எதிர்கால உணவு செயற்கை இறைச்சியா? - விக்டர் காமெஸி
எதிர்கால உணவு செயற்கை இறைச்சியா?
- விக்டர் காமெஸி
2016 ஆம் ஆண்டு மெம்பிஸ் மீட்ஸ் என்ற உணவு தயாரிப்பு நிறுவனம்
1000 டாலர்கள் செலவில் இறைச்சியை தயாரித்து ஆச்சரியப்படுத்தியது. பன்றி, மீன், பால், முட்டை, தோல் ஏன் வெடிமருந்து கூட தயாரிக்க முடியும்.
"தொழில்முறையில் தயாரிக்கும்போது இறைச்சியை 10 டாலர்கள் விலையில் கூட ஈஸியாக உருவாக்கலாம்" என்கிறார் 3 லட்ச ரூபாயில் இறைச்சி பர்கரை உருவாக்கிய டாக்டர் மார்க் போஸ்ட்.
லேபில் இறைச்சி!
1900 ஆம் ஆண்டுகளிலிருந்தே செயற்கை இறைச்சிக்காக ஸ்டெம்செல்களை வைத்து ஆராய்ச்சிகள் தொடங்கிவிட்டன. விலங்கின் தோலிலிருந்து ஸ்டெம்செல்களை தேர்ந்தெடுத்து ஊட்டச்சத்து நிறைந்த திரவத்தில் வளர்த்தெடுத்தால் போதுமானது.
செல்கள் மெல்ல பல்கிப்பெருகும்போது இறைச்சியினுள் தசைநார்கள் உருவாகி பல்க்காக வளரும்.
தேவையானபோது அறுத்து வேகவைத்து ஆச்சி மசாலா தூவினால் சுவையான எலும்பில்லாத இறைச்சி ரெடி.
நாளைய உணவு எது?
செயற்கை பால்
Muufri என்ற நிறுவனம் யீஸ்டில் குறிப்பிட்ட செல்களை விதைத்து பசுவின் தேவையின்றி ஆய்வகத்தில் பால் புரதங்களின் மூலம் பாலை உருவாக்கி சாதித்திருக்கிறது.
பூச்சிகள்
புரதம் நிறைந்துள்ள பூச்சிகளை நமக்கு முன்னமே பல நாடுகளிலும் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிடத்தொடங்கிவிட்டனர் என்றாலும், இன்னும் குளோபல் புகழ் பெற நாட்களாகும். நேரடியாக பூச்சிகள் என்பதை விட மாவு போன்ற வடிவில் பிக்கப் ஆக வாய்ப்புண்டு.
பாசிகள்
நீரில் பக்கவாக வளர்ந்து பரவசம் தரும் பாசிகளை இன்று செம பீக்கில் சாப்பிட்டு உலகத்தையே முந்திக்கொண்டிருப்பவர்கள் ஜப்பானியர்கள்தான். எக்கச்சக்க வெரைட்டியில் எளிதில் வளர்க்க முடியும் என்பதால் அடுத்த சாய்ஸ் பாசிகள்தான்.
3டி இட்லி
3டியில் வீடு கட்டுகிறோம், துப்பாக்கி வருகிறது. சோறு வராதா? எனவே விரைவில் நமக்கான ரெசிபி டிக் அடித்தால் இட்லி வித் கெட்டிச்சட்னியோடு 3டி இட்லி சாப்பிடவும் ஜாதகத்தில் யோகம் உண்டு.
டோடூ கெபாப்
இன்று
டோடூ உலகில் இல்லாததற்கு காரணமே,
அதன் சூப்பர் டேஸ்ட்தான்.
எனவே அதனை ஆய்வகத்தில் தயாரித்து இன்றைய தலைமுறையும் டோடூ கெபாப் ஆர்டர் கொடுக்க வாய்ப்பளிக்கும்படி அறிவியல் வளர்ந்துள்ளது.
தேவை
என்ன?
25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பயோரியாக்டர் இருந்தால்தான் இறைச்சியை உருவாக்கி
10 ஆயிரம் நபர்களுக்கு கொடுக்க முடியும்.
இதில் செல்களை வளர்ப்பதற்கான ரத்த அணுக்கள் கொண்ட திரவம்,
சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்களுக்கு பிரச்னையைத் தரலாம். "உலகத்திற்கே உணவு தயாரிக்கும் அளவு விலங்குகளின் ரத்தம்,
அதில் சர்க்கரை, அமினோ அமிலங்கள் என
அனைத்தும் சேர்ந்தாற்போல கிடைப்பது மிகவும் கடினம்"
என்கிறார் ஆய்வாளர் மார்க் போஸ்ட்.
"இறைச்சிக்கு மாற்றான உணவுப்பொருட்கள் போல ஆய்வக இறைச்சி மாறுபட்டிருக்காது" என தன்னம்பிக்கை தருகிறார் சாஜெத் ரெகெவ்.
2050 இல் அதிகரிக்கும் இறைச்சி பழக்கம்
- 73%(9.7 பில்லியன் மக்கள்)
பண்ணை
பசுவுக்கு செலவாகும் நீர் - 15 ஆயிரம் லிட்டர் (அரிசிக்கு, 2500 லி.)
பண்ணை
விலங்குகளால்
ஏற்படும் கார்பன் மாசு
-7.1 ட்ரில்லியன் கிலோ
நன்றி: வெளியீட்டு அனுசரணை: முத்தாரம் வார இதழ்