இடுகைகள்

கானமயில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வன உரிமைச் சட்டத்தை நான் ஆதரிக்கவில்லை - எம் கே ரஞ்சித் சிங், இயற்கைச்சூழல் செயல்பாட்டாளர்

படம்
  எம் கே ரஞ்சித் சிங் வனப்பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட அடிப்படையான விஷயங்களை செய்தவர், திரு. எம் கே ரஞ்சித் சிங். இவர் புலிகளைக் காப்பதற்கான பல்வேறு செயல்பாடுகளை செய்வதோடு, காப்பகங்களை உருவாக்கவும் உதவியுள்ளார். குஜராத்தின் வங்கானர் எனும் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர், ரஞ்சித் சிங். தனது செயல்பாடுகளின் விளைவாக இந்தியாவின் முக்கியமான வனப்பாதுகாப்பு செயல்பாட்டாளராக அறியப்பட்டு வருகிறார். பதினொரு வனப்பாதுகாப்பு சரணாலயங்கள், எட்டு தேசியப் பூங்காங்களை உருவாக்குவதில் பங்களித்துள்ளார். அவரிடம் புலிகளின் பாதுகாப்பு பற்றி பேசினோம். புலிகளின் பாதுகாப்பு திட்டம் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? 1972ஆம் ஆண்டு, புராஜெக்ட் டைகர் குழுவில் செயலாளராக இருந்தேன். அடுத்த ஆண்டு கைலாஷ் சங்கலா இந்த பதவிக்கு வந்தார். புலிகளை பாதுகாத்து அதன் எண்ணிக்கையை பெருக்குவதே எங்கள் குழுவின் நோக்கமாக இருந்த து. எங்கள் குழுவின் லட்சியத்தை எட்டியதாகவே நினைக்கிறேன். இந்த திட்டம் மட்டும் உருவாக்கப்படாமல் இருந்திருந்தால்   நிறைய துணை விலங்கினங்களைக் காப்பாற்ற முடியாமலேயே போயிருக்க