இடுகைகள்

அலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடல்நீரில் தங்கம் உண்டா?

படம்
              அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி கடல்நீரில் தங்கம் உண்டா? உலகிலுள்ள ஒவ்வொருவரும் கடல் நீரை அலசி ஆராய்ந்தால் நபர் ஒருவருக்கு நான்கு கி.கி. அளவுக்கு தங்கத்தை பெறமுடியும். கடல்நீர் சுழற்சி அடைகிறதா? வடதுருவம், தென்துருவம் ஆகிய இருமுனைகளிலும் உள்ள கடல்நீர் கடிகார சுழற்சி, அதற்கு எதிர்சுழற்சி எனுமாறு நீரோட்ட சுழற்சியைக் கொண்டுள்ளன. செங்குத்து, கிடைமட்டம் என இரு வேறுபட்ட அளவுகளில் கடல்நீரோட்டம் உலகமெங்கும் சென்று வருகிறது. கடல்நீரிலுள்ள வேதிப்பொருட்கள் என்னென்ன? குளோரைடு, சோடியம், சல்பேட், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பைகார்பனேட், புரோமைடு, ஸ்ட்ரான்டியம், போரோன், புளுரைடு ஆகிய வேதிப்பொருட்கள் கடல்நீரில் உள்ளன. கடலில் அலையடிக்க என்ன காரணம்? பூமிக்கு கீழே நடக்கும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, காற்று ஆகியவை காரணமாக கடலில் அலைகள் உருவாகுகின்றன. பூமியின் ஈர்ப்புவிசை, நீரின் அழுத்தம் அலைகளை தொடர்ச்சியாக உருவாகி வரச்செய்கின்றன. கடலின் ஆழம் என்ன? கடலின் தோராய ஆழம் நான்காயிரம் மீட்டர்கள்.  

புகையிலையை மேம்படுத்த உதவும் யூரியா? உண்மையா? உடான்ஸா?

படம்
  புகையிலைப் பொருட்களை மேம்படுத்த யூரியா உதவுகிறது! உண்மை. புகையிலையில் மனிதர்களின் சிறுநீரில் காணப்படும் யூரியா மூலக்கூறு, உரமாகப் பயன்படும் டைஅம்மோனியம் பாஸ்பேட், அம்மோனியா, ஃபார்மால்டிஹைடு, சாக்லெட் ஆகியவை உள்ளன.  இதனை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ராபர்ட் புரோக்டர் ஆய்வில் உறுதி செய்துள்ளார். அமெரிக்காவிலுள்ள நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பும் (CDC) புகையிலையில் யூரியா பயன்படுவதை கண்டறிந்துள்ளது.  2050இல் இந்தோனேஷியாவின் வடக்குப் பகுதி ஜகார்த்தா நகரம் நீரில் மூழ்கும்! யூக உண்மை. வெப்பமயமாதல், சூழல் மாறுபாடு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இப்படி அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். இந்தக் கூற்று நடக்கலாம். நடைபெறாமலும் போகலாம். கடல்நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தால் ஜகார்த்தா நகரம் உறுதியாக நீருக்கடியில் மூழ்க அதிக வாய்ப்புள்ளது.  2019ஆம் ஆண்டு வெளியான வயர் வலைத்தள கட்டுரையில், ஜகார்த்தா நகரம் ஆண்டுக்கு பத்து அங்குலம் நீரில் முழ்கி வருவதாக எழுதப்பட்டிருந்தது.  வாழைப்பழத்தில் 500 வகைகள் உண்டு! உண்மை. நகரத்தில் பெரும்பாலும் விற்பவர்களுக்கு ம...

சூழல் செய்திகள்- ஊழியர்களுக்கு சைக்கிள் கொடுத்த நிறுவனம், கடற்புரத்தை சுத்தம் செய்யும் மனிதர்!

படம்
  pixabay சூழல் செய்திகள் முட்டுக்காடு சூழல் காப்பாளர்! முட்டுக்காட்டில் வாழ்ந்து வருபவர், கிரேஷியன் மேத்யூ கோவியாஸ். இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக கடற்கரையில் அலைகள் கொண்டு வந்து போடும் குப்பைகளை பொறுக்கி தனியாக அதனை ஒரு இடத்தில் போட்டு வருகிறார். இதன்மூலம் சூழலுக்கான ஆபத்து தவிர்க்கப்படுகிறது.  கடல் அலையில் ஒதுக்கப்படும் மரப்பொருட்களை இவர் புகைமூட்டம் போட எடுத்துச்செல்கிறார். மரம் உப்பில் ஊறி விட்டால் அதனை எளிதாக விறகாக பயன்படுத்த முடியாது. ஆனால் அதில் நிறைய புகை வரும். அதனை வைத்து தான் வாழும் வீட்டில் கொசுக்கள், பூச்சிகளை விரட்ட பயன்படுத்திக்கொள்கிறார். வீட்டில் இருந்து கடற்கரைக்குப் போகும்போதே அலுமினிய கண்டெய்னர் ஒன்றை எடுத்துச் செல்கிறார். அதில், கடற்கரையோரம் அலை ஒதுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கிறார். இப்படித்தான் பிளாஸ்டிக் பொருட்கள் சூழலைக் கெடுக்காமல் அதனை அப்புறப்படுத்தி வருகிறார்.  அனைவருக்கும் சைக்கிள் இப்படி கூறுவதற்கு இது அரசு திட்டமல்ல. மணலியில் செயல்படும் கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் சைக்கிள்களை ஊழியர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த நிற...

கடலிலுள்ள உப்பு குறைந்தால், காணாமல் போனால் என்னாகும்?

படம்
pixabay ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி திடீரென கடலிலுள்ள டன் கணக்கிலான உப்பும் காணாமல் போனால் என்னாகும்? உடனே நடக்கும் ரியாக்ஷன், நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் வெடிப்புதான். அடுத்து பிற இடங்களிலுள்ள நீர், கடல் நீரின் அடர்த்திக்குறைவால் சவ்வூடு பரவல் முறையில் உள்ளே வர முயற்சிக்கும். ஆர்க்டிக் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் சிறிது உருகும். ஒரு லிட்டர் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது. நீங்கள் கேட்கும் கேள்வி நிஜமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இப்போதைக்கு எந் பிரச்னையும் இல்லை. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்