"அரசின் ஜனநாயக விரோதப்போக்கை எதிர்ப்பது உண்மைதான்"

நேர்காணல்: கிரண் ஜோன்னாலகட்டா
தமிழில்: . அன்பரசு
நன்றி:Fountain ink

இணையச்சமநிலைக்காக இன்டர்நெட் ப்ரீடம் பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கி செயல்பட்டு வரும் கிரண் 2015 ஆண்டின் சேவ் இன்டர்நெட் போராட்டத்தில் முக்கிய பங்களித்து ஃபேஸ்புக்கின் ஃப்ரீபேஸிக் திட்டத்தை ட்ராய்க்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி முடக்கிய இணையத்தின் ஜனநாயகப் போராளி.

உங்கள் பணி குறித்து ஒரு சிறிய அறிமுகம்?

இன்டர்நெட் ப்ரீடம் பவுண்டேஷனின் தன்னார்வ நிறுவனராக தற்போது செயல்பட்டு வருகிறேன். இணையச்சமநிலைக்கு முன்பு ஏற்பட்ட பாதக நிலையில் அரசின் நிதியை, வெளிநாட்டு நிதியை எதிர்பார்க்கும் என்ஜிஓக்கள் எப்படி எங்களுக்கு உதவிடமுடியும்? அந்நிலையில் நான் இந்த அமைப்பை தொடங்கி இணையசமநிலைக்கான முயற்சிகளை செய்தேன். ஆம். அரசின் ஜனநாயக விரோத போக்கை இவ்வகையில் நாங்கள் எதிர்ப்பது உண்மைதான்.

அமெரிக்காவில் இணைய சமநிலைக்கு எதிரான சட்டங்களை ட்ரம்ப் உருவாக்கி அமுல்படுத்துகிறார். இந்தியாவில் என்ன பாதிப்பு ஏற்படும்?

நாம் அமெரிக்காவை விட முன்னேதான் இருக்கிறோம். தற்போதை ட்ராய் தலைவரின் அணுகுமுறையால் நாம் அமெரிக்காவை விட இணையத்தில் சரியான விதிகளினால் முன்னேதான் இருக்கிறோம். மத்திய தகவல் தொடர்பு ஆணையத்தின் தலைவரான அஜித் பாய், இணையச்சமநிலைக்கு ஆபத்தானவரே.நீதிமன்றத்தில் எடுபடும்படியான சட்டங்கள் தகவல் தொடர்பு ஆணையத்திடம் கிடையாது. எனவே இதில் நாங்கள் தலையிட வேண்டியதாயிற்று. இந்த விவகாரத்தின் பாசிட்டிவான கருத்துகளையே நாங்கள் கொண்டிருக்கிறோம்.

இந்திய அரசின் என்கிரிப்ஷன் கொள்கையில் என்ன சிக்கலிருக்கிறது?

அரசின் கொள்கை இன்டர்நெட்டை முழுமையாக கொன்றுவிடும். அக்கொள்கையை கடைபிடித்தால் சாதாரண இணையப்பயனர் தொடங்கி அரசு துறைகள் வரை சட்டத்தினை மீறும்படியாகவே இருக்கும். அதாவது என்க்ரிப்ஷனுக்கான கீகளை அரசு பாதுகாக்கும் என்று சட்டம் கூறுகிறது. மிக குறைவான பாதுகாப்பை அரசு நமக்களித்தால் நாம் பயன்படுத்தும் பிரவுசரே நம்மை இணையதளத்தினை காண அனுமதிக்காது.

இணையத்தில் இடைத்தரகர் பொறுப்பு, கன்டன்ட் ஃபில்டரிங் என்கிறார்கள் அப்படியென்றால் என்ன?

ஃபேஸ்புக் கூறியுள்ள திட்டத்தின் பிளாட்பார்ம் என்ன? என்பது குறித்த தெளிவு அதனிடம் கிடையாது. சட்டத்தின் துணைகொண்டு பல்வேறு சோதனைகளை செய்து பார்க்க நினைக்கிறது ஃபேஸ்புக். ஃபேஸ்புக் இந்தியாவில் பதிவு செய்யப்படாத நிலையில் அதனை நீதிமன்றத்தில் குற்றத்திற்காக நிறுத்தமுடியாது என சில்லறைத் தந்திரங்களை அந்நிறுவனம் கையாள்கிறது.

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் இங்கு அதிகம் முதலீடு செய்ததுதான் வெளியேறுவதற்கான காரணமா?

சீனாவிலிருந்து கூகுள் தன் முதலீடுகளை விலக்கிக்கொள்ள காரணம் அந்நிறுவனத்திற்கு பொருத்தமான சந்தையாக சீனா இல்லை என்பதுதான். விக்கிபீடியா இம்முறையில்தான் இந்தியாவில் நுழைந்தது. ஆனால் அதன் பக்கங்களை பயனர்கள்தான் கட்டுப்படுத்துவார்கள் நிறுவனம் அல்ல. இந்திய பணியாளர்களைக் கொண்டு அந்நிறுவனம் இயங்கியிருந்தால் உள்நாட்டு மொழிகளில் இன்னும் அதிகப்பக்கங்களோடு வளர்ச்சிபெற்றிருக்கலாம். ஆனால் அந்நிறுவனம் இந்தியாவில் தன் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டுவிட்டது.

தொழில்நுட்பம் வளரும் நமது பிரைவசி பாதிக்கப்படுகிறதா?

தொழில்நுட்பம் இதற்கு காரணமல்ல. அதை கொண்டுள்ள சந்தைதான் உண்மையான காரணம்.

பிரைவசி சட்டத்திற்காகவும் போராடி வருகிறீர்கள் அல்லவா?

நமக்கு நிச்சயம் சரியான பிரைவசி சட்டம் தேவை. இன்றைய தொழில்நுட்ப உலகில் எந்த கட்டுப்பாடும் இன்றி உங்களது தகவல்களை ஒருவர் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் மக்களைப் பாதுகாக்கவேண்டிய அரசு ஆதார் கார்டை அமுல்படுத்த,  நீதிமன்றத்தில் பிரைவசிக்கு எதிராக, அது குறித்து அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என போராடிக்கொண்டிருக்கிறது. பிரைவசி என்பது தொழில்நுட்பரீதியான பிரச்னை அல்ல. அது சட்டம் தொடர்பானது.  

இணையச்சமநிலைக்கான சட்டம் அமலாகும் வாய்ப்பிருக்கிறதா?

ட்ராய் அமைப்பு தன் சட்டம் இயற்றும் அமைப்பல்ல. அது இணையசமநிலை குறித்த கோரிக்கைகளை, பரிந்துரைகளை தொலைதொடர்புத்துறைக்கு அனுப்பும். சேவைகளுக்கு விலை நிர்ணயம் மற்றும் அதுதொடர்பான விஷயங்களை முறைப்படுத்தும் ஓர் அமைப்பு மட்டுமே. வேகம் தொடர்பான பிரச்னைகளை முன்னர் ட்ராயிடம் எடுத்துச்சென்றபோது அது தொலைத்தொடர்பு துறையிடம் அதனை சிம்பிளாக அனுப்பி வைத்துவிட்டது. சட்டமாவது இறுதி லட்சியம். இப்போதுதான் முதலடி இதில் எடுத்து வைத்திருக்கிறோம். பார்ப்போம்.  

                            நன்றி: முத்தாரம்    






பிரபலமான இடுகைகள்