நீர் பயன்படுத்துவதில் அடுத்த நூறாண்டிற்கான திட்டமிடுதல் தேவை






நீர் பயன்படுத்துவதில் அடுத்த நூறாண்டிற்கான திட்டமிடுதல் தேவை 
நேர்காணல்: பேராசிரியர் டபிள்யூ.ஜி. பிரசன்ன குமார்
தமிழில்: ச.அன்பரசு

நதிநீர் இணைப்பு என்பது புதிய ஐடியாவெல்லாம் இல்லை. 19 ஆம் நூற்றாண்டில் சர் ஆர்தர் காட்டன் என்பவரால் நதிநீர் இணைப்பு சிந்தனை இந்தியாவில் ஊன்றப்பட்டது. நீராதாரத்துறை செயலரான ராமஸ்வாமி ஐயரால் இது பேரழிவு தரும் முயற்சி என தொடர்ந்து மறுக்கப்பட்டும் வந்தது. ஹைதராபாத்தின் டாக்டர் மர்ரி சன்னா ரெட்டி மனிதவள மேம்பாட்டு மையத்தின் சூழல் பேரழிவு மேலாண்மை பேராசியருமான பிரசன்னகுமாரிடம் உரையாடினோம்.
அடிப்படையிலிருந்தே தொடங்குவோம். நதிநீர் இணைப்பு என்றால் என்ன?
வானிலிருந்து பெறும் மழைநீர் சேகரிப்பு படுகைகள் பலவும் இணைந்துதான் ஆற்றுப்படுகை உருவாகிறது. ஒவ்வொரு ஆற்றுக்கும் பாயும் பகுதி, அதற்கான நிலப்பரப்பு, பன்மைச்சூழல் பரப்பு என அனைத்துமே உண்டு. மனிதர்களுக்கு மட்டுமல்ல தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள், பறவைகள் என அனைத்துக்குமான கருவறைதான் ஆறு. ஆறு முடியும் இடத்திலிருந்து நாம் விவசாயம் செய்ய ஆற்றை நீட்டிக்கிறோம். ஆற்றின் வழித்தடம் என்பதை நிலப்பரப்பும், ஈர்ப்புவிசையும் தீர்மானிக்கின்றன.

நதிநீர் இணைப்பின் பின்னணியை விளக்குங்களேன்.

சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் சர் ஆர்தர் காட்டன் நதிநீர் இணைப்பு என்ற ஐடியாவை எழுப்பினார். 1975 ஆம் ஆண்டு முன்னாள் யூனியன் அமைச்சரான டாக்டர் கே.எல்.ராவ், கங்கை - காவிரி இணைப்பு குறித்து பேசினார். அன்றைய உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் செய்யவும் கூட உத்தரவு பிறப்பித்தது. கடந்த இருபது ஆண்டுகளாக வெள்ளமும், பஞ்சங்களும் கடும் விரக்தியை ஏற்படுத்த, நதிநீர் இணைப்பு பற்றி இன்றும பலரும் யோசிக்கிறார்கள். அனைத்து நதிகளும் இறுதியில் கடலுக்குள் செல்வதால் அதனை நீட்டிக்க முயற்சிக்கலாம்.

மக்களின் நிலங்களுக்கு நீர் கிடைப்பது உண்மைதான். ஆனால் தொலைநோக்கில் இதனால் நிகழும் விளைவுகள் என்ன?

ஆறுகளின் வழித்தடத்தை மாற்றும்போது தற்போதுள்ள காடுகள், வயல்கள் நீரால் முழ்கி அழிவதோடு உயிர்பன்மைச்சூழல் சீரழியும். நதிகளின் வடிவம் மாறுவதோடு பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பிரச்னைக்குள்ளாகும் என்பதால் இவைக்கு மாற்று ஏற்பாடு அவசியம். ஆறுகள் என்பவை விவசாயம், பொருளாதாரம் கடந்து வாழ்வுக்கு அவசியமான ஒன்று. நதிநீர் இணைப்பு என்பது இயற்கையின் சூழலையே மாற்றக்கூடியதுதான். நதிகளை இணைத்து வயல்களுக்கு பாய்ச்சுவது பொருளாதாரரீதியில் சிறப்பானதே. ஆனால் அவ்வளவு தூரம் அவை நீளுமா என்பது சந்தேகம்தான்.

இதற்கு மாற்றுத் தீர்வென்ன?

நதிநீர் இணைப்புக்கு மாற்று சிறியளவிலான மழைநீர் சேகரிக்கப்பட்ட நீர்தேக்கங்களை பயன்படுத்துவதுதான். 2050 இல் 150 மில்லியனாக பெருகும் மக்களுக்கு உணவுத்தயாரிப்புக்கு அதிக நீர் தேவை. உலகம் முழுவதும் நதிப்படுகையில் அணைகளுக்கு எதிராக போராடி வரும்போது, நாம் அதிகளவு அணைகளை கட்டிவருவதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது
   
 நன்றி:GBSNP Varma, fountainink.in
அனுசரணை: முத்தாரம்
   
  


பிரபலமான இடுகைகள்