இடுகைகள்

தத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளிடம் உருவாகும் அதீத வெறுப்பு - என்ன காரணம்? எப்படி தீர்ப்பது?

படம்
  ஒரு குழந்தை கைவிடப்பட்டு ஆதரவின்றி தெருவில் நிற்கிறது. அல்லது காப்பகத்தில் வளர்கிறது. அந்த குழந்தைக்கு பெற்றோரின் அன்பு, வழிகாட்டுதல் கிடைத்தால் பெரிய சாதனைகளை படைப்பார்கள் என சிலருக்கு தெரிகிறது. இப்படித்தான் பிள்ளைகளை  தத்தெடுப்பது தொடங்குகிறது. இப்படி தத்து வழங்கப்பட்ட பிள்ளைகள், புதிய வீட்டில் மகிழ்ச்சியுடன் ஏற்கப்படுவார்களா, இல்லையா என்பது முக்கியமான கேள்வி. பெரும்பாலும் குழந்தைகளை வெறுக்காமல் இருக்க வளர்ப்பு பெற்றோர் முயல்கிறார்கள். சகித்துக்க்கொள்ள பார்க்கிறார்கள். குழந்தைகளோ வெறுக்கப்பட்டால்தான் அன்பு கிடைக்கும் என புரிந்துகொள்கிறார்கள். இதைபற்றி டொனால்ட் வின்னிகாட் என்ற உளவியலாளர் ஆராய்ச்சி செய்தார். தாய், பிள்ளை என இருவருக்குமான உறவு, குழந்தைகளின் மேம்பாடு ஆகியவற்றை  முக்கிய அம்சங்களாக கருதி ஆய்வு செய்தார்.  இவர் சிக்மண்ட் ஃப்ராய்ட், மெலானியா கிளெய்ன் ஆகியோரின் கொள்கை,ஆய்வு மீது பெரும் பற்றுதல் கொண்டவர். தன்னுணர்வற்ற மனநிலையில் ஒருவர் கொண்டுள்ள எண்ணங்கள், உணர்வுகள் பற்றி ஆய்வுசெய்தார். இரண்டாம் உலகப்போரில் வீடுகளை இழந்த உறவுகளை இழந்த சிறுவர்கள் பற்றி ஆராய்ந்தார். இவர்கள் பல

தெரு நாய்களைப் பராமரிக்கும் மருந்துகடை உரிமையாளர்!

படம்
  ஜெய்ப்பூரைச் சேர்ந்த வீரென் சர்மா பற்றி உங்களுக்குத் தெரியுமா? இவர் கால்நடை, செல்லப்பிராணிகளுக்காக மருந்துக்கடை நடத்துகிறார். அதையும்கூட இவர் தொடங்கவில்லை. சர்மாவின் தாத்தா 1957இல் தொடங்கியதை அப்படியே பின்தொடர்கிறார். அப்போது எதற்கு நாம் இவரைப் பற்றி பேசுகிறோம்?  தெருவில் உள்ள நாய்க்குட்டிகளை காப்பாற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறார். அதற்காகத்தான். 2000இல் நாய்க்குட்டிகளை வணிக ரீதியாக விற்கத் தொடங்கினார். முதலில் தெருவில் இருந்த நான்கு குட்டிகளை வீட்டுக்கு எடுத்து வந்தவர், உள்ளூரில் உள்ளவர்களுக்கு வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளுங்கள் என்ற சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். பிறகு பார்த்தால், அவரது மருந்துக்கடை முழுக்க நாய்களை தத்து எடுக்க நிறைய பேர் வந்துவிட்டனர். இப்படித்தான் தெருவில் இருக்கும் நாய்க்குட்டிகளை வளர்க்க நிறைய பேர்  உருவாகியிருக்கிறார்கள். இந்த வகையில் 2500 நாய்க்குட்டிகளுக்கு புதிய வளர்ப்பு பெற்றோர் கிடைத்துள்ளனர்.  பொதுமுடக்க காலத்தில் வாரம்தோறும் சனியன்று நூறு நாய்களுக்கு உணவளித்திருக்கிறார். இந்த எண்ணிக்கை மெல்ல அதிகரித்து 1200 நாய்களுக்கு சென்றிருக்கிறது. நா

தத்தெடுத்த குழந்தைகள் திரும்ப ஒப்படைப்பு!

படம்
pixabay 2024-15 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கிலான குழந்தைகள், தத்தெடுக்கப்பட்டனர். ஆனால் பல்வேறு காரணங்களால், அவர்களில் 1,100 குழந்தைகள் அரசு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்ற காரா என்ற அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையின் எண்ணிக்கை நாடு முழுக்க தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது. 2014-15 ஆண்டுகளில் 4,362 குழந்தைகள் த த்து கொடுக்கப்பட்டனர். அதில் 387 குழந்தைகள் திரும்ப அரசு அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ளனர். 17-18 இல் 4027 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டனர். இதில் 133 குழந்தைகள் திரும்ப அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளனர். காரணம், குழந்தைகளுக்கு அதிக வயது இருப்பதும் அவர்களால் த த்து குடும்பத்துடன் இணைய முடியாததும்தான். “த த்து கொடுத்த குழந்தைகள் திரும்ப காப்பகங்களுக்கு வருவதில் மகாராஷ்டிரமும், மத்தியப் பிரதேசமும், ஓடிசாவும் முன்னிலையில் உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் உள்ள குழந்தைகள் தத்து கொடுப்பு மையங்கள் பெயரில் மட்டும் செயல்படுகின்றன. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் கௌன்சிலிங் கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்காது ” காரா நிறுவன அதிகாரி.