இடுகைகள்

ஸ்கின்னர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலம் கடந்து அடையாளம் காணப்பட்ட உளவியலாளர் ஸ்கின்னர்!

படம்
  இயற்கையாக ஒருவரின் மரபணுவில் குணங்கள், இயல்புகள், பழக்கங்கள் உள்ளன என அறிவியலாளர் சார்லஸ் டார்வின் கருதினார். அவரின் ஆய்வு முடிவுகளை அடிப்படையாக எடுத்துக்கொண்ட ஸ்கின்னர், இயற்கை, வளர்ப்பு என இரண்டுமே ஒருவரின் குண இயல்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற கூறினார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பல்வேறு பிரச்னைகளை சமாளித்து உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற சூழலை விலங்குகள் முதல் மனிதர்கள் வரை புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல வாழ முடிகிறது. அப்படி வாழ்ந்தால்தான் அந்த விலங்கோ,மனிதரோ தன் இனத்தை பெருக்கிக்கொள்ள முடியும். ஒருவரின் மரபணு, இயற்கையான சுற்றுப்புறசூழல்கள் என இரண்டுமே ஒருவரின் குண இயல்புகளை வளர்த்தெடுக்கின்றன என்று ஸ்கின்னர் கூறினார். இதைப்பற்றிய கருத்துகளை 1981ஆம் ஆண்டு தி செலக்‌ஷன் பை கான்சீக்குவன்ஸ் என்ற கட்டுரையில் எழுதினார். இந்த கட்டுரை சயின்ஸ் இதழில் வெளியானது.  1936ஆம் ஆண்டு, ஸ்கின்னர் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் கிடைத்த வேலையில் இணைந்தார். இந்த முறை எலிகளை கைவிட்டு புறாக்களை நோக்கி நகர்ந்தார். இந்த முறையில் புறாக்கள் வட்ட வடிவில் உள்ள ஒரு பொருளை கடிகாரச் சுற்றினால் உணவு கிட

தண்டனை கொடுப்பதால் குழந்தைகளின் குணங்களை மாற்றிவிட முடியாது - பி எஃப் ஸ்கின்னர்

படம்
  உளவியலாளர்கள் வாட்சன், பாவ்லோவ் ஆகியோரது ஆய்வுகளை தனது முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டவர் பி எப் ஸ்கின்னர். குணநலன் ஆய்வுத்துறையில் முக்கியமான ஆய்வாளர். முன்னோடிகளின் ஆய்வுகளை மேலும் ஆழமாக்கிய பெருமைக்குரியவர். தனது ஆராய்ச்சி பற்றி புகழ்ந்து பேசி தன்னை புகழ் வெளிச்சத்தில் வைத்திருக்க முயன்றார். ரேடிகல் பிஹேவியரிசம் என்ற கொள்கையை உருவாக்கிய ஆய்வாளர். தொடக்கத்தில் கொள்கை பற்றி ஆர்வம் கொண்டு அதை எழுதவே நினைத்தார். ஆனால் பிறகுதான் ஆய்வுகள் பக்கம் ஆர்வம் கனிந்தது.  1904ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிறந்தவர். ஆங்கில இலக்கியம் படித்தார். நோக்கம் எழுத்தாளர் ஆவதுதான். ஆனால் படிப்பை முடித்தபோது எழுத்தாளர் ஆவதன் மேல் ஆர்வம் முழுக்க வற்றிவிட்டது. இவான் பாவ்லோவ், ஜான் பி வாட்சன் ஆகிய உளவியல் ஆய்வாளர்களின் படைப்புகளை படைத்து அவர்களை முன்மாதிரிகளாக கொண்டார். 1931ஆம் ஆண்டு ஹார்வர்டில் உளவியல் படிப்பில் முனைவர் படிப்பை நிறைவு செய்தார். 1936ஆம் ஆண்டு மின்னசோட்டா பல்கலையில் பாடம் நடத்த தொடங்கினார். பிறகு 1946-47 ஆண்டுகளில் இந்தியா பல்கலையில் உளவியல் துறையை நிர்வாகம் செய்தார். 1948ஆம் ஆண்டு