இடுகைகள்

அல்காரிதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலைவாய்ப்பை தீர்மானிக்கும் அல்காரித நிறுவனங்கள் - பாதகங்களும் விளைவுகளும் - அல்காரிதம் - நூல் விமர்சனம்

படம்
  அல்காரிதம் ஹில்கே செல்மன் ஹாசெட் புக்ஸ் வங்கிகள், பள்ளிகள், தனியார் டெக் நிறுவனங்கள் ஆகியவற்றில் அல்காரித நிறுவனங்கள் எந்தளவு பயன்படுத்தப்படுகின்றன. அதன் விளைவாக ஏற்படும் பாதகங்கள் என்னென்ன, அதை வேலை தேடுவோர் எப்படி எதிர்கொள்வது என நூலாசிரியர் விளக்கியுள்ளார்.  இன்று வேலைக்கு அனுப்பும் ரெஸ்யூம்களை அல்காரிதங்கள்தான் தேர்ந்தெடுக்கின்றன. அவை தேர்ந்தெடுத்து சில தேர்வுகளை வைக்கின்றன. இதில் ஒருவரின் உடல்மொழி, குரல், செயல்பாடு, நிறம், இனம் என அனைத்தும் பார்க்கப்படுகிறது. பிறகு அவரின் திறன் மதிப்பிடப்படுகிறது. இதன் அடிப்படையில் அடுத்தகட்ட வேலைவாய்ப்பு தேர்வுகளை பெரு நிறுவனங்கள் நடத்துகின்றன. அமேஸான் ஃபிளெக்ஸ் போன்ற நிறுவனங்களில் ஒருவர் அல்காரிதம் மூலம் கண்காணிக்கப்பட்டு, குறைகள் எழுந்தால் பெரிதாக விளக்கங்கள் கேட்காமல் ஒரே ஒரு மின்னஞ்சல் மூலம் வேலையை விட்டு நீக்கப்பட்டுவிட முடியும். இதற்கான விளக்கங்களை வேலை இழந்தவர் பெற முடியாது. இதற்காகவே தனி ஒப்பந்தங்களை அமேசான் தயாரித்து வைத்து வேலை செய்பவர்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறது. வாகனங்களில் உள்ள கேமராக்கள் மூலம் ஓட்டுநர்களை கண்காணிப்பது, அந்த

டைம் வார இதழ் / செயற்கை நுண்ணறிவு சாதனையாளர்கள், ஆய்வாளர்கள், தொழிலதிபர்கள் - இறுதிப்பகுதி

படம்
  ராஜி ரம்மன் சௌத்ரி யி ஸெங் சீன அறிவியல் துறை, பேராசிரியர் சீனாவைச் சேர்ந்த பேராசிரியர். யுனெஸ்கோவில் ஏஐ சார்ந்த பாதுகாப்பு விதிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடையே கொள்கை அடிப்படையில் ஒற்றுமை வேண்டும் என கூறுகிற மனிதர். மனிதர்களின் மூளையைப் போல செயற்கை நுண்ணறிவை உருவாக்க மெனக்கெட்டு வருகிறார். வில் ஹென்ஷால்   ரம்மன் சௌத்ரி இயக்குநர், நிறுவனர் – ஹியூமன் இன்டெலிஜென்ஸ் முன்னாள் ட்விட்டர் ஊழியர். எலன் மஸ்கால் பணி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் அங்கு, எந்திரவழிக் கற்றல் கொள்கை சார்ந்த குழுவில் வேலை செய்தார். தற்போது ஹியூமன் இன்டெலிஜென்ஸ் என்ற தன்னார்வ லாப நோக்கற்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அண்மையில் பல்வேறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிய நான்காயிரம் ஹேக்கர்களை வைத்து சோதித்தார். இதன் வழியாக அதன் பாதிப்புகளை எளிதாக கண்டறிய முடிந்தது. ரம்மன் சௌத்ரிக்கு அமெரிக்க அரசு கொடுத்த ஆதரவால் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.   குறைகளை கண்டறிந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பணப்பரிசு வழங்கப்பட்டது. காலிகா ப

குற்றவாளிகளின் கொலைப்பழக்கம் எப்படி தொடர்கிறது?

படம்
    நிகழ்ச்சிகள் பழக்கம் இன்று நெட்பிளிக்ஸ் , அமேசான் , எம்எக்ஸ்பிளேயர் வலைத்தளங்களில் வெப் சீரிஸ்களை பா்ர்க்க வைக்கும் நுணுக்கமான அல்காரிதம்களை பயன்படுத்துகின்றனர் . இதன்படி ஒருவர் என்ன விஷயங்களைத் தேடுகிறார் . என்ன படங்களைப் பார்க்கிறார் என்பது பற்றிய தகவல்களை தேர்ந்தெடுக்கின்றனர் . இத்னை வைத்து 90 நொடிகளில் ஒருவரின் கவனத்தை ஈர்க்கும்படியான விஷயங்களை தொகுக்கின்றனர் . இதனால் ஒருவர் பார்க்கும் அனுபவத்தை வைத்து அவருக்கேற்றபடி நிகழ்ச்சிகளை தொகுக்கின்றனர் . மேலும் படங்களின் வெப்சீரிஸ்களின் முகப்பு படங்களை பிறரது கவனத்தை ஈர்க்கும்படி வடிவமைக்கின்றனர் . இதனை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கின்றனர் . ஒரு வெப்சீரியசில் சில கேரக்டர்களை வைத்து கவர் ஆர்ட் செய்திருப்பார்கள் . ஆனால் அது அனைவருக்குமே பிடித்திருக்காது . எனவே மாற்றி அமைத்தால் தனிப்பட்ட விருப்பத்தின்படி அனைவரும் ரசிப்பார்கள் . நெட்பிளிக்ஸ் இம்முறையை பின்பற்றி வெற்றி பெற்றுள்ளது . உபர் நிறுவனம் , தனது வாகன ஓட்டுநர்களை ஊக்குவிக்க நெட்பிளிக்ஸின் முறையைத்தான் காப்பியடிக்கிறது . பிஸியான டைமிலும் ஓட்டுநர்களை வேலைவ

தவளையில் செல் மூலம் செயல்படும் பயோபாட்! - பரிணாம வளர்ச்சியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்களின் முயற்சி!

படம்
              பரிணாம வளர்ச்சியை காட்டும் பயோபாட் ! டஃப்ட் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தவளையின் செல்களை வைத்து பயோபாட் என்ற உயிருள்ள கணினி ஒன்றை உருவாக்கியுள்ளனர் . அறிவியலாளர்கள் இன்று தங்கள் சிந்தனையை கணினிக்கு அளித்து அதன் மூலம் வாழ்க்கையை வடிவமைக்க முயன்று வருகிறார்கள் . இயற்கையிலுள்ள பல்வேறு உயிரினங்கள் கைகள் , கால்கள் இல்லாமல் வினோதமான உடல் அமைப்பைக் கொண்டு வாழ்கின்றன . இவற்றை கண்காணித்து ஆராய்ச்சி செய்வது கடினம் . இதற்காகவே இந்த உயிரினங்களின் செல்களைக் கொண்டு பயோபாட்டை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் . இதன்மூலம் அவற்றின் பரிணாம வளர்ச்சியைக் கணிக்கலாம் . இவற்றால் என்ற பயன் என்று கேள்விகள் எழலாம் . இவற்றின் மூலம் மைக்ரோபிளாஸ்டிக் , அணுஆயுதக் கழிவுகள் பிரச்னையைக் கூட தீர்க்க முடியும் . இவை கணினி மூலம் வடிவமைக்கப்பட்ட உயிரிகள் (CDO) என்று அழைக்கப்படுகின்றன . இந்த உயிரிகளுக்கு மூளையோ , அறிவுத்திறனோ கிடையாது . இவை உலகின் நடைமுறைப் பிரச்னைகளை தீர்த்து வைப்பதோடு , செல்களுக்கு இடையிலான தகவல்தொடர்புகளை ஆராய்ச்சியாளர்கள் அற

தேர்ச்சியை கணிக்க அல்காரிதங்களே சிறந்தவையா? - மாணவர்களை பிளவுபடுத்தும் அல்காரிதங்கள்

படம்
              தேர்ச்சியைக் கணிக்கும் அல்காரிதம் ! இங்கிலாந்தில் கொரோனா தொற்று பிரச்னையால் , மாணவர்களின் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டு முந்தை ஆண்டு மதிப்பெண்களே வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டது . ஆனால் இதற்கிடையில் அவர்களின் மதிப்பெண்களை மதிப்பிட கல்வி அமைச்சகம் அல்காரிதம் ஒன்றைப் பயன்படுத்தியது . இதன் விளைவாக வெளியான தேர்வு முடிவுகளில் ஏ கிரேட் மாணவர்கள் 40 சதவீதம் பேர் மிகவும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர் . ஆசிரியர்களின் கணிப்பை விட அல்காரிதத்தின் கணிப்பு முறை மாணவர்களின் தேர்ச்சி தரத்தை குறைத்துள்ளது நாடெங்கும் சர்ச்சையானது . மாணவர்கள் தெருவுக்கு வந்து போராடத்தொடங்கினர் . இப்பிரச்னையைத் தீர்க்க இங்கிலாந்து கல்வி அமைச்சகம் , ஆசிரியர்களின் யூக தேர்ச்சி முறையை செயல்படுத்துவதாக அறிவித்துவிட்டது . அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலரும் அல்காரித முறையில் தேர்ச்சியை இழந்துள்ளனர் . இவர்கள் சட்டம் , இலக்கியம் ஆகிய படிப்புகளை படித்தவர்கள் ஆவர் . அல்காரிதத்தில் ஆசிரியர்களின் பரிந்துரை , மாணவர்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண்கள் ஆகியவை உள்ளீடு செய்யப்படவில்லை . என