இடுகைகள்

ஆயுஷ்மான் குரானா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியர்கள் என ஒவ்வொருமுறையும் நிரூபிக்கும் நிலையிலுள்ள வடகிழக்கு மக்கள்! அனெக் - அனுபவ் சின்கா

படம்
  அனெக்  ஆயுஷ்மான் குரானா இயக்கம் - அனுபவ் சின்கா பாடல்கள் -அனுராக் சைகியா வடகிழக்கு இந்தியாவில் நடைபெறும் ஆயுதக்குழுக்களுக்கு இடையிலான சண்டையும், அதில் தலையிட்டு ஆதாயம் தேடும் இந்திய அரசு பற்றியும் படம் தீவிரமாக விவாதிக்கிறது.  யார் இந்தியர், இந்தியராக இருக்க என்ன செய்யவேண்டும், இந்தியர் அல்லாதவர் யார் என பல்வேறு கேள்விகளை காட்சிரீதியாகவும், உரையாடல்களாகவும் படம் நெடுக இயக்குநர் கேட்கிறார். இறுதிக்காட்சியில், சிறுவர்களை எதற்கு கொல்ல உத்தரவிட்டீர்கள் என ஜோஸ்வா தனது உயரதிகாரியைக் கேட்கும் காட்சி முக்கியமானது.  வடகிழக்கு இந்தியாவை இந்தியாவுடன் இணைப்பது மேற்கு வங்கம்தான். அதற்கு பின்புறம்தான் வடகிழக்கு மாநிலங்கள் அமைந்துள்ளன. இவர்களின் உருவ அமைப்பு பிற பகுதியுள்ளவர்களை விட மாறுபட்டது. இதனால் இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் உள்ளவர்கள் இவர்கள் வேலைக்கு, கல்விக்காக வரும்போது சிங்கிஸ், நேபாளமாக, சீனா நாட்டுக்காரர்கள்  என கேலி கிண்டல் செய்கிறார்கள். எனவே,  வடகிழக்கினர் நாங்கள் இந்தியாவுடன் எதற்கு இணைய வேண்டும் என எதிர்ப்பு தெரிவிப்பதோடு அவர்கள் தங்களுக்கென தனி கொடி, அரசியலமைப்புச் சட்டம் கேட்

நாட்டை புரிந்துகொண்டால்தான் மக்களின் உணர்வோடு இணையமுடியும்! - ஆயுஷ்மான் குரானா

படம்
அனுபவ் சின்கா, ரா ஒன் படம் மூலமாக இந்தியா முழுக்க பிரபலமானார். ஆனால் இது ஃபேன்டசி படம். அதற்குப் பிறகு அவர் எடுத்த முல்க், ஆர்டிக்கிள் 15, தப்பட் ஆகிய படங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு சிக்கல்களை அலசின. இயல்பான நடிப்பு, நாம் ஏற்கமுடியாத நிதர்சன உண்மை ஆகியவற்றை மையமாக கொண்டே அனுபவ் சின்கா படம் எடுத்துவருகிறார். இவர் எடுக்கும் படங்களுக்கு அவரேதான் தயாரிப்பாளரும் கூட. அதனால் தான் தைரியமாக பிறர் சொல்லத் தயங்கும் விஷயங்களை சொல்ல முடிகிறதோ என்னவோ, இப்போது வடகிழக்கு இந்தியா பற்றிய படமான அனெக்கை எடுத்துள்ளார். இதில் நடித்துள்ளவர், ஆயுஷ்மான் குரானா.  ஆயுஷ்மான் குரானா இந்தி சினிமா நடிகர்  அனெக் படம் பற்றி உங்களுடைய கருத்து என்ன? நாங்கள் இதுவரை பேசாத விஷயத்தை அனெக் படத்தில் பேசியுள்ளோம். இந்த நிலப்பரப்பும் கூட புதிது. ஆர்டிக்கிள் 15 படத்தில் நான் நடித்துள்ளேன். அது எனக்கு முக்கியமான படம். மாறுபட்ட குரலை பிரதிபலிக்கும் ஆளுமையாக அனுபவ் சின்கா உள்ளார். நான் அவரை நம்புகிறேன்.  கதை சொல்லுவது, சொல்லும் விஷயத்தின் உண்மை ஆகியவற்றில் யாரும் அனுபவ் சின்கா அளவுக்கு நியாயம் செயதிருக்க முடியாது.  வடகிழக்கு பற்

இந்தி, பஞ்சாபி, மலையாளத்தில் கலக்கும் புதிய(!) நடிகர்கள்!

படம்
  நடிகர், பாடகர் - தில்ஜித் தோசன்ஞ்சி அட்டகாசமான நடிகர் தில்ஜித் தோசன்ஞ்சி தில்ஜித் தோசன்ஞ்சி பஞ்சாபி மொழியில் முக்கியமான நடிகர். இப்போது இந்தி மொழி படங்களை, பஞ்சாப் மொழி படங்கள் வருகிறது என்றால் தள்ளி வைக்கும் அளவுக்கு சிறப்பாக தயாரிக்கிறார்கள். சந்தைப்படுத்தலும் அப்படித்தான். பஞ்சாபி மொழியில் தில்ஜித் நடித்த படங்கள் அனைத்துமே வசூல் மழை பொழிந்தவை. இவர் பாடி நடிக்கும் பாடல்களும் அப்படித்தான். பஞ்சாபி பாடல்களை மேற்கத்திய பாணியில் பாடுவது இவரது சிறப்பு அம்சம்.  இந்திப்படங்களிலும் இப்போது நடித்து வருகிறார். இவர் நடித்த அர்ஜூன் பட்டியாலா, குட் நியூஸ் ஆகிய படங்களில் இவரது நகைச்சுவை நடிப்பிற்காக பேசப்பட்டவை. பஞ்சாபி மொழியில் நடித்த ராக் ஹவுஸ்லா என்ற படம் தியேட்டர் வசூல் மட்டுமே இப்போதைக்கு 54 கோடிக்கும் அதிகம். இன்னும் இப்படம் அமேசானில் திரையிடப்படவில்லை.  பிலாதூரில் பிறந்தவர் குருத்துவாராவில் உள்ள பஜனைகளைப் பாடி இசையைக் கற்றுக்கொண்டவர். 2011 ஆம் ஆண்டு தொடங்கி படங்களில் நடித்து வருகிறார்.  தில்ஜித்திற்கு பிராண்ட் நிறுவனங்களின் உடை என்றால் கொள்ளைப் பிரியம். வாங்கும் சம்பளத்தில் பாதியை உடைக்கா

வழுக்கையால் அவமானமா? பாலா சொல்லும் பாடம் அதிரடி!

படம்
பாலா இயக்கம் - அமர் கௌசிக் கதை - நீரன் பட், பாவெல் பட்டாச்சார்ஜி இசை சச்சின் ஜிகார், பிராக், ஜானி ஒளிப்பதிவு அனுஜ் ராகேஷ் தவான் இளம் வயதிலிருந்து ஷாருக்கான் ரசிகராக உள்ளவனுக்கு இருபத்தைந்து வயதில் முடியெல்லாம் கொட்டி வழுக்கையாக மாறினால் என்னாகும்? அதேதான். அவமானம், வேலையில் பதவியுயர்வு சிக்கல், குடும்ப உறவுகளிலும் விரிசல். அத்தனையையும் கடந்து அவன் எழுந்து நிற்பதுதான் கதை. அதாவது தன் குறையை தானே உணர்ந்து ஏற்கிறான். பிளஸ் இதுபோன்ற ஸ்கிரிப்டை செலக்ட் செய்து நடித்த ஆயுஷ்மான் குரானா. பிரமாதமாக நடித்திருக்கிறார் என்பதை விட கதையை புரிந்துகொண்டு நடித்திருக்கிறார். படம் பார்த்த நண்பர், இறுதியில் தன் விக்கை கழற்றி கண்களைத் துடைக்கும்போது அவரின் கண்களும் கலங்கிவிட்டது. அந்தளவு பார்வையாளர்களை தன் நடிப்போடு இணைய வைத்துவிடுகிறார். பூமி பட்னாகரும் கருப்பு கலரில் சில காட்சிகளில் அய்யே சொல்ல வைத்தாலும் நடிப்பில் திடமாக காலூன்றி நிற்கிறார். மைனஸ் டிக் டொக் பெண்ணாக வரும் யாமி கௌதம். அவரின் குணம், எதிர்பார்ப்பு என்பதை ஆயுஷ்மான் புரிந்துகொண்டாலும் அவர் ஆயுஷ்மானை பிரியும் முட

கதாபாத்திரம் கோரும் உழைப்பை நான் தருகிறேன்!

ஆயுஷ்மான் குரானா நீங்கள் நடித்த விக்கி டோனர் திரைப்படம், பிற இந்தி திரைப்படங்கள் போல கிடையாது. நவீன திரைப்படத்திற்கான கருத்தைக் கொண்டிருந்தது. இதற்கு ரசிகர்களைத்தான் பாராட்ட வேண்டும். அவர்கள் பரிணாம ரீதியாக தொடர்ச்சியாக வளர்ந்து வருகிறார்கள். அவர்களோடு சினிமாவும், சமூகமும் சேர்ந்து வளருகிறது. இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? தொண்ணூறுகளுக்கு முன்பு நடுத்தர வர்க்க குடும்பங்கள் சினிமா பார்ப்பதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. இன்று அவர்கள் சிறு, குறு, பெருநகரங்களுக்கு இடம்பெயர்ந்தபின்தான் அவர்களுக்கான மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் கட்டப்படத் தொடங்கின. மக்களும் புதுப்புது கான்செப்டில் அமைந்த படங்களை ரசிக்கத் தொடங்கினர். முதலில் நஸ்ரூதின் ஷா, ஓம்பூரி ஆகியோர் நடித்த படங்களுக்கு கூட்டம் அள்ளியது. பின்னர் சிறிய படங்கள் 200 கோடி கிளப்பில் சேர்ந்தன. இதைப்பற்றி தங்கள் கருத்து? இந்தி திரைப்பட உலகில் அனைத்து படங்களுக்கும் இடமிருக்கிறது. சிம்பா என்ற படமும் நன்றாக ஓடியது. நான் நடித்த பதாய் ஹோ என்ற படமும் வெற்றிகரமாகத்தானே ஓடியது. நட்சத்திரம் நடித்த படம் என்பது வசூலுக்கு உதவும் என்பது உண்மை