பசுமை பேச்சாளர்கள் 3 - (டேவிட் ஆர்ர்) ச.அன்பரசு


பசுமை பேச்சாளர்கள் 3 - .அன்பரசு
டேவிட் ஆர்ர்

1944 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லோவா மாநிலத்தில் டெஸ்மாய்னெஸ் நகரில் பிறந்த துடிப்பான சூழலியலாளர் டேவிட் ஆர்ர். வெஸ்ட்மினிஸ்டர் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்த இவர் மாறும் சூழல்களுக்கேற்ப வாழ்வை அமைத்துக்கொள்வது பற்றியும், சூழல் காக்கும் தேவைகளைக் குறித்தும் பல்வேறு அற்புத உரைகளை நாடெங்கும் நடத்திவரும் முக்கியமான சூழலியல் வல்லுநரும் கூட.

ஓஹியோ மாநிலத்திலுள்ள ஓபெர்லின் கலைக்கல்லூரியில் சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் துறையின் பேராசிரியராக உள்ள டேவிட், சூழலுக்கு இசைவான திட்டங்களை செயல்படுத்தும் குழுவை வளர்த்தெடுக்கும் முயற்சிகளை செய்துவருகிறார். பல்வேறு கல்லூரி, பல்கலையில் குறைந்த கார்பன் வெளியீடு கொண்ட திட்டங்களை செயல்படுத்தவும் உதவி வருவது முக்கியமான செயல்பாடு. டேவிட் ஆர்ரின் வழிகாட்டுதலில் 2006 ஆண்டு ஆடம் ஜோசப் லூயிஸ் சென்டர் ஃபார் என்விரோன்மென்டல் ஸ்டடீஸ் என்ற கட்டிடம் முழுக்க சூரிய சக்தியில் இயங்கும்விதமாக வடிவமைக்கப்பட்டது. 4 ஆயிரத்து 600 .அடியில் கார்பன் வெளியீட்டை குறைக்கும்விதமாக பயோடீசல், சூரியமின்சாரம், வாடகை சைக்கிள்கள் என புதிய முயற்சிகள் தொடங்கப்பட்டதில் டேவிட் ஆர்ரின் பங்கும் முக்கியமானது.


ஓபெர்லின் ப்ராஜெக்ட்டில் ஓபெர்லின் நகரம், கல்லூரி தனியார் கல்லூரிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் சூழல்காக்கும் திட்டங்களை முன்னோடியாக அமல்படுத்திய டேவிட் ஆர்ர். சுற்றுச்சூழல் தீர்வுகளைச்சொல்லும் "சொல்யூஷன்ஸ்" எனும் இதழின் நிறுவன ஆசிரியர். 200 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், விமர்சனங்களையும், கல்வி சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார்.

இவை கடந்து சூழல் தொடர்பாக மொத்தம் ஏழு நூல்களை எழுதியுள்ளார். அதில்  Down to the Wire: Confronting Climate Collapse (Oxford, 2009) என்ற நூல் முக்கியமானது. தன் சூழல் முயற்சிகளுக்கு ஏராள விருதுகளை வென்றவர், எட்டுக்கும் மேலான சூழல் அமைப்புகளில் பங்களித்துள்ளார். டேவிட் ஆர்ரின் முயற்சியில் உருவான ஆடம் ஜோசப் லூயிஸ் சென்டர் 21 ஆம் நூற்றாண்டின் 30 சூழல் கட்டிடங்களில் ஒன்றாக அரசின் ஆற்றல்துறை தேர்ந்தெடுத்து கௌரவித்துள்ளது. "காற்றை சுவாசித்து வாழும் ஒரு பாலூட்டி உயிரியாக நான் உலகை நேசிக்கிறேன்"  என பேசும் டேவிட்டின் பேச்சில் பெருகுகிறது இயற்கை நேய அன்பு

நன்றி: முத்தாரம் வார இதழ்