"கீதாபிரஸ் நூல்களின் அரசியல் மிக ஆழமானது" -முத்தாரம் நேர்காணல்
"கீதாபிரஸ் நூல்களின் அரசியல் மிக ஆழமானது"
நேர்காணல்:அக்ஷயா
முகுல்
தமிழில் ச.அன்பரசு
இன்றைய நிலையில்
அக்ஷயா முகுல் எழுதிய Gita
Press and the Making of Hindu India, என்ற புத்தகத்தை வாசிக்க பெரும்
தைரியம் வேண்டும். பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து எழுதப்பட்ட நூல்,
ராம்நாத் கோயங்கா விருது(2016) உட்பட ஏராள விருதுகளைப்
பெற்றது.அவரின் புத்தகத்திலுள்ள பல்வேறு விஷயங்கள் மெல்ல நடக்கத்தொடங்கியுள்ள
சூழலில் அவருடன் தொலைபேசியில் நாம் நடத்திய நேர்காணல் இது.
கீதா பிரஸின் தொடக்கத்தை
படிக்கும் இன்று நடக்கும் இந்து ராஷ்டிரா விஷயங்களுக்கும் தொடர்பிருப்பதாக நன்கு உணரமுடிகிறதே
எப்படி?
2010 ஆம்
ஆண்டு எனது நூலுக்கான ஆராய்ச்சியைத் தொடங்கினேன். துல்லியமாக
2011 இன் முற்பகுதி. 1947 ஆம் ஆண்டிலிருந்து இந்து
ராஷ்டிரத்தின் பல்வேறு விஷயங்களும் மாறவில்லை. இந்து மகாசபை,
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கடந்து இதில் கீதா பிரஸ்ஸின்
பங்கு முக்கியமானது. கீதா பிரஸ்ஸின் வெளியீடான கல்யாண் என்ற இதழ்,
பலராலும் வாசிக்கப்பட்டு மனமாற்றம் ஏற்படுத்தியதோ, இல்லையோ பலரது வீடுகளையும் சென்றடையும் அவர்களது திட்டம் வெற்றி பெற்றது.
பின் 1950-51 இல் உருவான இந்து சட்ட மசோதாவுக்குப்
பின், முஸ்லீம்கள் இந்து பெண்களை காதலிப்பது இந்துப்பெண்களின்
சொத்துக்களை அபகரிப்பதற்குத்தான் என்ற பொய்யை திட்டமிட்டு பரப்பினார்கள்(ஆபரேஷன் ஜூலியட்). 2014 ஆம் ஆண்டு அது அப்படியே மீண்டும்
ரிபீட்டானது(லவ் ஜிகாத்). 31% மக்கள்தான்
பிஜேபிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
மகாபாரதம், ராமாயணம்
ஆகிய நூல்களை மலிவான விலையில் வெளியிடும் சிறுநகரைச்சேர்ந்த ஒரு பதிப்பகம் என்றே கீதா
பிரஸ்ஸை குறிப்பிடலாம். இதில் அவர்களை தவறு சொல்ல என்னவிருக்கிறது.
நீங்கள் நினைத்தது
போல்தான் முதலில் நானும் நினைத்தேன். சில மார்வாரி இனத்தவர் ஒன்றிணைந்து
1923 ஆம் ஆண்டு உருவாக்கியதே கீதா பிரஸ். இந்துமத புராணங்கள் மலிவான விலையில் தரமான தாளில் அச்சிட்டு வழங்குகிறார்கள்
என்பது முதலிலேயே ஆச்சர்யம் தந்தது. பின்னர்தான் அது அவர்களின்
அரசியல் திட்டம் என்பதை உணர்ந்தேன். கல்யாண் என்ற அவர்களின் இதழில்
அனைத்து அரசியல் குறித்த விமர்சனங்களும் உண்டு என்று கூறினால் பலருக்கும் அதன் தீவிரம்
புரியாமல் அப்படியா? என்கிறார்கள். ஆர்எஸ்எஸ்
நுழைய முடியாத இடத்திலெல்லாம் அதன் கொள்கைகளைக் கொண்ட எழுத்துக்களை மெல்ல உள்நுழைக்கிறார்கள்.
கீதா பிரஸ் நூலின்
உருவாக்கம் குறித்து கூறுங்கள்.
நூலின் உருவாக்கிற்கு
5 ஆண்டுகளாயின.ஜனவரி 2014 ஆம் ஆண்டு
எழுத்துப்பணிகள் முடிவுற்றன.
2லட்சத்து
20 ஆயிரம் வார்த்தைகள் 1 லட்சத்து 65 ஆயிரம் வார்த்தைகளாக எடிட்டர் ரிவிகா இஸ்ரேல் மூலம் வெட்டித்தள்ளப்பட்டன.
கோரக்பூர், பனாரஸ், அலகாபாத்,
லக்னோ ஆகிய இடங்களிலுள்ள நூலகங்களில் அலைந்து திரிந்து பழைய நூல்களைத்
தேடியது முக்கியமான அனுபவம்.
கீதா பிரஸ் நூலை
தலித்துகளும் படிக்கிறார்கள் என்கிறீர்களே?
அது உண்மைதான். 1926 ஆம்
ஆண்டு தொடங்கப்பட்ட கல்யாண் இதழ் ஆன்மிகத்தை பேசுபொருளாக கொண்டிருந்தால் அதன் திட்டம்
மிகப்பெரியது. இஸ்லாம் ஒரே குரலில் தன் மக்களிடம் அணுகுவது போல்
இந்துத்துவம் மக்களிடம் அணுகமுடியவில்லை. அரசியல் நிகழ்வுகளை
உடனுக்குடன் விமர்சித்ததோடு ராமன் பெயரை 5 லட்சம் தடவை எழுதினால்
நீங்கள் விரும்பியதை பெறலாம் என பிஸினஸ் டீலிங்போலத்தான் பேசியது. 1947 ஆம் ஆண்டிலிருந்தே பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு என்றால், இந்தியாவிலுள்ள இந்துக்களுக்கு ஹிந்துஸ்தான் தேவை என கல்யாண் எழுத தொடங்கிவிட்டது.
கல்யாண் இதழில்
நேரு மட்டும்தான் எழுதவில்லை அல்லவா?
ஆம். அவர் மட்டும்தான்
எழுதவில்லை. 1950 ஆம் ஆண்டு கோரக்பூரில் ஏற்பட்ட வெள்ளத்தை பார்வையிட
வந்த நேருவிற்கு பிரசாத் போடார் தன் காரை பயணிக்க கொடுத்தார். மேலும் கீதா பிரஸ் நூல்களையும் அன்பளிப்பாக அளித்தார். பலமுறை கீதா பிரஸ் நேருவை வற்புறுத்தியபோதும் நேரு அவர்களின் விருப்பத்திற்கு
இணங்க மறுத்துவிட்டார். நேரு, இந்திராகாந்தி,
ராஜீவ்காந்தி ஆகியோர் இறந்தபோது அவர்களின் பத்திரிகையில் அஞ்சலிக்குறிப்பு
தவறாமல் எழுதப்பட்டதன் காரணம், காங்கிரஸில் கீதா பிரஸ் அனுதாபிகள் நிறைய பேர் இருந்ததுதான்.
கீதா பிரஸ் மக்களின்
மனதில் இடம்பிடித்த நேரம் இடதுசாரிகள் தோற்றதற்கு காரணம் என்ன?
இந்தி பேசும் மாநிலங்களில்
ஜாதி, மதம் பேசாமல் அரசியல் சாத்தியமேயில்லை. எனவே ஜாதி,
மதம் உள்ளிட்டவற்றை மறுத்த இடதுசாரிகள் படுதோல்வியைச் சந்தித்தார்கள்.
இன்றுள்ள உலகில் ஜாதி இல்லையென்று எப்படி உங்களால் மறுக்கமுடியும்?
நன்றி: Nandini Krishnan,
manjula narayan
fountainink.in,Hindustan
times
அனுசரணை: முத்தாரம்