இடுகைகள்

தியேட்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோய்த்தொற்று கிருமிகளை எளிதாக அழிக்கும் தொழில்நுட்பம்!

படம்
வைரஸைக் கொல்லும் புதிய தொழில்நுட்பம்!  அண்மையில் இந்தியாவைச் சேர்ந்த தனியார் தியேட்டர் நிறுவனம், விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் வரும் இந்தி சினிமா நடிகர் சல்மான்கான் ”தியேட்டர்களுக்கு செல்வது பாதுகாப்பானதா?” என்று கேட்பார். இதற்கு தியேட்டர் நிறுவனம் ”வைரஸ் நியூட்ரலைசர்  ஒன்றை நிறுவியுள்ளோம். இந்தியாவிலேயே முதல்முறையாக காற்றில் உள்ள வைரஸ்களைக் கூட இக்கருவி கொல்லும்” என நம்பிக்கையுடன் கூற விளம்பரம் நிறைவடைகிறது.  தியேட்டர்களில் நிறுவப்பட்டுள்ள புதிய வைரஸ் நியூட்ரலைசர் கருவியை கேரளத்தைச் சேர்ந்த ஆல்அபவுட் இன்னோவேஷன் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. கருவியின் செயல்பாட்டைப் பார்த்த 22 நாடுகளிலும் இதனை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.  இந்திய ஆயில் கார்ப்பரேஷன், இந்தியன் ஏர்ஃபோர்ஸ், ஐக்கிய அரபு அமீரக மாளிகை, டிபி வேர்ல்டு, யுஎஃப்ஓ மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் ஆல் அபவுட் இன்னோவேஷன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளன.   தற்போது கர்நாடக அரசின் சுகாதாரத்துறை, 10 ஆயிரம் வைரஸ் பாதுகாப்பு கருவிகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இக்கருவிக்கு, வோல்ஃப் ஏர் மாஸ்க் என்று பெயர். இதனை மாநிலத்திலுள்

ஓடிடி திரைப்படங்களை மக்கள் பார்ப்பது தியேட்டர்கள் இல்லாத காரணத்தால்தான்!

படம்
        கௌதம் தத்தா இயக்குநர், பிவிஆர் சினிமாஸ்       கௌதம் தத்தா இயக்குநர், பிவிஆர் சினிமாஸ் சினிமா துறை இப்போது எப்படி இருக்கிறது? வருமானம் பூஜ்ஜியமாகிவிட்டது. 4500 பணியாளர்கள் வரை வேலையிலிருந்து நீக்கிவிடும் இக்கட்டு நேர்ந்துள்ளது. பாதுகாப்பு, சுத்தம் செய்வது ஆகிய பணிகளைச் செய்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது மால்கள் மெல்ல திறக்கப்பட்டு வருகின்றன. தியேட்டர்களை திறக்க அரசு உத்தரவிடும் என காத்திருக்கிறோம். தியேட்டர்களை திறக்க ஏன் இவ்வளவு தாமதமாகிறது? அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கச்சொல்லி தியேட்டர்களை அனுமதிக்கலாம். நாங்கள் சிரமப்படுகிறோம் என்பதை அரசு உணர்ந்திருக்கும் என நினைக்கிறேன். கடந்த ஆறு மாதங்களில் இத்துறை சார்ந்தவர்கள் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். உங்கள் நிறுவனம் எப்படி நிலையை சமாளித்தது? மிகவும் கடினமான சூழ்நிலைதான். எங்கள் நிர்வாக குழு முதலில் சம்பள வெட்டு நடவடிக்கையை தொடங்கி இருமாதங்களுக்கு அமல் படுத்தியது. பின்னாளில் சம்பளவெட்டு கடுமையாக இருந்தது. தியேட்டர்கள் தொடங்கப்பட்டால என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறீர்கள் டிஜிட்டல் வழியில் ட

தியேட்டர்களில் தேசியகீதம் நல்லதுதான்! - சேட்டன்பகத்

படம்
தியேட்டர்களில் தேசியகீதம் பாட டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சமூக வலைத்தளங்களில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. எமர்ஜென்சி காலங்களில் கூட இதுபோன்ற ஆணைகள் அமலில் இருந்தன என்பதால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தியேட்டர்களில் தேசியகீதம் அவசியமா என்று கேள்வி எழுப்பப்படுவதில் தவறில்லை. இந்திய அரசின் ஒற்றுமைக்கான நடவடிக்கை என்றே இதனை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அடாவடியாக அமலாவதால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவாதம் ஏற்படுத்தினாலே உடனே ஏன் தேசிய கீத த்திற்கு எதிராக இருக்கிறீர்கள்? நீங்கள் தேச துரோகி என புரிந்துகொள்ள முடியாத மொழியில் சிலர் பேசுகின்றனர். இந்தியாவின் பெயர் பலநேரங்களில் கெடுவது இதுபோன்ற கண்மூடித்தனமான தேசபக்தியாளர்களால்தான். தியேட்டர்களில் தேசியகீதம் பாடுவது நீதிமன்ற உத்தரவு எனும் போது அதனை விமர்சிப்பது அரசியலைப்புச்சட்டப்படி தவறு. இதில் என் கருத்து, இது தேவையானது என்பதுதான். உடனே இதனை ஜெர்மனியின் ஹிட்லர் செய்தது போல இருக்கிறது நண்பர்கள் வலைத்தளங்களில் பொங்குகிறார்கள். சிலர் எதற்கு எழுந்து நிற்கவேண்டும் என்று தாமதமாக க் கூட படத்திற்கு