இடுகைகள்

நிர்மலா சீதாராமன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மோடி அரசு 2.0 - நிர்மலா சீதாராமன், அமித் ஷா செய்ததும், காத்திருக்கும் சவால்களும்!

படம்
  பாஜக அரசின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சி! மோடி 2.0 நிதித்துறையில் செய்தது என்ன? 2019ஆம் ஆண்டு நிதித்துறை அமைச்சராக நிர்மலா பதவியேற்றார். அப்போது பொருளாதாரம், சற்று தேக்கத்தில் இருந்தது. உள்நாட்டு தேவை மற்றும் தனியார் முதலீடு ஆகியவற்றில் சுணக்கம் காணப்பட்டது. எந்த நிதியமைச்சரும் சந்திக்காத சவால்களை நிர்மலா எதிர்கொண்டிருக்கிறார். முக்கியமாக கோவிட் 19. 2020ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று லாக்டௌன் அமலுக்கு வந்தது. இதனால் இரண்டு காலாண்டுகளாக எதிர்மறை ஜிடிபி வளர்ச்சி காணப்பட்டது.  உலக நாடுகள் அனைத்தும் பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்கின. இதை நிர்மலா சற்று மாற்றியோசித்து செயல்படுத்தினார். பலவீனமாக உள்ள பிரிவினருக்கு பொருளாதார உதவிகளை வழங்கினார். சிறுகுறு தொழில்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை ஒதுக்கீடு செய்தார்.  இப்போது அவர் செய்த செயல்பாடு, திட்டங்களைப் பார்ப்போம். சுருக்கமாகத்தான்.  செய்தது! மே 2020ஆம் ஆண்டு 20 லட்சரூபாய் மானிய உதவிகளை வழங்கியது இந்திய  அரசு சிறு குறு தொழில்களுக்கான அவசரநிலை கடன் திட்டம் நடைமுறைக்கு வந்தது.  2019-20, 2024-25 காலகட்டங்களில் தேசிய அடிப்படை கட்டும

மக்களின் வாழ்க்கையிலிருந்து சுகாதாரத்தை தனியாக பிரித்துப் பார்க்காதீர்கள்! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

படம்
              நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் ஜவுளிபூங்கா பற்றி அறிவித்திருக்கிறீர்கள் , இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ? ஜவுளிகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நாம் திறன் கொண்ட நாடாக உள்ளோம் . ஆனாலும் கூட இத்துறையில் நாம் பலவீனமாக இருக்கிறோம் . அதில் நாம் முன்னேற்றத்தை காண வேண்டும் என்பதற்காகவே ஜவுளி பூங்காவை அறிவித்திருக்கிறோம் . பொருளாதார மந்த நிலையை போக்குவதற்கான நிறைய முயற்சிகள் உள்ளன . ஆனால் , வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான முயற்சிகள் ஏதும் இதில் கூறப்படவில்லை . பெருந்தொற்று காரணமாக பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் போய்விட்டன . நீங்கள் எப்படி அவர்களுக்கு உதவப் போகிறீர்கள் ? ஆத்மாநிர்மார் பாரத் திட்டத்தை அறிவித்தபோது , நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை திரும்ப வேலையில் சேர்த்துக்கொள்ள ஏதுவாக அரசு அவர்களின் பிஎப் பணத்தை கட்டும் என்று கூறினேன் . இந்த தொகையை அரசு இரண்டு ஆண்டுகள் செலுத்தும் . ஜப்பான் , ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து பல்வேறு திறன் பயிற்சிகளை வழங்கவிருக்கிறோம் . இந்திய மக்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் . நாம் பல்வேறு நாடுகள

விவசாய மசோதாக்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் ஏமாற்றத்தை தருகின்றன! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

படம்
          the statesman        நேர்காணல் நிர்மலா சீதாராமன் விவசாய மசோதாக்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறதா? நான் ஆச்சரியப்படவில்லை. எனக்கு ஏமாற்றமாகவே உள்ளது. எம்பிகள் பலரிடமும் கருத்துகளைக் கேட்டுத்தான் மசோதா உருவானது. இதற்கு விவசாயத்துறை நரேந்திரசிங் தோமர்தான் பொறுப்பு. மசோதாவை நான் ஆத்மா நிர்பார் திட்டத்தின் கீழ் அறிவித்தேன். ஆனால் அப்போது எந்த எதிர்வினைகளும் இந்தளவு தீவிரமாக எழவில்லை. பொதுமுடக்கம் தொடங்கி ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன. என்ன மாற்றங்களை எதிர்கொண்டீர்கள் என தெரிந்துகொள்ளலாமா? பல தலைமுறைகள் பார்க்க சூழலை நாம் பார்த்துள்ளோம், முதலில் நாம் இச்சூழலுக்கு ஏற்றபடி நம்மை மாற்றி்க்கொள்ளவேண்டும். ஆறுமாதங்களுக்கு அப்புறமும் கூட நாம் சவால்களுக்கு இன்னும் பழகவில்லை. இப்போது அமைச்சகங்கள் செயல்படவேண்டிய நேரம். எனவே, வேகமாக செயல்பட்டு வருகிறார்கள். கார்ப்பரேட் துறைகள் என்ன சொல்லுகிறார்கள்? ஸ்டீல் துறை மெல்ல நிமிர்ந்து வருகிறது. சீனாவில் இரும்புகளுக்கு அதிக தேவை உள்ளது. இதேபோலவே ஜவுளித்துறையில் வேலையாட்களுக்கு அதிக தேவை உள்ளது. தொழிற்சால

பட்ஜெட் 2020 - மக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்!

படம்
பட்ஜெட்டை இரண்டு மணிநேரம் வாசித்து சாதனை செய்திருக்கிறார் நிதி அமைச்சர். புதிய அறிவிப்புகள் பெரும்பாலும் பற்றாக்குறையை சரிசெய்வதற்கான அம்சங்களாகவே இருக்கின்றன. இந்த பட்ஜெட்டில் சில விஷயங்கள் விலை குறையும். சில விலை ஏறும். அவை பற்றி பார்ப்போம். மதிப்பிற்குரிய பெற்றோர்களே, குழந்தைகளுக்கு இறக்கமதி டின் உணவுகள், பொம்மைகள் வாங்கிக் கொடுத்துத்தான் வளர்ப்போம் என நீங்கள் சொல்ல முடியாது. ஏனெனில் நெஸ்லே நான் புரோ உணவு ரூ.1,200 லிருந்து ரூ.1,340 ஆக விலை உயர்கிறது. பார்பி பொம்மையுஉம் கூட 800 ரூபாய் விலை கூடுகிறது. உடல் ஆரோக்கியத்தை உயிராக கருதுகிறீர்களா? அப்படி உடலைப் பராமரிக்க நீங்கள் சாப்பிடும் பருப்பு வகைகளும், ஷூ, செருப்புகளும் விலை ஏறுகின்றன. கலிஃபோர்னியா வால்நட் பருப்புகள் 850 லிருந்து 1280 ரூபாயாக விலை எகிறுகிறது. நைக் ஷூக்கள் 8,999 ரூபாயிலிருந்து 9,749 ரூபாயாக விலை உயர்கிறது. உள்நாட்டு வரி பர்னிச்சர் பொருட்களுக்கு கூடுகிறது. இதனால் சோபா, மெத்தை, எல்இடி விளக்குகளுக்கு நீங்கள் காசு அதிகம் செலவழித்தால்தான் உங்கள் வீட்டுக்கு வரும். நீங்கள் ஐகியா இறக்குமதி படுக்கை ஒன்றை வாங்க 5

பட்ஜெட்டை தீர்மானிக்கும் நிதி அமைச்சக குழு! - ஐவர் குழு இவர்கள்தான்

படம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2020 - தீர்மானிப்பவர்கள் இவர்கள்தான். எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலாகவிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை இரண்டாம் முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை அளிக்கும் அதிகாரிகள் சிலரைப் பார்ப்போம். ராஜீவ்குமார்,  நிதித்துறை செயலர்  நிதியமைச்சகத்தின் முக்கியமான அதிகாரி. பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்கும் சர்ச்சைக்குரிய சீர்த்திருத்தங்களை உருவாக்கி முன்மொழிந்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. வாராக்கடன் பாதிப்பைக் குறைத்து வங்கிகள் தொழில்துறைக்கு கடன்களை வழங்குவதற்கான முயற்சிகளுக்கான பரிந்துரைகளை இவர் நிதி அமைச்சருக்கு வழங்குகிறார். வங்கித்துறையின் பின்னணியில் இருந்து கடன்களை வழங்க வைத்து மக்களின் நுகர்வு மூலம் பொருளாதாரத்தை மீட்கும் முக்கிய முயற்சியை இவர் செய்து வருகிறார். அதானு சக்ரபொர்த்தி,  பொருளாதார விவகாரங்கள் துறை செயலர். பொதுத்துறை பங்குகளை விற்கும் திறனில் அதானு வல்லுநர். மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை இ

எதிர்க்கட்சிகளை மிரட்டும் அமலாக்கத்துறை !

படம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள அமலாக்கத்துறை இன்று சிபிஐ யை விட சக்தி வாய்ந்த துறையாக மாறி வருகிறது. அப்படி என்ன ஆற்றல் உள்ளது என பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். சட்டங்கள்தான் அதற்கு சக்தி.... 2002 இல் அமலான பணமோசடி சட்டம் பிஎம்எல்ஏ இதில் ஒருவரை கைது செய்தால் அவர் வெளியே வருவது கடினம். இதில் விசாரணை அதிகாரி தன் அறிக்கையை நீதிமன்றத்தில் ஆதாரமாக பதிவு செய்ய முடியும். எஃப்எம்ஓஏ எனும் சட்டம், பொருளாதாரக்குற்றவாளியாக ஒருவரைக் கருதி குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தால், அவரின் சொத்துக்களை எப்பாடு பட்டாலும் பிற்பாடும் வாங்க முடியாது. 2005 முதல் 2019 வரை பிஎம்எல்ஏ சட்டத்தில் வழக்கு பதிவான 164 நபர்களில் வெறும் மூன்றே பேருக்கு மட்டுமே பெயில் கிடைத்துள்ளது. அதுவும் இரண்டு மாதங்களுக்கு குறைவாகத்தான். மற்றவர்களுக்கு சிறைதான் நிரந்தர வசிப்பிடம். பொதுவாகவே அமலாக்கத்துறையிடம் அசையும், அசையா சொத்துக்கள் சிக்கினால் திருப்பதி ஏழுமலையானின் உண்டியலில் அதை போட்டுவிட்டதாக மனசார நம்பலாம். வழக்கு போட்டு அதை மீட்பதற்குள் உங்களின் சட்டை கிழிந்து தலைமுடி உதிர்ந்து....

ஜிஎஸ்டி சுணக்கம் - மறைமுக வரியில் தடுமாற்றம்!

படம்
dna india உற்பத்தியைப் பாதித்த வரி வசூல்! 2017ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று, நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அனைத்து மறைமுக வரிகளுக்கும் மாற்றாக இந்த வரி இருக்கும் எனக் கூறப்பட்டது. நாட்டில் வரிகள், நேர்முகமாக மற்றும் மறைமுகமாக  வசூலிக்கப்படுகிறது. அப்போது, ஜிஎஸ்டி வரி, முந்தைய வரி வசூலை விட 2 சதவீதம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் தன் இலக்கை எட்டுவதில் சுணங்கியுள்ளதுதான் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.  உள்நாட்டு உற்பத்தி 2013-14 ஆம் ஆண்டு 13.9 சதவீதத்திலிருந்து 12.2 சதவீதமாக (2018-19) குறைந்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு திட்டமிட்டதை விட 1.31 டிரில்லியன் டாலர்கள் பற்றாக்குறையாகிறது.  7.3 சதவீதமாக (2013-14) இருந்த வரி வருவாய் தற்போது, 6.9 சதவீதமாக (2018-19) குறைந்துவிட்டது. இந்த வருவாய் இடைவெளி சதவீதம் அதிகரித்து வருவது ஆபத்தானது. நேர்முக வரி விதிப்பில் அலுவலகப் பணியாளர்கள், பெருநிறுவனங்கள் உள்ளடங்குவர். மறைமுகவரி விதிப்பில் பொருட்களை வாங்குவது, சேவைகளைப் பெறுவது ஆகியவை வரும். மறைமுக வரி விதிப்பில்தான், நி

கல்வித்துறைக்கு நிதி எவ்வளவு?

படம்
பட்ஜெட்டில் கல்வித்துறையின் பங்கு! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில் கல்வித்துறைக்கான சில திட்டங்களை நிதி அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.  இத்திட்டங்கள் கல்வியின் தரத்தை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது. ரூ.400 கோடி ரூபாய் செலவில் கல்விக்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய கல்வி நிறுவனங்களின் தரம் உலக கல்வி நிறுவனங்களுக்கு நிகராக உயரும். 2019-20 ஆம் ஆண்டில் ஸ்டடி இந்தியா எனும் திட்டத்தை அரசு உருவாக்க உள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவுக்கு கல்வி கற்க ஈர்ப்பது நோக்கம். இம்முறையில் இந்தியா முக்கியமான கல்வி மையமாக உருவாகும். தேசிய விளையாட்டுக்கல்வி போர்ட்டில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் விளையாட்டுக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சிகளை முழுமுனைப்புடன் செய்ய, தேசிய ஆராய்ச்சி அமைப்பு ஒன்றை இந்திய அரசு நிறுவ உள்ளது. இந்த அமைப்பு, மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்கான நிதியை ஒதுக்கும். கௌசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு த