இடுகைகள்

டயட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீருக்கு மாற்றாக பழச்சாறுகளை குடிக்கலாமா?

படம்
  தண்ணீர் குடிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறதா? நீரைப் பொறுத்தவரை ஆற்றுத்தண்ணீர், ஆழ்குழாய் தண்ணீர் என வேறுபட்ட சுவை கொண்ட நீரை குடித்திருப்பீர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் அக்வாஃபினா, கைஃண்ட்லி ஆகியவற்றை குடித்தாலும் அதன் பயன் ஒன்றுதான். நீங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் மயங்கி விழாமல் இருப்பீர்கள். உடலின் வளர்சிதைமாற்ற செயலுக்கு நீர் அவசியம். இதில் உள்ள கணக்கு பற்றி அறிந்திருப்பீர்கள். தினசரி எந்தளவு நீரை குடிப்பது? எட்டு கிளாஸ் குடியுங்கள், மூன்று அல்லது ஐந்து லிட்டர் குடியுங்கள் என்று பலர் வாய்க்கு வந்ததைக் கூறுவார்கள். உண்மையில் உடலுக்கு எந்தளவு நீர் தேவை என்பதை உடல்தான் தீர்மானிக்கும். தேவைப்படும்போது நீர் குடிக்கலாம்.. தவறில்லை. சில மருத்துவ இதழ்கள் சினிமா பிரபலங்களின் டயட் முறைகளை எழுதி மக்களை நிர்பந்தப்படுத்துகிறார்கள். உண்மையில் எது உண்மை, எதைப் பின்பற்றுவது? உடலுக்கு நீர்த்தேவை குறைவாக இருந்தால் தலைவலிக்கும்.,அடுத்து, செரிமான பிரச்னை வரும். உடலின் ரத்த அழுத்தம் குறைந்து   கண்கள் இருண்டு கீழே விழுந்துவிடுவீர்கள். மேற்சொன்னது உடனே நடக்கும் விளைவுகள். நீண்டகால அடிப

உலக மக்கள் அனைவருக்கும் ஒரே டயட்!

படம்
  உலக மக்கள் அனைவருக்கும் ஒரே டயட்!  பதினாறு நாடுகளைச் சேர்ந்த 30 ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில், உலக மக்கள் அனைவருக்குமான புதிய உணவு முறையைத் தயாரித்துள்ளனர். உலக மக்கள் தம் பொருளாதார வசதி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு ஏற்ப பல்வேறு உணவுமுறைகளை கடைபிடித்து வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு கலாசாரம் கொண்ட மக்கள் நிலப்பரப்பு சார்ந்த உணவுமுறைகளைப் பின்பற்றுகின்றனர். இந்த உணவுகளிலும் ஒருவருக்கு தினசரி அவசியத்தேவையான சத்துகள் (தோராயமாக 2500 கலோரி) கிடைக்கிறதா என்றால் இல்லை என்று கூறவேண்டும்.  புதிய டயட் அறிமுகம் இதற்கு தீர்வாகத்தான் முப்பது ஆராய்ச்சியாளர்கள், மக்களுக்கு பொதுவான உணவுமுறையைப் பரிந்துரைத்துள்ளனர். இதுகுறித்த ஆய்வறிக்கை லான்செட் இதழில் வெளியாகி உள்ளது. கார்போ டயட் முதல் பேலியோ டயட் வரை எக்கச்சக்க டயட்கள் நடைமுறையில் உள்ளன. இப்போது எதற்கு புதிய டயட்? நாம் தற்போது சாப்பிடும் உணவு முறைகள் பூமிக்கும் நம் உடலுக்கும் ஏராளமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதே இதற்கு காரணம்.  பசுமை இல்ல வாயுக்கள், செயற்கை உரங்கள்(நைட்ரஜன், பாஸ்பரஸ்), நிலவளம் சீர்குலைவு, உணவு வீணாதல் ஆகிய பிரச்னைகள் தற்போது பெரி

எப்படி சாப்பிடுவது? - டயட் முறைகள்

படம்
pixabay எப்படி சாப்பிடுவது? காலை எட்டுமணி, மதியம் ஒரு மணி, இரவு எட்டுமணி என மூன்று வேளை உணவு சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாகி இருக்கும். ஆனால் இப்படி சாப்பிடவேண்டும் என்று அவசியமில்லை. இந்த சுழற்சியில் அனைவரது உடலும் இயங்குவதில்லை என்பது உங்களுக்கு நோய் வந்தபிறகுதான் தெரியவரும். இரவுப்பணிகளுக்கு செல்பவர்களுக்கு உடல் பருமன் நீரிழிவு பிரச்னைகள் ஏற்படும். என்ன காரணம் தெரியுமா? நாம் ஆதிகாலத்தில் இருந்தே சூரியனை மையமாக கொண்டு வாழ்ந்து பழகிவிட்டோம். இரவு என்பது சிங்கம், புலி போன்றவற்றின் வேட்டைக்காலம். மனிதர்கள் பகலில் வேட்டையாடி உண்டுவிட்டு குகையில் பதுங்கிவிடுவதே வழக்கம். இந்த பழக்கத்தில் இருப்பவர்களுக்கு ஐ.டி பணி, நாளிதழ் பணி என கிடைக்கும்போது அது முதலில் வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் நாளடைவில் உடலில் வளர்சிதை மாற்றம் மாற்றமடையத் தொடங்கும். இதனால் கன்னம் லேஸ் பாக்கெட் போல உப்பலாக தோன்றும். வயிற்றில் பீர் பெல்லி உருவாகும். ஆளே நவரச திலகம் பிரபு போல நடக்கத் தொடங்குவீர்கள். இதெல்லாம் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றின் தொடக்க நிலை ஆகும்.  க

Whole foods புகழ்பெற்றது எப்படி?

படம்
pixabay மிஸ்டர் ரோனி முழுமையான உணவு என்று ஒன்று உண்டா? முழுமையான உணவு என்பது அறுசுவையும் சேர்ந்து பாரதி மெஸ்சிலும், சரவணபவனிலும் சாப்பிடுகிறோமே அதுதான். இதுதான என திட்டவட்டமாக கூறமுடியாது. ஆனால் அத்தனை பொருட்களிலும் அளவு குறைத்து வைக்கும் தாராள மனசுக்காரர்கள் இவர்கள்தான். முழுமையான உணவு இயக்கம் 1940ஆம் ஆண்டு தொடங்கி புகழ்பெற்றது. இது எந்த வகையான உணவுமுறை என்றால் பதப்படுத்தாத பொருட்களை சாப்பிடுவதை வலியுறுத்துகிற முறை. இதில் ஆர்கானிக் என்ற வகை, அப்படி இல்லாத வகையும் உண்டு. ஆர்கானிக் என்றால் விலங்குகளின் கழிவுகளை, மரங்களின் இலைகளை உரமாக போட்டு பயிர்களை விளைவிப்பது. முழுமையான உணவு முறையில் செயற்கை உரங்களையும் பயன்படுத்துகிறார்கள். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைய உண்டு. ஆனாலும் இது முழுமையான உணவு முறை என கூற முடியாது. இதில் பதப்படுத்தும் முறைகள் உண்டா? தக்காளியை அப்படியே சாப்பிட  அனைவராலும் முடியாது. அப்படி சமைத்தாலும் குறைந்தளவு வெப்பநிலையை பரிந்துரைக்கின்றனர். காரணம் அதிலுள்ள சத்துகள் இழக்கப்படுவதுதான்.ஆப்பிளைக் கூட தோலை உரிக்காமல் கழுவிவிட்டு அப்படியே சாப்பிடச்

புத்தகம் புதுசு! - பழைய ஆடைகளை அணிந்தால் சூழலுக்கு நல்லதா?

படம்
இன்று டயட் என்ற வார்த்தையை நினைக்காத ஆட்கள் கிடையாது. வெள்ளையர்கள் இறுக்கிப் பின்னிய நரம்பு நாற்காலி போல இருக்க, இந்தியர்கள் பலருக்கும் வயிறு முன்னே தள்ளிவிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்த டயட் சார்ந்து கோலா, சத்து பானங்கள், மாத்திரைகள், ஊட்டச்சத்து பானங்கள் என பெரும் சந்தை இயங்கி வருகிறது. இதன் மதிப்பு பல கோடிகள் வரும். டயட் கலாசார வரலாறு, அதன் தன்மை, பாதிப்புகள் ஆகியவற்றை ஆசிரியர் பல்வேறு நோயாளிகளிடம் பேட்டி கண்டு எழுதி உள்ளார். எனவே டயட் சார்ந்த பல்வேறு போலி நம்பிக்கைகளை நீங்கள் இதன் மூலம் உணர்ந்து வெளியே வரமுடியும். அண்ணன்களைக் கொண்ட தம்பிகள் அனைவருக்கும் கிடைப்பது செகண்ட்ஹேண்ட் ஆடைகள்தான். இதுவே உலகம் முழுக்க பெரிய சந்தையாக உள்ளது.. பயன்படுத்திய ஆடைகளை வெளுத்து புதிய துணிகளைப் போல விற்கும் நிறுவனங்கள் இப்போது அதிகமாக உருவாகி வருகின்றன. அடிக்கடி புதிய துணிகள் வாங்கினால் உங்கள் பீரோ தாங்காது. காரணம், பழைய துணிகளை உங்களுக்கு போடவும் மனசு வராது. மயிலாப்பூரிலுள்ள அட்சய பாத்ரா மாதிரியான இடங்கள் உங்கள் பழைய துணிகளை பிறருக்கு கொடுக்க உதவின. உண்மையில் இத்துற

இறைச்சி மட்டுமே உணவு! சரியா - தவறா?

படம்
இறைச்சி மட்டும் உணவாக சாப்பிடலாமா? இறைச்சி மட்டும் உணவாக எடுத்துக்கொண்டால் பல் விளக்க வேண்டியதில்லை. மாவுப்பொருட்களை சாப்பிடுவதால்தான் நாம் பற்களில் ஒட்டும் இறைச்சியை அகற்ற  பல்விளக்க வேண்டியிருக்கிறது. 1928 ஆம்ஆண்டு நடைபெற்ற ஆராய்ச்சிப்படி இரு ஆண்களுக்கு உணவாக இறைச்சி மட்டுமே வழங்கப்பட்டது. இதில் ஆய்வு இறுதியில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படப்படவில்லை. அதாவது நீண்டகால நோக்கில் நீங்கள் இறைச்சியை உணவாக எடுத்துக்கொள்ளலாம். நன்றி: பிபிசி

உலக மக்கள் அனைவருக்கும் ஒரே டயட் சாத்தியமா?

படம்
நன்றி: தினமலர் - பட்டம் உலக மக்கள் அனைவருக்கும் ஒரே டயட்!  பதினாறு நாடுகளைச் சேர்ந்த 30 ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில், உலக மக்கள் அனைவருக்குமான புதிய உணவு முறையைத் தயாரித்துள்ளனர். உலக மக்கள் தம் பொருளாதார வசதி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு ஏற்ப பல்வேறு உணவுமுறைகளை கடைபிடித்து வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு கலாசாரம் கொண்ட மக்கள் நிலப்பரப்பு சார்ந்த உணவுமுறைகளைப் பின்பற்றுகின்றனர். இந்த உணவுகளிலும் ஒருவருக்கு தினசரி அவசியத்தேவையான சத்துகள் (தோராயமாக 2500 கலோரி) கிடைக்கிறதா என்றால் இல்லை என்று கூறவேண்டும். புதிய டயட் அறிமுகம் இதற்கு தீர்வாகத்தான் முப்பது ஆராய்ச்சியாளர்கள், மக்களுக்கு பொதுவான உணவுமுறையைப் பரிந்துரைத்துள்ளனர். இதுகுறித்த ஆய்வறிக்கை லான்செட் இதழில் வெளியாகி உள்ளது. கார்போ டயட் முதல் பேலியோ டயட் வரை எக்கச்சக்க டயட்கள் நடைமுறையில் உள்ளன. இப்போது எதற்கு புதிய டயட்? நாம் தற்போது சாப்பிடும் உணவு முறைகள் பூமிக்கும் நம் உடலுக்கும் ஏராளமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதே இதற்கு காரணம். பசுமை இல்ல வாயுக்கள், செயற்கை உரங்கள்(நைட்ரஜன், பாஸ்பரஸ்), நிலவளம் சீர்குல