பொய் சொல்வது எதனால்?

 மூளை, ஒருவர் சொல்லும் பொய்யை ஏற்றுக்கொள்கிறதா?

மூளை, ஒருவரின் ஆளுமையை தெளிவாக உருவாக்கி வைத்திருக்கிறது. அதை பாதிக்கும் விதமாக பொய்கள் கூறப்பட்டால் அதை முதலில் ஏற்காதுதான். ஆனால், தொடர்ச்சியாக பொய்களை சொல்லிக்கொண்டே இருந்தால் மனதில் குற்றவுணர்ச்சி குறைந்து அதை ஏற்றுக்கொண்டுவிடும். வலதுசாரி மதவாத கட்சி உறுப்பினர்கள், இப்படி பொய்களை சொல்லியே பிழைப்பு நடத்தி தாங்கள் சொல்வது தங்களது நன்மைக்கு என கூறிக்கொள்கிறார்கள். இதனால்தான் விமான விபத்து நடந்தால் கூட அந்த இடத்தில் நின்று இன்ஸ்டா ரீல்ஸ் போட முடிகிறது. அழகான புகைப்படங்களை எடுக்க முடிகிறது. தாங்கள் செய்யும் செயல் யாரையும் காயப்படுத்தாது என அவர்களாகவே நம்பிக்கொள்கிறார்கள். வலதுசாரி மதவாதிகளின் உலகம் முழுக்க கடந்தகாலத்தில் இருப்பது. அவர்கள் வேற்றுமதம் அல்லது எதிரிகளாக கட்டமைக்கப்பட்டவர்களின் கல்லறைகளைத் தோண்டி அதை வைத்து பிழைப்பு செய்வார்கள். 

மூளைக்கு தொடக்கத்தில் பொய் சொல்லும்போது தடுமாற்றம் இருக்கும். பொய்யை உடல் ஏற்று ஒத்துழைக்காது. எனவே, பொய் சொல்லும்போது ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை எதிரில் உள்ளவர் எளிதாக அறியலாம். உடல் அசைவுகளே முரண்பாடாக இருக்கும். எனவே பொய் சொல்பவர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள இதுவொன்றும் அத்தனை மோசமில்லை. நான் நல்ல நோக்கத்திற்காக, என் குடும்ப நலனுக்காகவே இதை செய்கிறேன் என்று சொல்லி நியாயப்படுத்துவார்கள். அப்போதுதான் அவர்கள் நிம்மதியாக குற்றவுணர்ச்சியின்றி தூங்க முடியும்.

கேரளத்தில் 19பேர் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததை 32 ஆயிரம் பேர் என கூறி பொய்யாக கல்யாண வீடியோ போல இந்துத்துவ பிரசார படம் எடுத்தது வட இந்திய மதவாத குழு. இப்போது அதற்கு தேசிய விருது கொடுத்து அடுத்த பொய்யை கூறியிருக்கிறது இந்து பாசிச ஒன்றிய அரசு. இப்படியாக இந்துத்துவ பிரசார விருதுகள், ஒரு பொய்யைக் காக்க இன்னொரு பொய் என சென்றுகொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட இழிவானவர்கள் மூளை பொய்களுக்கு முழுமையாக பழகி குறைவான குற்றவுணர்ச்சிதான் மனதில் இருக்கும். சிறுபான்மையினர் வீடு இடிக்கப்பட்டு, அவர்களைக் கொல்வதை கூட இயல்பாக பார்த்துக்கொண்டிருப்பார்கள். 

நமக்கு நாமே பொய்களை கூறிக்கொள்வது எதற்காக?

உண்மையை எதிர்கொள்ள முடியாமலும், தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம் என்பதாலும்தான். பட்டியலினத்தவர் ஒருவர் முகத்தில் மிளகாய்பொடி வீசி முதுகில் குத்தி கொல்வது வீரம் என மேல்சாதிக்காரர் நம்புகிறார். பொய்யை நம்புவதன் மூலம் ஒருவரின் பதற்றம் குறைந்து அவர் நெகிழ்வாக இருக்கிறார். ஊக்கமின்மை என்பதை மறைக்க களைப்பாக இருக்கிறேன் என்று ஒருவர் சொல்லிக்கொண்டு உடற்பயிற்சியை தவிர்க்கலாம். போபால் விஷவாயு கசிவு ஆபத்தை உள்ளூரில் ஒரு பத்திரிகையாளர் கண்டுபிடித்து எழுதினார். ஆனால், கோயங்கா, ஜெயின் ஆகியோரின் ஊடக நிறுவனங்களோ அந்த செய்தியை முக்கியமாக கருதவில்லை. வாங்கி காசுக்கு விசுவாசமாக அமைதியாக இருந்தனர். நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது சிறிய காலத்திற்கு வேண்டுமானாலும் உதவக்கூடும். நீண்டகால நோக்கில் பார்த்தால் ஒருவர் அப்படியே தேங்கி நின்று நாற்றமடிக்க தொடங்கிவிடுவார். இன்று இந்தியாவில் உள்ள ஊடகங்கள் பாகுபாடான செய்திகளை வழங்கி காசு பார்த்தனர். அரசு காலை நீட்டும் முன்னரே நாக்கை வெளியே நீட்டி காலணிகளை நக்க தொடங்கிவிட்டனர். விளைவு, இந்து பாசிச ஆதரவு செய்திகளை மக்களுக்கு வழங்கினர். பெரும்பாலான மக்கள் இணையத்திற்கு மாறிவிட்டனர். 

பொய் சொல்வது எதனால்?

ஆபத்து ஏற்படாத பொய்களை கூறினால் வாழ்க்கையை நடத்துவது எளிது. சமூக உறவுகளுக்கும் பிரச்னை இல்லை. படுபாதகமான உலகில் மனிதர்களாக உள்ள நாம் வாழவேண்டுமெனில் சில பொய்கள் தேவைப்படுகிறது. உண்மையை மட்டுமே பேசுவேன் என உறுதியாக இருந்தால் எளிதாக வேட்டையாடப்படும் முதல் மனிதராக நாமே இருப்போம். சிக்கலான சூழல், தனிப்பட்ட நலன், போட்டியை எதிர்கொள்வது ஆகியவற்றுக்காக பொய்கள் பேசப்படுகின்றன. 






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!