன்னொருபுறம் அதிகாரத்தில் இருப்பவர்களை உறிஞ்சி, சார்ந்து வாழ்கிறோம். ஊழல் செய்த அரசியல்வாதிகளை திரும்ப வாக்குகளை அளித்து வெற்றி பெறச்செய்து நம்மிடம் கொள்ளையடிக்க ஒப்புகொடுக்க சில்லறைத்தனமாக முயல்கிறோம். காரணம் அவர்கள் அதிகாரம் கொண்டுள்ளார்கள். நாம் அதிகாரத்தை விரும்புகிறோம். அது பெண்ணுக்கு நகர்ந்து வரும்போது, நாம் அவளையும் மரியாதையோடு, அக்கறையோடு பின்தொடர்வோம். தெய்வீகத்தன்மையோடு, பெண் அரசியல்வாதிகள், மூத்த தாய் குடும்பத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டிருக்கும் போது, அவர்கள் நமது அன்பையும் அக்கறையையும் உரித்தானவர்களாக இருக்கிறார்கள். யாராவது இதனை மறுக்க முடியுமா?
வர்க்கம் கடந்த வாழ்வு
பணம் செலவழித்து செய்யப்படும் நிகழ்ச்சிகளில் கூறப்படும் வளம், செழிப்பு சிறப்பானதல்ல
'அப்பா, இது என்ன பாம்பா?' என்று எனது ஐந்து வயதாகும் மகன் என்னைக்கேட்டபோது, டி.வியில் பணத்தில் செய்த பெரிய மாலை அணிந்துகொண்டிருந்த அரசியல்வாதி ஒருவரை பார்த்துக்கொண்டிருந்தான். அவனது கருத்து சமூகம் எதனை உயர்வாக முன்னிறுத்துகிறதோ அதனை முழுமையாக புரிந்துகொண்ட நிலையிலானதல்ல என்பது நிச்சயம்.
மனித ஏடிஎம் போல அரசியல்வாதி நின்றுகொண்டிருந்த இடத்தை பணக்கார இந்தியர்கள் தங்கள் செல்வத்தை வெளிக்காட்டிகொள்ள முயலும் முயற்சிகள் விரைவிலேயே பிடித்துவிடும் என்று நம்புகிறேன்.
பணம் ஒரு பாம்பு போல வெவ்வேறு களத்தினை சார்ந்து இருக்கிறது. செல்வம் கொழிக்கும் இந்த நாட்டினைச்சேர்ந்த மக்களில் சிலர் திருமணம் மற்றும் பிறந்த நாள் விழாக்களை நடத்துவதே எங்களிடம் பணம் இருக்கிறது என்று உலகிடம் உரக்க சொல்லுவதற்குத்தான். பணம் குறித்து உங்களது உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டினர், நாடோடிகள் ஆகியோர் என்ன நினைக்கிறார்கள்?
ஒரு பிறந்த நாள் விழாவுக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு நைக் ஷூக்கள் விடைதருதல் பரிசாக தரப்பட்டது என்று கேள்விப்பட்டேன். நான் கலந்துகொண்ட பிறந்த நாள் விழாக்களில் பெரிய சின்ட்ரெல்லா வண்டிகள் பார்முலா ஒன் கார் பந்தயத்தடம் போன்றவை நான்கு வயதானவர்களுக்கு ஏற்படுத்தி தருகிறார்கள்.
'தி பிக் ஃபேட் இண்டியன் வெட்டிங்' எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி செல்வச்செழிப்பான குடும்பங்கள் தொலைக்காட்சி குழுவினரை தங்கள் வீட்டுத் திருமணத்தை படம் பிடிக்க அனுமதித்து எடுக்கப்படும் நிகழ்ச்சியாகும். அதில் ஒரு பகுதியை பார்த்தபோது, திருமண நிகழ்வுகள் ஒருவாரம் தொடர்ந்து டெல்லி, ராஜஸ்தான், பலி ஆகிய இடங்களில் 500 விருந்தினர்களோடு நடைபெற்றது. இறுதியில் எல்லா திருமணங்களைப்போலவே பெண்ணும், பையனும் திருமணம் செய்துகொண்டார்கள்.
உலகளாவிய நாளிதழ் ஒன்றின் முதல்பக்க செய்தியாக, நொய்டாவிலுள்ள கிராமத்தைப் பற்றி வந்துள்ளது. விவசாயி ஒருவர் தன் நிலத்தை அதிக விலைக்கு விற்று, தனது மகனின் திருமணத்திற்கு ஹெலிகாப்டரை அக்கிராமத்திற்கு அழைத்து வந்தார் என்பதேயாகும்.
இந்த குணம் குறித்து ஆதரவளிக்கும் விதமான வாதங்கள் உள்ளன. ஒருவர்தான் சம்பாதிக்கிற பணத்தை என்ன வேண்டுமானாலும் செய்ய அவருக்கு உரிமையுண்டு. பணம் என்று வரும்போது இந்தியர்களான நாம் மகிழ்ச்சியாகிறோம். அதனால் ஒரு அரசியல்வாதி பணத்தினை மலைப்பாம்பு போல அல்லது யானை போல சூடிக்கொள்ளட்டும் இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை?
மேலும் இன்னொரு வகையில் இது சரியானதல்ல எனது குழந்தைகள் எனது செல்வத்தை வக்கிரமாக வெளிக்காட்டும் அடையாளமாக நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர்களது மூளையில் ஓடும் வாசகம் இதுதான்: வெற்றிபெற்றவர்கள் செய்வது இதுதான். வாழ்க்கையே இதுதான். நான் அவர்களிடம் கடுமையாக உழைக்கும்போது ஒருநாள் நான் பணம்பெறுவேன். முகம் முழுக்க பணத்தினால் நிரப்புவேன். பணத்தை செலவழிப்பது உலகிடம் என் வருகையை கூறும்.
செல்வச்செழிப்பு சுயகட்டுப்பாடு, அடக்கம், சூழல் அறிவு நிலத்தில் கால்பதித்து இருப்பது உள்ளிட்டவற்றை அழித்துவிடும். வெற்றிபெற்றவர்கள் இளைய தலைமுறையினரை எளிதாக கவருகிறார்கள். ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் எனக்குறிப்பிட்ட சிலர் என்றாலும், அதிக பணம் பெற்றிராதவர்கள் என்றாலும் சமூகத்திற்கான செயல்பாடுகளின் சிறந்த முன்மாதிரிகளாக குழந்தைகளுக்கு இருக்கிறார்கள். தேசத்தின் பணக்கார மனிதர்கள் தங்கள் குதிரைகளை நிறுத்திவைக்க வேண்டுகிறேன். அமைதியா இருங்கள். உங்களிடம் இருப்பது எங்களுக்குத்தெரியும். உங்களிடம் இருக்கும் பணத்தை வெளிக்காட்ட விரும்பினால், உங்களது இணையதளத்தில் வெளியிடுங்கள். ஆனால் அதனை தேவையில்லாமல் வெளியே தொங்கவிடாதீர்கள். நீங்கள் அதனைப்பெற்றிருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது. பத்திற்கு பத்து மார்க் உங்களுக்கு. சபாஷ்! எங்களை விட்டுவிடுங்கள்.
பணம் கொண்ட மனிதர்கள் அனைவரும் இதுபோன்றவர்களல்ல. வாரன் பஃபட் உலகிலேயே அதிக செல்வம் கொண்டவராவர். இவர், ஐந்து படுக்கையறைகள் கொண்ட இல்லத்தில் ஒமாகாவில் வசிக்கிறார். அமெரிக்க சமூகத்தில் மிகவும் மதிக்கப்படுகிறவரான இவர் தன் செல்வத்தை வெளிக்காட்டிக்கொண்டவர் அல்ல. சுயமாக சம்பாதித்தே கோடிகளை சம்பாதித்தவர்கள் சிலிக்கான் வேலியில் டீ ஷர்ட், ஜீன்ஸில் பார்க்கமுடியும். செல்வத்தை வெளிக்காட்டுவது என்பதைத்தாண்டி, அறியாமை என்பது செல்வம் செறிந்தவர்களிடம் இருக்கவேண்டியது அவசியமில்லை. கருணை என்பது புதிய கருத்தாக பணம் மற்றும் அதிகாரம் நிறைந்த இந்தியர்களிடம் கற்றுக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
இதன் அர்த்தம் வசதிகொண்டவர்கள் தமது சொகுசான வாழ்வை கைவிடவேண்டும் என்பதல்ல. மற்றமனிதர்கள் போல, குடிசையில் அவர்களால் உறுதியாக வாழ முடியாது. தனிப்பட்ட, பொது என செழிப்பிற்கு வேறுபாடுகள் உண்டு. அவர்கள் தங்களது உணவை தங்கத்தட்டில் சாப்பிடுவது, எவியன் நீரில் குளிப்பது என்பது அவர்களை திருப்தி செய்யக்கூடியதாக இருக்கலாம். ஆனால் செல்வம் பொதுவான தளத்திற்கு செல்வது குறித்து இருமுறை கவனமாக சிந்திக்க வேண்டும். அரசியல்வாதிகள் தம்மைச்சுற்றி கரன்சி நோட்டுக்களால் நிறைத்துக்கொண்டு உள்ளுக்குள் மகிழ்வது குறித்து அவர்களிடம் பேசுவது மிக கடினமான ஒன்று. அவர்கள் தங்களின் அறையில் 1000 ரூபாய் நோட்டினால் அலங்காரம் கூட செய்து கொள்வார்கள்(அதில் இருக்கும் காந்தியின் உருவம்தான் அலங்காரத்தில் நகைமுரணாக இருக்கும்) அவர்கள் மில்லியன் டாலர் பணத்தை மாலையாக அணிவதை பார்க்கும் குழந்தைகள் அனைத்து நல்ல குணங்களுக்கும் ஈடாக பணத்தை நினைத்து முகஸ்துதி பாடப்படும் அந்த மனிதருக்கு கைதட்டுவார்கள். இவர்கள் பெரும்பாலோர் அல்ல குறைவானர்கள்.
நமது குழந்தைகள் இதுபோன்ற பழக்கங்களை பின்தொடர நாம் அனுமதிக்கக்கூடாது. உண்மையான தலைவர்களை அவர்கள் பின்பற்றவேண்டும். தனித்திறமை, சமூகத்திற்கான உழைப்பு, மக்களுக்கு உதவும் தன்மை, கட்டுப்பாடு, அடக்கம், சமநிலை ஆகியவைதாம் அவர்களது பண்பாக இருக்கும். இவர்கள்தான் உண்மையிலேயே பணக்காரர்கள் ஆவர். அரசியல்வாதி அணியும் கொடூரமான மாலை பணமல்ல. ஆதரவில்லாத பெண் பணத்தினால் சிறைப்பட்டிருப்பது போல, அச்சுறுத்தி மெல்ல குரல்வளையை நெறிக்கும் மலைபாம்புதான் அது.
கருத்துகள்
கருத்துரையிடுக