ஒரு துறையில் வெற்றி பெற்றவர்களை மக்கள் நம்புவது ஏன்?

 




psychology 
mr roni

ஜான் வெய்ன் கேசி, ஜெப்ரி டாமர் ஆகிய தொடர் கொலைகாரர்களின் உளவியல் என்ன?

குற்றச்சம்பவங்கள் பத்திரிகையில் சிறப்பாக விற்பதால், அதை பிரசுரித்து விற்க நாளிதழ்கள், டிவிகள் போட்டி போடுகின்றன. அந்த வகையில் பிரபலமானவர்கள்தான் மேலேயுள்ள இரு தொடர் கொலைகாரர்களும். கேசி எழுபதுகளில் பிரபலமானவர். டாமர் தொண்ணூறுகளில் பேசப்பட்ட ஆள். கேசி, பாலியல் ரீதியான முப்பது ஆண்களை தாக்கி கொன்றார். அவர் குழந்தை போல ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார். அவரின் ஆளுமையில் இரண்டு பக்கங்கள் இருந்தன. ஒன்று குழந்தை போல ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பது. இரண்டாவது, கொடூரமான கொலைகாரர். டாமர் ஒரு குடிநோயாளி. உளவியல் ரீதியாக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தார். இளம் வயதில் பாலியல் ரீதியான பாதிக்கப்பட்டிருந்தார். டாமர், கேசி ஆகியோர் இருவருமே சிறையில் இருக்கும்போது இறந்துவிட்டனர். 

கெல்லி மைக்கேல் வழக்கு பற்றி தெரியுமா?

சிறுவர்களை பாலியல் ரீதியாக சுரண்டிய நர்சரி பள்ளி ஆசிரியர். எண்பது, தொண்ணூறுகளில் கெல்லி பற்றிய விவகாரம் வெளியே வந்தது. அவர் வேலை செய்ய பள்ளியில் 115 புகார்கள், பாலியல் சுரண்டல் தொடர்பாக வந்தது. சிறுமிகள், சிறுவர்களின் வாக்குமூலம் வழியாக விசாரணை நடைபெற்று 47 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. வினோதமாக உறவு கொள்ளும் முறையை சிறுவர்களிடம் செயல்படுத்தியிருந்தார் கெல்லி. குழந்தைகள் வாக்குமூலம் கொடுத்தாலும், அதில் நிறைய குறைகள், சந்தேகங்கள் இருந்தன. அவர்களுக்கு பல்வேறு உணவுப்பொருட்களை கொடுத்து அழுத்தம் கொடுத்து தேவையானபடி வாக்குமூலம் பெறப்பட்டது. ஐந்து ஆண்டுகள் கெல்லி சிறையில் செலவிட்டிருந்தார். பிறகுதான் வழக்கில் மாற்றம் வந்தது. 

தொடர் கொலைகாரர்கள் என்று எப்படி ஒருவரை கூறுகிறார்கள்?

நான்கு கொலைகளை அல்லது அதற்கு மேல் அவர் செய்திருந்தால் தொடர் கொலைகாரர் என்று அழைக்கப்படுவார். இந்த கொலை விவகாரங்களை டிஆர்பிக்காக ஊடகங்களும் பிரதி விற்பனைக்காக வதந்தி, டெய்லி புஷ்பம் ஆகிய பத்திரிகைகள் அதிக கவனம் கொடுத்து வெளியிடுகின்றன. அடிப்படை நோக்கம் கடந்து தொடர் கொலைகாரர்களை மக்கள் சிலாகிக்கும்படியாக சூழ்நிலை மாறிவிடுகிறது. இப்போது சாதி மாறி திருமணம் செய்பவர்களை அவர்களது உறவினர்கள் வெட்டிக் கொல்கிறார்கள். ஆனால் சிறைக்கு செல்லும்போது, சென்றுவிட்டு திரும்பும்போது பூமாலை போட்டு வரவேற்கப்படுகிறார்களே அதுபோன்ற சூழ்நிலைதான் வெளிநாட்டில் தொடர்கொலைகாரர்களுக்கு கூட ஏற்பட்டது. தொடர் கொலைகாரர்கள் செய்யும் கொலைகள் எல்லாமே உளவியல் ரீதியானவை. எதுவுமே பணம், அதிகாரம், அரசியலுக்கானவை அல்ல. சடங்கு, கொடூரமானவையாக செயல்பாடுகள் இருந்தாலும் அவை பாலியல் ரீதியான மகிழ்ச்சியை அடிப்படையாக கொண்டவை. 

 கொலை செய்வதில் மனநிலை குறைபாட்டை சட்டம் எப்படி அணுகுகிறது?

சட்டம் எழுதப்பட்டிருந்தாலும் அதை ஒருவர் எப்படி நடைமுறைக்கு கொண்டு வருகிறார் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. ஆண்டிரியா யேட்ஸ் என்ற கிறித்தவ பெண்மணி வழக்கைப் பார்ப்போம். இவர் தனது ஐந்து பிள்ளைகளை குளியலறையில் நீரில் அழுத்திக் கொன்றார். அவருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து. பின்னாளில் பொய் சாட்சியை கண்டுபிடித்து வழக்கின் தீர்ப்பு மாற்றப்பட்டது. ஆண்ட்ரியா, மனநல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு முன்னரே மனநல குறைபாடு இருந்தது. இருமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டிருந்தார். சைகோசிஸ், மன அழுத்தம் ஆகிய குறைபாடுகள் இருந்தன. அதற்காக ஏராளமாக மருந்துகள் சாப்பிட்டு வந்தார். குழந்தைகளை எதற்காக கொன்றாய் என்றபோது, சாத்தான் குழந்தைகளை கொல்லக்கூறினான் என்று பதில் சொன்னார். 

உளவியல் குறைபாடு கொண்டவரை சட்டம் தண்டிக்க முடியாதா?

ஒருவர், இன்னொருவரை கொலை செய்கிறார். காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கை வாதாடும்போது என்ன நோக்கம் என்பதை விளக்க வேண்டும். அதை சரியாக விவரிக்காதபோது வழக்கு எடுபடாது. குற்றவாளியை தண்டிக்க முடியாது. இந்தியாவில், சிறுபான்மையினரை அவர்கள் முன்னோர்கள் செய்த குற்றங்களுக்காக கைது செய்து பிறகு குற்றப்பட்டியலை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறார்கள். இதனால், அவர்கள் வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே சிறையில் பல ஆண்டுகளை செலவிட்டிருப்பார்கள். மதவாத நாடு, இந்த வகையில் நீதியை ஒரு குறிப்பிட்ட இனத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துகிறது. 

உளவியல் குறைபாடு உள்ளவர் என்றாலும் அவர் வெடிகுண்டு வைக்கிறார், கொலை செய்கிறார் என்றால், அதை தெளிவாக புரிந்துகொண்டுதான் செய்தார் என்பதை காவல்துறை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் அவருக்கு உளவியல் குறைபாடு இருந்தாலும் கூட நீதிமன்றம் மூலம் கடும் தண்டனை பெற்று தரமுடியும். இதற்கு டெட் காக்சைன்ஸ்கி வழக்கு உதாரணம். இவருக்கு ஆறுமாத குழந்தையாக இருந்தபோதே ஒவ்வாமை பிரச்னை உருவானது. தாயிடமிருந்து பிரித்து வைத்து வளர்க்கப்பட்டார். சிறுவயதில் இருந்தே பிற மனிதர்களின் பேச்சுக்கு எந்த உணர்வையும் வெளிக்காட்ட மாட்டார். மனிதர்களையும் தொடர்புகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. டெட்டுக்கு பிடித்த ஒரே விஷயம் கணிதம் மட்டுமே. கணித பிரச்னைகளை தீர்ப்பதில் ஒரே மனதாய் முழு மூச்சாய் ஈடுபடுவதே மகிழ்ச்சி. 

அவருக்கு ஏற்பட்ட உளவியல் குறைபாட்டை யாருமே அறிந்திருக்கவில்லை. அதை அறியவும் முயலவில்லை. கணித புத்திசாலித்தனத்திற்காக பதினாறு வயதில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். படித்து முதுநிலை பட்டம் பெற்றார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக வேலை செய்ய பணித்தனர். ஆனால், கணிதத்தை படித்து புரிந்துகொண்டு நல்ல மதிப்பெண்களை பெற்ற டெட், பிறருக்கு அதை சொல்லித்தர தெரியவில்லை. இதனால் வேலையை விட்டு வெளியே வந்தார். தன்னை காடு ஒன்றில் இருத்திக்கொண்டார். அவரது சகோதரர், அம்மாவை பார்க்கக்கூட விரும்பவில்லை. 

மனிதர்கள் அணுக முடியாத இடத்தில் வாழ்ந்து வந்தவர், தொழில்நுட்பங்களுக்கு எதிரான மனநிலையை வளர்த்துக்கொண்டார். இதன் எதிரொலியாக நகரிலுள்ள கணினி நிறுவனங்கள், அறிவியல் பேராசிரியர்கள் பொறியாளர்கள், விமானங்கள் என பலருக்கும் வெடிகுண்டுகளை அஞ்சலில் அனுப்பி வைக்கத் தொடங்கினார். இந்த வகையில் ஆறு ஆண்டுகளில் பதினாறு வெடிகுண்டுகளை அனுப்பியதில், 23 பேர் பலியாயினர். 

டெட்டை காவல்துறை பிடித்து வழக்கு பதிவு செய்தது. குற்றவாளியின் சகோதரர் தலையிட்டதன் பெயரில் மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. டெட்டுக்கு உள்ள உளவியல் குறைபாடுகளை அவரே ஏற்கவில்லை. மருத்துவர்கள் சொன்ன குறைபாடுகள் எதையும் மறுக்க முடியாதுதான். அவருக்கு தான் செய்த செயலின் விளைவு, நோக்கம் எல்லாமே தெளிவாக தெரியும். குற்றங்களை தெரிந்தே திட்டமிட்டு செய்தார். 

இணையம் உளவியலுக்கு சாதகமா, பாதகமா?

அதை பயன்படுத்தும் ஒருவர்தான் முடிவு செய்யவேண்டும். இணையத்தில் தனது பெயர் அடையாளங்களை வெளியிடாமல் இயங்க முடியும். பெரும்பாலும் அடையாளமின்மையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வெறுப்பை, வன்மத்தை கொட்ட இணையத்தின் சாட் ஆப்களை பயன்படுத்துவதை அனைவருமே அறிவர். குறிப்பாக, வாட்ஸ்அப், எக்ஸ் ஆகிய குறுஞ்செய்தி, சமூகவலைத் தளங்களில் வெறுப்புபேச்சு வெள்ளமென பாய்வவதை அறியலாம். இந்தியா போன்ற மதவாத நாட்டில், இந்து மதவாதத்தை வளர்க்க அரசே மக்கள் வரிப்பணத்தை எடுத்து போலி செய்திகள், வெறுப்பு பேச்சுகளை வளர்க்க செலவிடுகிறது. அறிவியல் கருத்துகளை வெளியிடுபவர்களை சமூக வலைதளத்தில் இழிவுபடுத்துவது எளிது. அதைத்தாண்டி அவர்களை படுகொலை செய்வதும் இயல்பாகிவிட்டது. இணையம் அனைத்தையும் நச்சாக்கிவிட்டது.

பொதுமக்கள், வெற்றிகரமான மனிதர்களை நம்புவது ஏன்?

இதெல்லாம் உளவியல் சார்ந்ததுதான். மார்க்கெட் போன நடிகர்கள், இயக்குநர்கள் ஈமு கோழி, மரம் வளர்ப்பு தொடங்கி இப்போது ரம்மி விளையாடக்கூப்பிடுவது வரை விளம்பரம் செய்கிறார்கள். நடிப்பு, திரைப்பட இயக்கம், விளையாட்டு, நெடுந்தொடர் பிரபலம், இன்ஸ்டாகிராம் நடிப்பு அசுரர்கள் வரை இன்று பள்ளி கல்லூரி வரை சிறப்பு விருந்தினர்களாக சென்று வருகிறார்கள். மட்டமான தரமில்லாத பொருட்களை விற்பனை செய்யும் விளம்பரத் தூதர்களாகவும் நடிக்கிறார்கள். அவர்களுக்கு லாபம்தான். ஆனால், அவர்களை பின்தொடரும் ரசிகர்களுக்கு பொருளிழப்பு. 
ஒருதுறையில் சிறந்து விளங்குபவர்கள், அனைத்திலும் கெட்டிக்காரர்கள் என்பது உளவியல் உத்தி. இதற்கு ஹாலோ எஃபக்ட் என்று பெயர். இதனால்தான் வாயில் போடுங்க குங்குமப்பூ என்றால் பான்பராக்கை, புகையிலைத்தூளை வாங்கிப் போட்டு புற்றுநோய் வந்து மக்கள் சாகிறார்கள். அவர்கள் தங்கள் அபிமான நட்சத்திரத்தை நம்புகிறார்கள். 

உங்களுக்கு ஒரு நடிகரை பிடிக்கிறது என்றால் அவர் விளம்பரப்படுத்தும் மசாலா, குளிர்பானம், சீட்டுத்திட்டம், உடை, சவரக்கத்தி, சவர களிம்பு, குடிநீர், உணவு, பிஸ்கெட் என பலதையும் வாங்குவீர்கள். இதெல்லாம் மூளையில் ஆழமாக பதிந்துபோவதால் நடைபெறுகிற விஷயம். தமன்னா பாட்டியா என்ற நடிகை குச்சி மிட்டாய் விளம்பரத்திற்கு வந்ததை நாம் மறந்துவிடலாம். ஆனால், அவருடைய ரசிகர்களுக்கு குச்சி மிட்டாயை வாயில் இட்டு சப்பி இழுக்கும்போதெல்லாம் தலைவி நினைவுக்கு வருவார் அல்லவா? 

விளம்பரங்கள் நம்மை தவறாக வழிநடத்துகிறதா?

அவர்களுக்கு பொருட்களை விற்க வேண்டும். எனவே, ஒருவரை வாங்க வைக்க அந்தஸ்து, சாதி, மதம், இனம் என பலதையும் தூண்டிவிட முயல்வார்கள்.இந்திமொழி திணிப்பு காலத்தில் மிட்டாய் நிறுவனம், மொழி முக்கியமல்ல. நட்பாக இருப்பதே முக்கியம் என்ற கருத்தை வலியுறுத்தியது. நன்னம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைப்பது. அந்த சமயம், வட இந்தியர்கள், திராவிட நாட்டை இந்திமொழி திணிப்புக்கு உள்ளாக்க முயன்றனர். தெலுங்கு, கன்னட மொழி பேசுபவர்கள் இந்திமொழிக்கு பணிந்துவிட்டனர். ஆனால் தமிழ்மொழி மக்கள் மட்டுமே பணியவில்லை. மாநில அரசும் உறுதியாக நின்றது. ஆசை, பொறாமையை தூண்டிவிட்டு டிவி, பிரிட்ஜ், வீடுகளை விற்கிறார்கள். முகத்தில் பூசும்களிம்பு, நகை என்பதை பெண்ணுக்கான அங்கீகாரம், மரியாதை, அவை இல்லாவிட்டால் பெண் முன்னேற முடியாது என விளம்பரம் செய்கிறார்கள். மாதவிடாய் பஞ்சுகளை விற்பவர்களும், இதே ரகத்தினர்தான்.  

ஊட்டச்சத்து பானத்தில் வெறும் சர்க்கரைதான் இருக்கும். ஆனால், அதில் ஆயிரம் நுண் ஊட்டச்சத்து இருக்கும். பானத்தை குடித்தால் ஒரே மாதத்தில் விண்ணுயர வளர்ந்துவிடலாம். அறிவுத்திறன் அதிகரிக்கும் என கம்பி கட்டும் அறிவியலுக்கு எதிரான செய்திகளை கூறுவார்கள். இதையெல்லாம் யார் போய் தேடப்போகிறார்கள், அடையாளம் கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்பதே பெருநிறுவனங்களின் நினைப்பு. அப்படியும் யாரேனும் சமூக வலைதளங்கள் மூலம் சொல்ல முயன்றால், சட்டரீதியான நடவடிக்கை என்று கூறி எளிதாக அச்சுறுத்துகிறார்கள். பெரும்பாலும் விளம்பரங்கள் விற்பனைக்காக பொய்யை மட்டுமே சொல்கின்றன. உண்மையைச் சொல்லி பொருட்களை விற்கும் லட்சியத்தை நிறுவனங்கள் எப்போதே தொலைத்துவிட்டன. 

ஒரே நேரத்தில் பலவேலைகள் என்பது சாத்தியமா?

சிலர் அப்படி கூறி சாதிப்பதாக சொல்வார்கள். எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு. ஒரே நேரத்தில் பல வேலைகளை ஒருவர் செய்வது சாத்தியமில்லை. அப்படி செய்தால் அதில் நாற்பது சதவீத உற்பத்தி குறைபாடு ஏற்படுகிறது. கவனக்குறைபாடு காரணமாக நிறைய தவறுகளும் வரலாம். மூளை இயல்பாகவே ஒற்றை வேலைக்கு பழக்கப்பட்ட ஒன்று. ஒரு நேரத்தில் ஒருவேலை அதுவே சிறப்பானது. 

காதலில் விழும்போது என்னவாகிறது?
ஒருவர் காதலில் விழும்போது மூளையி்ல் டோபமைன், ஆக்சிடோசின் ஆகிய வேதிப்பொருட்கள் சுரக்கின்றன. இவற்றின் காரணமாக ஒருவருக்கு ஆர்வம், மகிழ்ச்சி, எதி்ர்பார்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. அடிப்படையில் ஆணும் பெண்ணும் இணைவது மனித இனம் உருவாவதற்குத்தான். அந்த வகையில் காதல் அதை நிறைவேறினால் திருமணம் நடக்கும். அதன் விளைவாக பாலுறவு கொண்டால் பிள்ளைகள் பிறப்பார்கள். மனித மனம் பரிணாம வளர்ச்சி பெறும். 

காதல்மொழி என்றால் என்ன?

ஆண், பெண்ணிடம் நடந்துகொள்ளும் முறை என கொள்ளலாம். முதலில் கனிவாக பேசுவது, அடுத்து ஏதாவது செயல்கள் வழியாக அன்பை வெளிப்படுத்துவது, மூன்று பரிசுகளை வழங்குவது, நான்கு, நேரத்தை செலவிடுவது, உடல் ரீதியான தொடுதல். இவற்றை காதல் வளருவதற்கான அம்சங்களாக உளவியலாளர்கள் கூறுகிறார்கள். 


மூலம் - தி ஹேண்டி சைக்காலஜி ஆன்சர் புக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!