இடுகைகள்

குளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குளத்தில் இருந்து காணாமல் போன இளம்பெண்! - இருபது ஆண்டுகளாக தேடிவரும் காவல்துறை

படம்
  மோலி பிஷ் மசாசுசெட்ஸ் மாகாணத்திலுள்ள வாரன் பகுதியைச் சேர்ந்தவர் மோலி பிஷ். இவர், 2000ஆம் ஆண்டில்   சிறுவர்கள் குளிக்கும் குளம் ஒன்றில் லைஃப் கார்டாக வேலை செய்துகொண்டிருக்கும்போது காணாமல் போனார், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அணிந்திருந்த நீலநிற நீச்சலுடை மட்டுமே காவல்துறைக்கு கிடைத்தது. ஆனால் அவரது உடல் அல்லது வேறு பொருட்கள் என எதுவுமே கிடைக்கவில்லை. மோலியின் குடும்பத்தினர், காணாமல் போன மகளின் பெயரில் தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி, குழந்தைகளை கண்காணிக்கவென சில பொருட்களை பெற்றோருக்கு வழங்கி வருகின்றனர். மகள் தொடர்பான வழக்கும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. கமின்ஸ் என்ற குளத்தில் மோலியின் சகோதரர் ஜான் லைஃப் கார்டாக   வேலை செய்து வந்தார். எனவே, பள்ளியில் படித்து வந்த மோலிக்கு பதினாறு வயதில் தானும் லைஃப் கார்டாக வேலை செய்யவேண்டுமென ஆசை பிறந்தது. ஆனால் வேலைக்கு சேர்ந்த எட்டே நாட்களில் காணாமல் போய்விட்டார். அம்மா மேகிக்கு, மகள் ஆபத்தான இடத்தில் வேலை செய்கிறாளே என பயம் இருந்தும் மகள் உறுதியாக கூறியதால் மனதை சமாதானம் செய்துகொண்டார். ஆனால் அது நிலைக்காது என அவரும் கூட நினைத்த

தண்ணீரைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டி! அனுபம் மிஸ்ரா -காந்தியவாதி, சூழல் செயல்பாட்டாளர்

படம்
  தண்ணீர் குரு - அனுபம் மிஸ்ரா மகாராஷ்டிரத்தின் வார்தா நகரில் பிறந்த ஆளுமை இவர். புகழ்பெற்ற இந்தி கவிஞர் பவானி பிரசாத் மிஸ்ராவின் மகன். ஆனால் அப்பாவின் வழியில் எதையும் செய்யாமல் தனக்கான செயல்பாட்டை தீர்மானமாக வகுத்துக்கொண்ட மனிதர்.  நீர்சேகரிப்பு, மழைநீர் சேகரிப்பு முறைகளை தன் ஆயுள் முழுவதும் பிரசாரம் செய்தார். எப்படி மெல்லிய குரல் கொண்ட காந்தியின் கருத்து பல கோடி மக்களிடம் சென்று சேர்ந்ததோ அதேபோல்தான் தனது செயல்பாடு வழியாக தனது பெயரை மக்களை சொல்ல வைத்தார்.  வறட்சியில் பாதிக்க ஏராளமான மாநிலங்களுக்கு களப்பணியாக சென்றார். அங்கு சென்று, அம்மக்கள் தொன்மைக் காலத்தில் என்னென்ன முறையில் மழைநீரை சேமித்தார்களோ அதனை அடையாளம் கண்டார். இதனை ஆய்வு செய்வதோடு, நூலாகவும் எழுதினார். இப்படித்தான் எட்டு ஆண்டுகள் ஆய்வு முடிவில் ராஜஸ்தான் நீர்நிலைகள் பற்றி நூல் ஒன்றையும் எழுதினார். நூல் எழுதுவதும் அதனை வெளியிடுவதும் முக்கியம் அல்ல. அதில் முக்கியமான வேறுபாடு, ஆங்கிலம் தெரிந்தாலும் கூட மக்களுக்கு விஷயத்தைச் சொல்லுவதற்கு ஏதுவாக இந்தியில் அனைத்து நூல்களையும் எழுதினார்.  தான் எழுதிய அனைத்து நூல்களையும் கிரியேட்

நீர்நிலைகளில் எளிதாக கழிவுகளை அகற்ற உதவும் புதுமையான கருவி!

படம்
  பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் அஸூர்!  கடல், ஆறு, ஏரி, குளம் குட்டை என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் நிரம்பியுள்ளன. நிலத்தில் பெருகிய பிளாஸ்டிக் குப்பைகள் நீர்நிலைகளிலும் பரவத் தொடங்கி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றை அகற்றுவதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அப்படி ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம்தான் இச்தியோன்(Itchion). இந்த நிறுவனம் தயாரித்துள்ள புதிய தொழில்நுட்பம் கொண்ட கருவி மூலம் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை எளிதாக அகற்ற முடியும்.  இச்தியோன் என்ற நிறுவனத்தின் பிளாஸ்டிக் அகற்றும் கருவியின் பெயர் அஸூர் (azure). இக்கருவி நீர்நிலையில் அடிப்பரப்பில் சென்று பிளாஸ்டிக்குகளை மேலே தள்ளுகிறது. கூடவே பொருத்தப்பட்ட கேமரா மூலம் அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்களை புகைப்படம் எடுத்துக்கொள்கிறது. இதன் மூலம் தினசரி 80 டன் கழிவுகளை அகற்ற முடியும். இக்கழிவுகளை சரியான முறையில் பிரித்து மறுபடியும் பயன்படுத்தலாம் அல்லது மறுசுழற்சி ஆலைகளுக்கு அனுப்பலாம்.  இச்தியோன் நிறுவனத்தின் அஸூர் கருவி, விரைவில் ஈகுவடார் நாட்டின் காலபகோஸ் தீவில் நிறுவப்படவ

குளிரான குளத்தில் ஏரியில் குளித்தால் ஆபத்தா?

படம்
                ஜில்லென்ற குளத்தில் குளிக்கலாமா ? இன்று உலகம் முழுக்க உள்ள வினோதமான துணிச்சல் கொண்ட மனிர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா ? மிகவும் குளிர்ச்சி கொண்ட குளத்தில் ஏரியில் குதித்து குளித்து மகிழ்ச்சியுடன் ஏறி வருகிறார்கள் . எதற்கு இப்படி செய்கிறார்கள் என்றால் அப்படி செய்யும்போது எனது மூளை அமைதியாக உள்ளது . நான் எனது உடல் மீது கவனம் செலுத்த முடிகிறது என்று கூறுகிறார்கள் . புதிதாக விளக்கம் இருக்கிறதல்லவா ? இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்டில்டன் இந்த வினோதமான பழக்கத்தை செய்பவர்தான் . இவர் , அன்டார்டிக் பகுதியில் கடந்த ஆண்டு ஒரு கி . மீ . தூரம் ரத்தத்தை உறைய வைக்கும் நீரில் நீந்தியுள்ளார் . இதற்கு ப்ரீசரில் தினசரி உட்கார்ந்து பயிற்சி வேறு எடுத்துள்ளார் . இன்று கொரோனா பிரச்னை காரணமாக உலகமெங்கும் உள்ள பல்வேறு ஏரி குளங்களில் செல்லுவதற்கு மக்களுக்கு அனுமதி கிடையாது . சரியான டைம் கிடைச்சிருச்சேய் என பல லட்சம் மக்கள் ஜில் குளங்களுக்கு குளிக்க சென்று வருகிறார் . அதிலும் இந்த எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகம் . இதற்கென வின்டர் ஸ்விம்மிங் அசோசியேஷனும் கூட உண்டு . சீனா