கடல் தங்கத்தை மீட்கிறாரா ப்ரூனோ பிரேசில் - லயன்காமிக்ஸ்





Image result for bruno brazil




சாக மறந்த சுறா

லயன் காமிக்ஸ்

ரூ.60

ஓவியர் - வில்லியன் வான்ஸ் - கதை க்ரெக்

ப்ரூனோ பிரேசில் அதிரடிக்கும் கதை. அட்டைப்படத்தில் ஹீலியம் பலூன் அதிலிருந்து இறங்குவது போன்ற படம் இருந்தாலும் கதையில் அதுபோன்ற சம்பவங்கள் ஏதும் இல்லை.

நாஜி ஜெர்மனி போரில் ஈடுபட்ட காலத்திற்கு கதை செல்கிறது. போரில் ஈடுபட்ட கப்பல் ஒன்று தங்கத்துடன் கடலில் குறிப்பிட்ட இடத்தில் கவிழ்ந்துவிடுகிறது.அதில் நாஜிப்படையினர், பெட்டி பெட்டியாக தங்கத்தை வைத்திருக்கின்றனர். அது பற்றி செய்தியை ஒருவர் கசியவிட உலகநாடுகள் அனைத்தும் உளவுத்துறையை உசுப்புகின்றன.

கடலில் கிடக்கும் தங்கத்தை எடுக்கும் முயற்சிகள்தான் கதை. அமெரிக்காவில் நடக்கும் கார் விபத்து இதற்கு தூண்டுதலாகிறது. விபத்தில் காரில் பயணிக்கும் இருவர் பேருந்தோடு மோதி அங்கேயே இறந்து விடுகின்றனர். அதில் தப்பிப்பவர் முன்னாள் நாஜி தளபதி. இதுபோதாதா ப்ரூனோ பிரேசில் இந்த விவகாரத்தில் உள்ளே நுழைய? கதை தொடங்குகிறது.

அங்கு உள்ள உளவுத்துறையினர் போட்டியைத் தவிர்க்க பிற நாட்டு ஆட்களை போட்டுத்தள்ளத் தொடங்குகின்றனர். அதில் முதல் முயற்சியில் தப்பிக்கும் ப்ரூனோ பிரேசில், அடுத்த முயற்சியில் தன் நண்பரை பறிகொடுக்கிறார். உயிர் போகவில்லை. ஆனால் படுகாயமுறுகிறார் அவரது நண்பர். இந்த விவகாரத்தில் எப்படி பிரேசில் வெல்கிறார் என்பதே கதை. தங்கம் பற்றிய உண்மையை ஷெல்லன்பர்க் ப்ரூனோவிடம் சொன்னவுடனே கதை முடிவுக்கு வந்துவிடுகிறது. அப்புறம் ரஃபேல் விரட்டுவது,சேசிங் எல்லாம்....ரொம்ப நீளமாகப் போகிறதே சார்.

பெரிய அதிரடி, ஒற்றைக்கு ஒற்றை சண்டை என்பதெல்லாம் கதையில் கிடையாது. எனவே, கதையை ரிலாக்சாக படிக்கலாம். ப்ரூனோ பிரேசிலின் ஒற்றை மயிருக்கும் கூட வில்லன்கள் கெடுதல் செய்யமுடியவில்லை. எனவே கதையின் முடிவு பற்றி நாம் யோசிக்கவேண்டியதில்லை.


கோமாளிமேடை டீம்