இடுகைகள்

ஸ்பெயின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லூயி புனுவலின் சுயசரிதை! - காதல், காமம், நட்பு , துரோகம், திரைப்படம், வாழ்க்கை

படம்
    louis  bunual  இறுதிசுவாசம்  லூயி புனுவல் தமிழில் சா.தேவதாஸ்  வம்சி பதிப்பகம் ரூ.200  நூல் முழுக்க லூயி புனுவல் தனது பால்ய கால வாழ்க்கை முதல் திரைப்பட அனுபவங்கள் வரை எழுதியுள்ளார். இதில் பலவும் ஆண்டு வரிசையில் எழுதப்படவில்லை என்பதால் நீங்களே இப்படித்தான் இருக்கும் என நிகழ்ச்சிகளை வரிசையாக அமைத்து படித்துக்கொள்ளலாம். மேலும் இதனை எழுத்தாளரும் கூறியுள்ளார். லூயி புனுவெல், தனது நினைவிலுள்ள விஷயங்களை எழுதியுள்ளேன். இதில் சில சம்பவங்கள் தவறியிருக்கலாம் என்று அவரே கூறிவிடுகிறார்.  லூயி புனுவெல் மிகை யதார்த்தவாதி என்பதால் அவர் எடுத்த பல்வேறு படங்கள் இத்தன்மையில் அமைந்துள்ளன. அவரின் சிந்ததனைகளைத் தெரிந்துகொள்வது படம் பார்க்கும்போது அதிர்ச்சி அடைவதை தவிர்க்க உதவும். ஸ்பெயினில் பிறந்தவர் அமெரிக்காவுக்கு சென்று படம்பிடித்தலை பார்வையிட்டு கற்று்க்கொண்டு வந்து அமெரிக்க பாணி கதை சொல்லலை கைவிட்டு தனக்குப்பிடித்தது போல திரைப்படங்களை உருவாக்கியது இவரின் மேதமைக்கு சான்று. படங்கள் தனித்துவம் கொண்டவை என்றாலும் மக்களின் மதச்சார்புத்தன்மை கொண்ட நாடுகளுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தின என்றால் மிகையல்ல. 

ஜனநாயகத்தை மலர வைக்கிறதா டெலிகிராம்?

படம்
இணையம் சார்ந்த கட்டுப்பாடுகளை அமெரிக்க நிறுவனங்கள் மெல்ல ஏற்படுத்தி வருகின்றன. கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்காக அரசியல்வாதிகளுக்கு ஏற்ப பயனர்களின் பதிவுகளை அழிப்பது, நீக்குவது போன்ற செயற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இதனால் பலரும் ஃபேஸ்புக்கின் வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களிலிருந்து விலகிவருகின்றனர். திறமூல மென்பொருள் ஆப்பான டெலிகிராமில் பதிலுக்கு இணைகின்றனர். டெலிகிராம் ரஷ்யாவைச் சேர்ந்த சகோதரர்கள் நிகோலாய், பாவ்லோவ் என்ற இருவரால் 2013 இல் தொடங்கப்பட்டது. என்ன சிறப்பு இதில் இருக்கிறது? நீங்கள் தரவிறக்கினால் மட்டுமே படங்கள் உங்கள் போனில் இறங்கும் இல்லையெனில் க்ளவுட் கம்ப்யூட்டரில் மட்டுமே இருக்கும். இதனால் வாட்ஸ்அப் இயங்கும்போது ஏற்படும் மூச்சுத்திணறல் நம் போனுக்கு ஏற்படாது. குறைந்த ரேம் கொண்ட போனிலும் டெலிகிராம் சிறப்பாக இயங்கும். இதில் எந்த குழுவிலும் நீங்கள் இணையலாம். எந்த அட்மினும் உங்களை கேள்வி கேட்க முடியாது. இல்லையென்றால் அக்குழுவில் உள்ள விஷயங்களை தரவிறக்கிக்கொள்ள முடியும். சரி விடுங்கள். இதனால் நடைமுறை பயன் என்ன? ஜனநாய