இடுகைகள்

நேருவின் கதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விபத்தால் இந்து - நேருவின் கதை- சசி தரூர்

படம்
நேரு: தி இன்வென்ஷன் ஆஃப் இந்தியா சசி தரூர் பெங்குயின் புக்ஸ் ரூ.299 (அமேஸானில் 270) கல்வியால் ஆங்கிலேயர் கலாசாரத்தால் முஸ்லீம் விபத்தால் இந்து 1889 ஆம் ஆண்டு நேரு பிறப்பு முதல் 1964 ஆம் ஆண்டுவரை நீளும் நூல் இது. சசி தரூரின் பார்வையில் நீளும் சுயசரிதை, பிற சுய சரிதைநூல்களிலிருந்து எங்கு வேறுபடுகிறது. நேருவின் அரசியல் வாழ்க்கை, அதன் பிரச்னைகளைப் பற்றி பலரும் விவாதித்து உள்ளனர். அதேயளவு அவரின் தனிப்பட்ட வாழ்க்கை, எங்கேயும் விட்டுக்கொடுக்காத சோசலிச கொள்கை, பொருளாதாரக் கொள்கைகளில் அதன் விளைவு, தனிப்பட்ட அவரது குணம், போஸ், காந்தி, படேல், தாண்டன் ஆகியோரிடம் அவரின் உறவு ஆகியவற்றை வரலாற்று நிகழ்ச்சிகளோடு, விமர்சனங்களையும் கலந்து எழுதியுள்ளார் சசி தரூர். நேரு செய்த அடிப்படைக் கட்டமைப்பு சார்ந்த பணிகளைக் கூறும்போது உடனே எட்வினா மவுன்ட்பேட்டன், பத்மஜா நாயுடு ஆகியோருக்கு அவர் எழுதிய காதல் கடிதங்கள், உறவு ஆகியவற்றை எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் பேசுவார்கள். அதையும் தரூர் விட்டு வைக்காமல் எடுத்து எழுதியிருக்கிறார். அதோடு முக்கியமான பார்வை, நூல் 2003 ஆம் ஆண்டு வெளியா