இடுகைகள்

கேசட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இசை கேட்கும் அனுபவத்தை மாற்றிய சோனி வாக்மேன்!

படம்
  இசை கேட்கும் அனுபவத்தை மாற்றிய வாக்மேன்! இன்று ஐபோன், இயர் பட்ஸ், ப்ளூடூத் வயர்லெஸ் ஹெட்போன் என வாழ்க்கை மாறிவிட்டது. பாடல் கேட்கும் அனுபவத்தை இன்று ஜேபிஎல் ஹார்மன், இன்ஃபினிட்டி, ஸ்கல் கேண்டி, பிலிப்ஸ், போஸ் என நிறைய நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. இதற்கெல்லாம் முன்னோடி ஒன்று உண்டு. அதுதான் சோனியின் வாக்மேன்.  இன்றுமே சில காமன்சென்ஸ் இல்லாத முட்டாள்கள், ஊருக்கே ரேடியோ வைத்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள், ஜிஃபைவ், லாவா, கார்பன் என உருப்படாத போன்களை வைத்துக்கொண்டு முத்துக்கொட்டை பல்லழகி என ஊருக்கே தண்ணீர் தொட்டியில் பகவதி அம்மன் கோவில் ஒலிப்பெருக்கி போல பாட்டு போட்டுக்கொண்டிருந்தனர். இங்கே எங்கே பிரைவசி? அதைத்தான் சோனியின் வாக்மேன் கொண்டு வந்தது.  நான் ஒலிப்பெருக்கி என்றால் வெளிநாடுகளில் ரேடியோ, கிராம போன் என பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 1979ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சோனி வாக்மேனை அறிமுகப்படுத்தியது. இசை கேட்பதில் தனித்துவமான பொருளாகவே வாக்மேன் இன்றும் உள்ளது.  1978ஆம் ஆண்டு சோனியின் துணை நிறுவனர் மசாரு இபுகா, பாடல் கேட்பதை எளிமையாக்க நினைத்தார். இதற்காக டிசி டி5 ஸ்டீரியோ கேசெட்

மவுசு கூடுகிறது கேசட்டுக்கு! ரீஎன்ட்ரிக்கு ரெடி!

படம்
மீண்டும் பிரபலமாகும் கேசட்ஸ்! தற்போது ஜஸ்டின் பைபர், அரியானா கிராண்டே ஆகியோர் தங்களுடைய ஆல்பங்களை கேசட்டாக வெளியிடத் தொடங்கிவிட்டனர். ஊரில் பஸ்ஸில் ஏ,பி என எழுதப்பட்ட இருபுறங்களிலும் பதியப்பட்ட பாடல்களை கேட்டிருப்பீர்கள். அதற்குப்பிறகு சிடி,டிவிடி அந்த இடத்தை எடுத்துக்கொண்டது. இன்று அந்த இடத்தை பென்ட்ரைவ் கைப்பற்றி உள்ளது. இது இனிமேல் புதிய வணிகத்திட்டமாக மாறலாம் என்கிறார் நேஷனல் ஆடியோ கம்பெனி நிறுவனரான ஸ்டீவ் ஸ்டெப். இவர் 50 ஆண்டுகளாக ஆடியோ கம்பெனியை நடத்தி வருகிறார். கடந்த 2000 ஆம் ஆண்டில் பியர்ல் ஜாம் அண்ட் தி ஸ்மாசிங் பம்கின்ஸ் என்ற பேண்டிற்காக, ஆடியோ டேப்களை வெளியிட்டனர். பிரெஞ்சு நிறுவனமான முலன், கேசட்களை வெளியிட முடிவு செய்து வருகிறது. தி மாஸ்டர்ஸ் என்ற பிராண்டின் கீழ் ஆடியோ டேப்களை வெளியிட திட்டம் தீட்டி வருகிறது. நன்றி: தி இந்து ஆங்கிலம்.