ஒரு துறையில் வெற்றி பெற்றவர்களை மக்கள் நம்புவது ஏன்?
psychology mr roni ஜான் வெய்ன் கேசி, ஜெப்ரி டாமர் ஆகிய தொடர் கொலைகாரர்களின் உளவியல் என்ன? குற்றச்சம்பவங்கள் பத்திரிகையில் சிறப்பாக விற்பதால், அதை பிரசுரித்து விற்க நாளிதழ்கள், டிவிகள் போட்டி போடுகின்றன. அந்த வகையில் பிரபலமானவர்கள்தான் மேலேயுள்ள இரு தொடர் கொலைகாரர்களும். கேசி எழுபதுகளில் பிரபலமானவர். டாமர் தொண்ணூறுகளில் பேசப்பட்ட ஆள். கேசி, பாலியல் ரீதியான முப்பது ஆண்களை தாக்கி கொன்றார். அவர் குழந்தை போல ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார். அவரின் ஆளுமையில் இரண்டு பக்கங்கள் இருந்தன. ஒன்று குழந்தை போல ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பது. இரண்டாவது, கொடூரமான கொலைகாரர். டாமர் ஒரு குடிநோயாளி. உளவியல் ரீதியாக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தார். இளம் வயதில் பாலியல் ரீதியான பாதிக்கப்பட்டிருந்தார். டாமர், கேசி ஆகியோர் இருவருமே சிறையில் இருக்கும்போது இறந்துவிட்டனர். கெல்லி மைக்கேல் வழக்கு பற்றி தெரியுமா? சிறுவர்களை பாலியல் ரீதியாக சுரண்டிய நர்சரி பள்ளி ஆசிரியர். எண்பது, தொண்ணூறுகளில் கெல்லி பற்றிய விவகாரம் வெளியே வந்தது. அவர் வேலை செய்ய பள்ளியில் 115 புகார்கள், பாலியல் சுரண்டல் தொடர்பாக வ...