எதிர்க்கட்சிகளை மிரட்டும் அமலாக்கத்துறை !
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள அமலாக்கத்துறை இன்று சிபிஐ யை விட சக்தி வாய்ந்த துறையாக மாறி வருகிறது. அப்படி என்ன ஆற்றல் உள்ளது என பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். சட்டங்கள்தான் அதற்கு சக்தி....
2002 இல் அமலான பணமோசடி சட்டம் பிஎம்எல்ஏ இதில் ஒருவரை கைது செய்தால் அவர் வெளியே வருவது கடினம். இதில் விசாரணை அதிகாரி தன் அறிக்கையை நீதிமன்றத்தில் ஆதாரமாக பதிவு செய்ய முடியும். எஃப்எம்ஓஏ எனும் சட்டம், பொருளாதாரக்குற்றவாளியாக ஒருவரைக் கருதி குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தால், அவரின் சொத்துக்களை எப்பாடு பட்டாலும் பிற்பாடும் வாங்க முடியாது.
2005 முதல் 2019 வரை பிஎம்எல்ஏ சட்டத்தில் வழக்கு பதிவான 164 நபர்களில் வெறும் மூன்றே பேருக்கு மட்டுமே பெயில் கிடைத்துள்ளது. அதுவும் இரண்டு மாதங்களுக்கு குறைவாகத்தான். மற்றவர்களுக்கு சிறைதான் நிரந்தர வசிப்பிடம்.
பொதுவாகவே அமலாக்கத்துறையிடம் அசையும், அசையா சொத்துக்கள் சிக்கினால் திருப்பதி ஏழுமலையானின் உண்டியலில் அதை போட்டுவிட்டதாக மனசார நம்பலாம். வழக்கு போட்டு அதை மீட்பதற்குள் உங்களின் சட்டை கிழிந்து தலைமுடி உதிர்ந்து.... எதுக்குங்க அதெல்லாம். மறுபடியும் முதலில் இருந்து உழைத்து சம்பாதித்து விடுங்களேன்.
சிபிஐ போல லாக்கப், விஐபி லாக்கப் வசதி அமலாக்கத்துறையிடம் கிடையாது. அருகிலுள்ள போலீல் ஸ்டேசன் பார்த்து அங்கே இடம் பிடித்து தங்க வைப்பார்கள். இத்தனை அவமானங்களை தாண்டி தொழிலதிபர்கள் உயிருடன் இருப்பது அவர்கள் சாமர்த்தியம்தானே?
நன்றி - இந்தியா டுடே