காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!




காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!- விக்டர் காமெஸி

டிடி1 இல் காணாமல் போனவர்கள் குறித்த அறிவிப்பை அசுவாரசியமாக பார்த்தவர்கள் அதனை மனப்பாடமாகவே கூறுவார்கள். ஆனால் சொந்தங்களை தொலைத்தவர்களின் சோகங்கள் தனிரகம். இங்குள்ளவர்கள் அனைவரும் காணாமல் போனதை நம்பவே முடியாது. சுவாரசியம், வேதனையும் நிரம்பிய கதைகளில் மர்மங்களின் மறுபக்க முடிச்சு எங்கேயென கண்டுபிடியுங்களேன்.

ப்ரூக் ஹென்ஸன்

 அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வாழ்ந்து வந்த 20 வயது இளமை தளும்பும் கார்குழலிதான் ஹென்ஸன். 1999 ஆம் ஆண்டு ஜூலை 3 அன்று தன் நண்பர்களோடு பார்ட்டி ஒன்றுக்கு சென்றார் ஹென்ஸன். தன் பாய் ப்ரெண்டோடு இன்ஸ்டன் சண்டை போட்டு பர்சேஸிங் வெறியேறி, கோபத்தோடு இரண்டு தெரு தள்ளியிருந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு கிளம்பினார் ஹென்ஸன்அவர் அச்சாலையில் தென்பட்டது அன்றோடு சரி. அதற்கப்புறம் அவரை யாருமே பார்க்கவில்லை. 2006 ஆம் ஆண்டு மிராக்கிளாக நியூயார்க்கில் ப்ரூக் ஹென்சன் பெயரில் குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு விண்ணப்பித்திருப்பதை அறிந்தனர். அப்பெண்ணின் முதலாளிக்கு அப்போதுதான் தெரிந்தது ப்ரூக் ஹென்ஸன் காணாமல் போய் 6 ஆண்டுகள் ஆகிவிட்டது என. ஆனால் ப்ரூக் ஹென்ஸன் என்ற பெயரில் வேலைக்கு விண்ணப்பித்த பெண்ணின் நிஜப்பெயர் எஸ்தர் ரீட். அவர் பள்ளிப்படிப்பிலிருந்து நைஸாக நழுவிய எஸ்தர், 1999 ஆம் ஆண்டு தன் அம்மா இறந்தவுடன் வாழ்ந்த இடத்திலிருந்தும் மாயமாகி உலகம் சுற்றும் வாலிபியானார். உண்மையிலேயே ப்ரூக் ஹென்ஸன் எங்கே?

மௌரா முர்ரே

2004 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 112 என்ற சாலையில் விபத்தாகி கார் ஒன்று விபத்தாகி நின்றது. போலீஸ் விசாரணையில் காரில் நர்சிங் மாணவி 21 வயது மௌரா முர்ரே பயணம் செய்தார் என தெரிய வந்தது. டேமேஜ் காரில் பியூட்டி க்வீன் மௌரா எங்கே? என்ற கேள்விக்கு பலரும் திருதிருவென விழித்தனர். அன்று கல்லூரியில் தன் குடும்ப உறுப்பினர்கள் இறந்துவிட்டனர் என்று மௌரா லீவ் கேட்டிருந்தார். பின்னர் அது செம டூப் என கன்ஃபார்ம் ஆனது. போலீஸ் விசாரணையில் பஸ் ட்ரைவர் ஒருவர், விபத்தான காருக்கு அருகில் சாலையின் எதிர்ப்புறம் மௌரா நின்றிருந்தார் என்று துப்பு கொடுத்தார். மௌராவோடு ஆண் தோழர் இருந்ததாகவும் கூறினாலும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏறத்தாழ மௌரா காணாமல் போய் 10 ஆண்டுகளுக்கு பிறகு யூட்யூப் பயனர் ஒருவர், Mr112dirtbag என்று பதிவிட்ட வீடியோவில் அவர் குறித்த உண்மைகள் எனக்கு தெரியும் என்று கூறியவர், இறுதியில் இனிய வாழ்த்துகள் என்று எழுதியது கதையில் செம ட்விஸ்ட்.

பெஞ்சமின் கைல்

 இந்த கேஸில் பெஞ்சமினோடு, அவரது மண்டையிலிருந்து இறந்தகால லைஃபும் காம்போ ஆஃபராக மிஸ்ஸிங். 2004 ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஜார்ஜியாவிலுள்ள ரிச்மண்ட் ஹில் அருகிலுள்ள பர்கர் கிங் உணவகத்தினருகில் நிர்வாண உடலில் தீக்காயங்களோடு உயிருக்கு போராடியவரை, உணவக ஊழியர் தன் கைக்காசை போட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து பெஞ்சமினின் உயிரைக் காப்பாற்றினார். காப்பாற்றி என்ன பிரயோஜனம்? தன் பெயர், ஆதார் எண், ரேஷன் கார்ட், அல்ஜீப்ரா என அத்தனை இறந்த காலத்தையும் வைரஸ் புகுந்த கம்ப்யூட்டராக மறந்திருந்தார் பெஞ்சமின். மஞ்சள், பச்சை, ரோஸ் என அதிரடி கலர்கள் அத்தனையில் நோட்டீஸ் அடித்தும் பெஞ்சமின் அங்கிள் என ஒரு ஈ, கொசு கூட வரவில்லை என்பதுதான் மிராக்கிள் மிரட்டல்.

வால்டர் கோலின்ஸ்

1928 ஆம் ஆண்டில் அம்மா வேலைக்கு சென்றுவிட்ட சமயம், காணாமல் போன 9 வயது சுட்டிதான் வால்டர் கோலின்ஸ். வேலைக்கு போய்விட்டு வந்த வால்டரின் அம்மா கிரிஸ்டீன், வீட்டின் பாத்ரூம் டப், மூலை, கப்போர்டு என அத்தனையும் அலசியவர் தெருவிலுள்ள மூத்திரச்சந்தை விசிட் செய்தும் சொந்த மகன் கிடைக்கவில்லை. பிறகு நம் நண்பர் போலீஸ்தான் ஒரே கதி. அவர்களும் தொப்பை தூக்கி ஓரமாக போட்டு வால்டரை தேடியும் மிஷன் இம்பாசிபிளானது. பத்திரிகைகள் வேறு போலீசை கண்டபடி எழுத, நல்ல பெயர் வாங்க  ஒரு பையனை செட்டப் செய்து வால்டரின் அம்மா கிரிஸ்டீனை கௌரவமாக பார்க்க வைத்தார்கள். ஆனால் அவரோ, இவன் என் பையனில்லை என ஒப்பாரி வைக்க போலீஸ்காரர்களுக்கு முகம் ஹட்ச் நாய்போலாகிவிட்டது. சும்மா விடுவார்களா போலீஸ்? வால்டரின் பல் மருத்துவனை ஆவணப்படி அவன் கிரிஸ்டீனின் மகனில்லை என சொல்லி, கிரிஸ்டீனின் மூளை பிசகு என அவரை மனநல மருத்துவமனைக்கு பேக் செய்தார்கள். அச்சமயத்தில் அந்த வட்டாரத்தில் சிறுவர்களை கடத்தி கொலை செய்த கார்டன் ஸ்டீவர்ட் நார்த்காட் பற்றிய செய்தி பரபரப்பானது. வால்டர் குறித்த அங்க அடையாளங்கள் எதுவும் ஸ்டீவர்டுக்கு அ, ஆ கூட தெரியாததால், கிரிஸ்டீன் தன் மகன் இறக்கவில்லை என்றே நம்பினார்.  


 வெளியீட்டு அனுசரணை: முத்தாரம்