உயிர்ப்பில்லாத காட்சிகள் - சிஜி வலிமையில் சாஹோ
சாஹோ
இயக்கம் சுஜித்
ஒளிப்பதிவு - மதி
இசை - பாடல்கள்
Songs: Tanishk Bagchi Guru Randhawa Badshah Shankar–Ehsaan–Loy |
கார்ப்பரேட் அடிதடிகள்தான். ராய் எனும் நிறுவனத்தின் தலைவர் கொல்லப்படுகிறார். அந்த சீட்டைப் பிடிக்க குழு உறுப்பினர்களுக்குள் அடிதடி. யார் ஜெயித்தது என்பதுதான் கதை.
படம் திரைக்கு வரும்போதே லார்க்கோ வின்ச் காமிக்ஸை படுமோசமாக எடுத்திருக்கிறார்கள் என்று பேச்சு பிரெஞ்சு இயக்குநர் மூலமே கிளம்பிவிட்டது. எனவே கதை பற்றிய ரகசியத்தை படம் காப்பாற்ற முடியவில்லை. சரி எடுத்தவரை என்னதான் செய்திருக்கிறார்கள்.
ஆஹா....
மேக்கிங். அப்போதுதான் தூங்கி எழுந்தது போலவே இருக்கும் பிரபாசை வைத்து ஆக்சன் படம் பண்ண நினைத்த சுஜித்தின் தைரியம். கூடவே, மேக்கிங். திகுதிகு வென காட்சிகள் ஓடுகின்றன. பாடல்கள் தனித்துவமாக தனியாக கேட்டால் நன்றாக இருக்கின்றன. பின்னணியில் பிரமாதமாக உழைத்திருக்கிறார் ஜிப்ரான். செட், விசுவல் எஃபக்ட்ஸ், சிஜி என அபார உழைப்பு. பொருட்செலவு என்பதை விடுங்கள். அந்த உழைப்புதான் வியக்க வைக்கிறது. முதல் பகுதி ட்விஸ்ட் நன்றாக இருக்கிறது. இரண்டாம் பகுதி, தூங்க வைத்துவிடுகிறது.
ஐயையோ...
அதைச்சொன்னால் இந்த பதிவு நீண்டுவிடும். முக்கியமாக கதாபாத்திரங்கள். அதற்கும் சாஹோவுக்கும் உள்ள தொடர்பு அழுத்தமாக இல்லை. தந்தையை இழந்த சாஹோவிடம் அதற்கான தவிப்பை கடைசி காட்சியில் கூட காட்ட முடியாவிட்டால் எப்படி? அமிர்தா நாயரின் காட்சிகளில் நம்மால் ஒன்ற முடியவில்லை. அவரை பெண் என்ற காரணத்திற்காகவே வேலை தராமல் அதிகாரிகள் புறக்கணிக்கிறார்கள். ரைட். சாஹோ அதையே ரொமான்ஸ் பெயரில் செய்தால் எப்படி அமிர்தா பொறுத்துக்கொண்டு காரை விற்று ரிங் வாங்கி வந்து போடுகிறார்?
படம் புரியவில்லை என்கிற புகார் வருகிறது. காரணம், ஐந்தாம் வகுப்பு மாணவி திருக்குறளை வேகமாக ஒப்பிப்பது போல ராய் குரூப்பின் வரலாறு சொல்லுவதுதான். ஆனால் அதையெல்லாம் மறந்துவிடுங்கள். சிம்பிளாக படம் பார்த்தாலே கதை புரிந்துவிடுமே!
நட்பு, துரோகம், துரோகம் பிளஸ், பேராசை, பணம் என அனைத்து விஷயங்களையும் ஒரு அண்டாவில் போட்டு பிசைந்து எடுத்தால் சாஹோ ரெடி. இதே படத்தை அஞ்ஞாதவாசி என்ற பெயரில் அதே தெலுங்கு சினிமாவில கொஞ்சம் சின்ன பட்ஜெட்டில் திரிவிக்ரம் இயக்க, பவன் கல்யாண் நடித்தார். கதையை யோசித்தால் உங்களுக்கு நினைவுக்கு வந்துவிடும். அதில் குடும்ப சமாச்சாரங்களை அதிகம் சேர்த்து திரிவிக்ரம் இயக்கியிருப்பார். இதில் சண்டைகளை அதிகம் வைத்து வெளிநாடுகளில் சுற்றி, நாயகிக்கு குறைந்த ஆடைகள் வைத்து வெட்கப்பட வைத்து இருக்கிறார்கள்.
நல்ல கதைதான். ஆனால் மோசமான நாயக, நாயகியர்களை வைத்து எடுத்து விட்டார்கள். அந்தே.