வண்டுகளின் மேல் ஓடுகள் மின்னுவது ஏன்?
மிஸ்டர் ரோனி
சில வண்டுகளைப் பார்க்கும்போது அவற்றின் மேல் ஓடுகள் ஏன் உலோகம் போல் இருக்கின்றன?
உடனே வண்டுகளைப் பிடித்து அதிலுள்ள உலோகங்களைப் பிரித்துவிடலாம் என ஜிண்டால் கம்பெனி ஓனர் போல யோசிக்காதீர்கள். அவற்றின் மேல்தோல் உலோகம் போல் இருப்பது அதன் பெண் இணையைக் கவர்வதற்கான சமிக்ஞை. சிடி, டிவியை வெளிச்சத்தில் பார்த்தால் எப்படியிருக்கிறது? வானவில் நிறங்கள் தெரியும் இல்லையா? அதுபோலத்தான். வண்டுகளின் மேல் ஓடுகளிலும் குறிப்பிட்ட நிறங்கள் தெளிவாக கண்களில் தெரியும். சில நிறங்கள் தெரியாது.
அதன் ஓடுகளின் நிறத்திற்கு நிறமிகள் காரணம் அல்ல. அவற்றின் அமைப்பே அப்படித்தான். மேலும் அவற்றின் வெளிப்புறத் தோல் தொடர்ந்து உதிர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும்.
நன்றி - பிபிசி