சொந்த சாதி மாப்பிள்ளை கிடைத்தாரா- எவரிக்கி செப்போது படம் எப்படி?
எவரிக்கி செப்போது - தெலுங்கு
இயக்கம் பசவா சங்கர்
ஒளிப்பதிவு - விஜய், தேஜா, சத்யஜித்
இசை - சங்கர் சர்மா
கதை - சாதிதான். உடனே நிமிர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள். நாங்களும் அப்படித்தான் ரியாக்ஷன் கொடுத்தோம். முதுகெலும்பை உடைத்து விட்டார்கள்.
ஆஹா
நாயகி ஹாரதி - கார்கேயி யெல்லப்பிரகடா. படம் முழுக்க இவர் கொடுக்கும் ரியாக்சன்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். பிரமாதப்படுத்தி இருக்கிறார். காதலனை பொது இடத்தில் சாதிகேட்டு கத்துவதும், தன் சாதியில்லை என்றதும் லவ் செஞ்சால் டைம் வேஸ்ட் என பேசும் வசனத்தில் முத்திரை பதிக்கிறார்.
இதற்கு இணையாக ஹரி - ராகேஷ் நடித்திருக்கிறார். காதலி ஒவ்வொரு முறை கோபத்தில் எரிமலையாகும்போதும் அன்டார்டிக் ஐஸாக குழைந்து பேசி கூல் செய்து நன்றாக நடித்திருக்கிறார். குறிப்பாக கதையை நடத்தி செல்பவர் ஹாரதியின் தந்தை. சாதிப்பித்து பிடித்தவராக, மகளின் பள்ளி நண்பர்களை கூட சொந்த சாதியில் தேடச்சொல்லி மிரட்டுகிறார்.
ஐயையோ
கதைதான். கான்செஃப்டை நன்றாக பிடித்தவர்கள், அதை சொல்லும்போது இப்படியா இழுப்பது. படம் பார்க்கும்போது நாலு லைட்ஸ் பற்ற வைத்து விட்டு வந்தாலும் படம் அப்படியே போகிறது. அதிலும் நல்லப் பெயரை எடுக்க நாயகன் செய்யும் ஐடியா.. முடியல சாமி. சென்னகேசவன்தான் நமக்கு பதிலாக இயக்குநரைத் தண்டிக்க வேண்டும்.
இரண்டு மணிநேரம் பத்து நிமிடங்கள் படத்தில் சாதி என்பது மட்டும்தான் பிரச்னையா? அதைத் தீர்க்கும் விஷயமாக இயக்குநர் யோசித்ததெல்லாம்... ம்.. ஆவ்.. ஆவ்
சின்ன பட்ஜெட் படம். அந்தக் காசுக்கு படத்தை நன்றாகவே முடிந்தவரை அழகாக்க மெனக்கெட்டிருக்கிறார்கள். தன்னம்பிக்கையாக நடித்த நாயகிக்கும், அவரின் தந்தையான வம்சி நக்கந்திக்காகவும் படம் பார்க்கலாம்.
கோமாளிமேடை டீம்