இடுகைகள்

சினிமா-திரைப்பட பாதுகாப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழைய படங்களை ரீஸ்டோரேஷன் செய்வதே இனி எதிர்காலம்!

பழைய திரைப்படங்களுக்கும் பாதுகாப்பு தேவை !  முழுநீள திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா முதற்கொண்டு ரிலீசுக்கு காத்திருக்கும் சூப்பர்ஸ்டாரின் காலா வரை அனைத்து படங்களும் உங்கள் நினைவிலிருக்கலாம் . ஆனால் அவற்றை பாதுகாப்பாக சேமித்தால்தானே அடுத்த ஜெனரேஷனுக்கு அதனை திரையிட்டு காட்ட முடியும் . அப்பணியைத்தான் தனது ஃபிலிம் ஹெரிடேஜ் பவுண்டேஷன் மூலம் செய்துவருகிறார் மும்பையைச் சேர்ந்த சிவேந்திரசிங் தங்கர்பூர் . மும்பையின் தர்தியோ சாலையிலுள்ள ஆபீசில் நுழைந்தால் ஹாலில் நம்மை மிட்செல் கேமரா கம்பீரமாக வரவேற்கிறது . உள்ளே சுவரில் லூயிஸ் புனுவெலின் படபோஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது . சின்ன ஷெல்ஃபுகளில் படபோஸ்டர்கள் , பாட்டு புத்தகங்கள் , சென்சார் சான்றிதழ்கள் , சினிமா இதழ்கள் ஆண்டு , மொழி , இயக்குநர் என கச்சிதமாக பிரிக்கப்பட்டு அடுக்கப்பட்டுள்ளன . இந்திய அரசின் தேசிய திரைப்பட ஆவணமையம் (NFAI) தவிர ஃபிலிமில் உருவான திரைப்படங்களின் நகல்களை பாதுகாக்கும் ஒரே அமைப்பு இந்தியாவில் ஃபிலிம் ஹெரிடேஜ் அமைப்பு மட்டுமே .  2014 ஆம் ஆண்டு ஃபிலிம் ஹெரிடேஜ் பவுண்டேஷனை தன்னார்வ தொண்டு நிறுவன