செக்ஸ் - நாம் அறிய வேண்டிய சில உண்மைகள்!




Image result for sex illustration
அகடா நோவிகா




செக்ஸ் ஆராய்ச்சி சில உண்மைகள்!


ஆராய்ச்சி ஆராய்ச்சியாளர்களுக்கே!

செக்ஸ் ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் வான் கிராஃபிட் எபிங், தன்னுடைய செக்ஸ் ஆராய்ச்சியை சாதாரண மக்கள் படிப்பதை விரும்பவில்லை. அவர் எழுதிய சைக்கோபதியா செக்சுவல்ஸ் என்ற ஆராய்ச்சி ஆவணத்தை ஜெர்மனியில் 1886 ஆம் ஆண்டு பதிப்பித்தார். பின்னர் 1939 ஆம்ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.


செக்ஸ் என்பது உடற்பயிற்சியா?

சிலர் கூறுவார்கள். வாக்கிங் போவதை விட அதிக கலோரி செக்சில் ஈடுபட்டால் குறையும். ஆனால் அது உண்மையல்ல. செக்சை விட மூன்று மடங்கு வாக்கிங் போனால் அதிக கலோரிகள் குறையும். இதை நான் கூறவில்லை. ஹார்ட் பவுண்டேஷன் சொல்லிய கணக்கு. அயர்ன் செய்யும்போது செலவாகும் மின்கணக்கு அளவுக்கு செக்ஸ் செய்யும்போது, கலோரி செலவாகும் என்கிறார்கள்.



நான் வர்ஜின் பொண்ணுங்க!

அமெரிக்காவில் 2013 ஆம் ஆண்டு கர்ப்பிணி பெண்களிடன் நடந்த ஆய்வில், அவர்களில் ஒரு சதவீதப் பேர் வர்ஜின் என்று கூறினர். அது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்பட வைத்தது.


செக்சில் உதவிய பென்சிலின்

பென்சிலின் மருந்து ஆன்டிபயாடிக் என்பதை அறிவீர்கள். 2013 ஆண்டு வெளியான ஆர்ச்சீவ்ஸ் ஆப் செக்சுவல் பிகேவியர் எனும் ஆராய்ச்சியில் பென்சிலின் செக்சில் உந்துதல் தருவதாக தெரியவந்துள்ளது. 1947-57 வரை சைபிலிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்ய பென்சிலின் உதவியது.

ட்வின்ஸ் இருவர் தந்தையும் இருவர்!

ஆம்.மருத்துவத்துறையில் இப்படி அமைவது அரிது. ஆனால் இரண்டு ட்வின்களுக்கும் இரண்டு தந்தைகள்  அமைய வாய்ப்பு உள்ளது.


பெண் குழந்தை பிறந்தால் விவாகரத்து உறுதி!

தம்பதிகளுக்கு ஆண்குழந்தைகளை விட பெண் குழந்தைகள் பிறந்தால் விவாகரத்து எண்ணம் அதிகம் தலைதூக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஏன் என்கிறீர்களா? அது அப்படித்தான். பெண் குழந்தைகள் பிறக்கும்போது தாய்க்கு ஏற்படும் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் என்பது முக்கியமான காரணம்.