இடுகைகள்

புகார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலங்கள் கடந்த பின்பும் காயங்கள் ஆறவில்லை. வேதனை தீரவில்லை

படம்
  காலங்கள் கடந்த பின்பும் காயங்கள் ஆறவில்லை. வேதனை தீரவில்லை கடந்த சனிக்கிழமை இரவு எனது போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. ஆங்கிலச்செய்தியை தமிழ்படுத்தி கூறுகிறேன். "அன்பு, தயவு செய்து உதவுங்கள் ஃப்ரீதமிழ் த.சீனிவாசனின் தொடர்பு எண்ணைக் கொடுங்கள்" என செய்தியில் கூறப்பட்டு இருந்தது. ஆங்கிலச்செய்தி அனுப்பும் அளவுக்கு நண்பர்கள் யாருமில்லையே என்று பார்த்தேன். அனுப்பியவர் பெயர் ராமமூர்த்தி.  ஆம். அவரேதான். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கடித நூல் பற்றிய புகாரை கொடுத்த முன்னாள் நண்பர்தான். இந்த செய்தி வந்ததும் எனக்குத் தோன்றியது. நூல் புகாருக்கு பிறகு அவர் என்னுடன் தொலைபேசியில் பேசவே இல்லை. திடீரென சில மாதங்களுக்கு முன்னர்தான் அவரே தொடர்பு கொண்டு பேசினார். பிறகு பேசுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. திடீரென இப்படியொரு குறுஞ்செய்தி என்றதும் எனக்கு மனதில் தோன்றியது. வேண்டுமென்றே ஏதோ பிரச்னையில் நம்மை இழுக்கிறாரோ என்று....  உள்ளுணர்வு சொன்னது சரிதான்.  இரண்டு பக்க கடிதம் ஒன்றை பச்சை மசியில் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் முன்னாள் நண்பர் திரு. ராமமூர்த்தி. அதாவது, விஷயம் என்னவென்றால

சூழல் பதற்றத்திற்குள்ளாகும் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்?

படம்
  உலகம் அழியப்போகிறது என்ற செய்தியை பெரும்பாலான நாளிதழ்கள், ஊடகங்கள் பல்லாண்டுகளாக கூறி வருகின்றன. குறிப்பாக, இயற்கை பேரிடர்கள் நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை ஏற்படுத்தும்போதும், நோய்த்தொற்று காரணமாக மக்கள் லட்சக்கணக்கில் இறக்கும்போதும் சமூக விஞ்ஞானிகள் இத்தகைய கருத்துகளை முன்வைத்து பேசுவார்கள். இன்று டிஜிட்டல் ஊடகம் அனைத்து மக்களின் கையிலும் உள்ளது. தான் சொல்ல விரும்பும் கருத்தை ஒருவர் சமூக வலைத்தளங்கள், யூட்யூப், விமியோ என்ற தளங்களில் வழியாக எளிதாக உலகிற்கு சொல்லலாம். மக்கள் தங்கள் சூழல் பயத்தை, விரக்தியை பிறருக்கு எளிதாக கடத்தி வருகிறார்கள்.   2012ஆம் ஆண்டு இப்படித்தான் மாயன் காலண்டரில் உலகம் அழியப்போகிறது என சிலர் கூறி பயமுறுத்தினார்கள். இதனால் பீதிக்குள்ளான மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் பிரியத்திற்கு உள்ளானவர்களை கட்டிப்பிடித்து அழுத்து பிரியாவிடை கொடுத்த காட்சிகள் அரங்கேறின. 5,126 ஆண்டுகளைக் கொண்ட மாயன் காலண்டர் சொன்ன குறியீடுகள், மர்மங்களை வைத்து நிறைய கதைகள் உள்ளன.   உலகம் அழிகிறது, அழியவில்லை என்பதை விடுங்கள். ஒருவேளை, உலகம் அப்படி அழிகிற சூழ்நிலை ஏற்பட்டால் நாம் என்ன செய

சூழல் மாசுபாடு பற்றிய தகவல்களை கசியவிடும் நிதித்துறை அதிகாரி! கலகத் தலைவன் - மகிழ் திருமேனி

படம்
  கலகத் தலைவன் இயக்கம் மகிழ் திருமேனி   மகிழ் திருமேனி வணிக ரீதியான படங்கள் எடுப்பவர். அதேசமயம் படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தாத வகையில் நேர்த்தியான திரைக்கதையோடு அமைக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் கலகத்தலைவனையும் கூறலாம். கலகத்தலைவன் தொழிற்சாலை கழிவுகள், சூழல் மாசுபாடுகள் எப்படி மக்களை பாதிக்கிறது. இதற்கு எதிராக போராடுபவர்களை அதிகாரம், அரசு, தொழில்துன்றை என்ன செய்கிறது என்பதை நேர்மையாக பேசியுள்ளது. வஜ்ரா என்ற வணிக வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவில் பெரும் நிறுவனம். குறைந்த எரிபொருளில் அதிக தூரம் செல்லும் வாகனத்தை தயாரித்து அதை சந்தைப்படுத்தும் அறிவிப்பை வெளியிடுகிறது. ஆனால் மாசுபாட்டு ஆய்வில் அதிக மாசு ஏற்படுவது தெரிய வருகிறது. அதை நிறுவனம் மறைத்து பங்குச்சந்தையில் அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கிறது. ஆனால் வஜ்ராவின் மாசுபாட்டு ரகசியம் ஊடகங்களுக்கு கசியவிடப்படுவதால் நிறுவனம் கடுமையான விமர்சனங்களையும் சந்தையில் வீழ்ச்சியையும் சந்திக்கிறது. இதனால் வஜ்ராவின் தலைவர் பழங்குடிகளை கொன்று சாதித்த இரக்கமில்லாத ராணுவ கமாண்டோ ஒருவரை ரகசிய உளவாளியை கண்டுபிடிக்க அமர்த்

மேற்கு நாடுகள் ஹூவாவெய் மீது நடத்திய வன்ம தாக்குதல்!

படம்
  ஹூவாவெய், உலகளவில் முக்கியமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனம். சிறந்த நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றியும் வந்தது. ஆனாலும் அதன் பூர்விகம் சீனா என்பதை யாரும் மறக்கவில்லை. இதை ரென் உணர்ந்தபோது நிறுவனத்தின் பெயரை ஊடகங்கள் வெறுப்புடன் உச்சரித்துக்கொண்டிருந்தனர்.   2005ஆம் ஆண்டு சீனாவில் ஹூவாவெய் நிறுவன அலுவலகத்தில் வேலை செய்த பணியாளர் மூளை அழற்சியால் இறந்துபோனார். உடனே அந்த விவகாரத்தை கையில் எடுத்த ஊடகங்கள், அய்யகோ மெத்தை கலாசாரம் தொடங்கிவிட்டது. அதனால்தான் இப்போது ஒரு உயிர் போய்விட்டது என கூக்குரலிடத் தொடங்கின. மேலும் விவரங்கள் தெரியவேண்டுமா? விளம்பரத்திற்கு பிறகு பாருங்கள் என ஸ்க்ரோல் செய்திகள் போட்டன.   ஹூவாவெய் நிறைய விஷயங்களில் மாறியிருந்தது. ஆனால் கலாசாரம் சார்ந்த விஷயங்களில் பெரிய மாற்றமில்லை. காரணம், ரென்னின் ராணுவப்பணிதான். முன்னமே ரென் சில கொள்கைகளை பின்பற்றுகிறார் என குறிப்பிட்டிருந்தோம். அது வேறொன்றுமில்லை. ராணுவத்தில் இருக்கும் முக்கிய கொள்கையான கீழ்படிதல். அந்த இயல்பு இல்லாமல் ராணுவத்தில் ஒருவர் வேலை செய்யமுடியாது. மேலதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். இல்லையென்றா

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2021- சாதனை படைக்கும் உத்தரப் பிரதேசம்

படம்
கடந்தாண்டு முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தேசிய பெண்கள் கமிஷன் உறுதிபடுத்தியுள்ளது. இப்படி நடக்கும் குற்றங்களில் பாதிக்கும் மேல் இந்தியாவின் முன்மாதிரி வளர்ச்சி பெற்ற மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகிறது. 2021இல் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 30,864 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற குற்றங்களுக்குப்(33,906) பிறகு 2021 ஆம் ஆண்டில்தான் அதிக குற்றங்கள் பதிவாகியுள்ளன. வாழும் உரிமை மறுக்கப்பட்டதாக உணர்ச்சிகளை பயன்படுத்தி ஏமாற்றியதாக பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 11,013 2020ஆம் ஆண்டை விட 2021இல் 30 சதவீதம் புகார்கள் அதிகரித்துள்ளன. திருமண உறவு சார்ந்த குற்றங்கள் 6,633, வரதட்சணை கொடுமை 4,589 இணையம் சார்ந்த புகார்கள் 858 வல்லுறவு, வல்லுறவுக்கான முயற்சி 1,675 பாலியல் ரீதியான பிரச்னை, மானபங்கம் 1,819 காவல்துறை ரீதியான பிரச்னைகள் 1,537 அதிக புகார்களைக் கொடுத்துள்ள மாநிலங்கள் 15,828 புகார்களை கொடுத்து இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக பிரகாசிப்பது உத்தரப் பிரதேசம். இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. வீரத்துறவி யோகி முதல்வராக உ

பெயரை மாற்றிக்கொள்ள தயாராகும் பேஸ்புக்!- என்ன காரணம்?

படம்
  பெயரில்  என்ன இருக்கிறது? பொதுவாக அனைவரும் இப்படி சொல்லுவார்கள். ஆனால் பிராண்ட் பெயர்களைப் பொறுத்தவரை கவனமாக தேர்வு செய்யவேண்டும். இல்லையெனில் பெயர் மக்களின் மனதில் பதியாது. வணிகமே குப்புற விழுந்துவிடும்.  ஸோமாடோ இன்று இந்திதான் தேசிய மொழி என லொள்ளு பேசும் உணவு சேவை நிறுவனம். அதன் இயக்குநர் தமிழர்களுக்கு சமூக வலைத்தளம் வழியாக சகிப்புத்தன்மை பற்றி பாடம் நடத்தியதையும் நாம் பார்த்தோம். ஸோமாடோ, 2010இல் உருவானபோது அதன்பெயர் ஃபுடிபே என பெயர் வைக்கப்பட்டது. பிறகு இரண்டே ஆண்டுகளில் நிறுவனத்தின் பெயரை ஸோமாடோ என்ற பெயரை மாற்றி பிராண்டிங் செய்தனர். இப்போது வெற்றிகரமாக மக்களுக்கு சகிப்புத்தன்மை பற்றி பாடம் எடுக்குமளவு நிறுவனம் வளர்ந்திருக்கிறது.  நெட்பிளிக்ஸ் இன்று உலகமெங்கும் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வளர்ந்து வரும் நிறுவனம். இதன் வேகத்திற்கு அமேசான், டிஸ்னி கூட ஈடு கொடுக்க முடியவில்லை. பாரம்பரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு நெட்பிளிக்ஸ் திரைப்பட விருதுகளையும் பெற்று வருகிறது. இதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் கிப்பி. துணை நிறுவனர் மார்க் ராண்டோல்ப் வேறு பொருத்தமான பெயர் கிடைக்கும் வரை இந்தப்