உயிர்கொல்லும் விஷ ஊசி! - விக்டர் காமெஸி

உயிர்கொல்லும் விஷ ஊசி ! - விக்டர் காமெஸி அர்கான்சாஸ் நகர நீதிபதியின் உத்தரவுப்படி கடும் குற்றங்களில் ஈடுபட்ட 7 நபர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது . எப்படி மரணம் நிகழும் தெரியுமா ? முதலில் நரம்பு வழியாக மிடாஸோலம் எனும் வேலியம் குடும்பவகை மருந்து ஊசி , கோமாவிற்கு கொண்டு செல்ல போடப்படும் . பின் , அடுத்த வேக்குரோனியம் ப்ரோமைடு ஊசி ( நரம்புதசைகளை செயலிழக்கச்செய்வதோடு மூச்சு திணறவைக்கும் ), அடுத்து பொட்டாசியம் குளோரைடு இறுதியாக செலுத்தப்படும் . இதிலுள்ள பொட்டாசியம் அயனிகள் இதயச்செயல்பாட்டை நிறுத்தும்போது சாவு உறுதி . விஷ ஊசி வழிமுறை அனைத்து மாநிலங்களுக்குமானதல்ல . சில மாநிலங்களில் ஒரே ஊசிதான் . ஆனால் வழிமுறை இதுதான் . கத்தியால் வெட்டுவது , சுடுவது , நச்சுவாயு அறை , தூக்குதண்டனை இவற்றை விட விஷ ஊசி மிதமான தண்டனையாகவே பலருக்கும் தோன்றும் . ஆனால் அமெரிக்க அரசமைப்பு சட்டப்படி 8 வது சட்டப்பிரிவு , குற்றவாளிக்கு குரூரமான தண்டனைகளை அளிப்பதை தடுக்கிறது . 1977 ஆம் ஆண்டு விஷ ஊசிகளைப்பற்றி 3 கொள்கைகளை ஜே சாப்மன் வகுத்தார் எனினும் , அவை குறித்த எந்த ஆதாரமோ , ஆராய்ச்சியோ கிடையாத