அறிவியல் புத்தகங்கள் அறிமுகம் - தொகுப்பு: விக்டர் காமெஸி
நூல் அறிமுகம்!
The Enigma of the
Owl: An Illustrated Natural History
by Mike Unwin and
David Tipling.
Yale University
Press, Rs. 2,035
இரவு வாழ் விலங்குகளான
ஆந்தைகள் புதிரான தன்மைகளைக் கொண்டுள்ள விலங்குகளாகும். ஆந்தைகளின்
200 க்கும் மேற்பட்ட படங்களோடு, பல்வேறு கட்டுரைகளும்
அடங்கியுள்ள இந்நூலில் அப்பறவை குறித்த மர்மங்களை மைக் அன்வின் விளக்கியுள்ளதோடு இதுவரை
நாம் அறியாத பல்வேறு ஆந்தைகள் குறித்தும் விளக்கியுள்ளார்.
The Death and Life of
the Great Lakes
by Dan Egan.
W. W. Norton: 2017
Rs. 1,860
நாட்டிலுள்ள பெரிய
ஏரிகள் அனைத்தும் சுற்றுச்சூழலின் விளைவால் அழிவை சந்திக்கவிருக்கின்றன என்பதை இந்நூலில்
அழுத்தமாக சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் டான் ஈகன்.செயிண்ட் லாரன்ஸ் சீவேயில்
மனிதர்களின் தலையீட்டில் அதன் இயல்பான உயிரினங்கள் அழிவைச் சந்தித்ததை விளக்கும் ஆசிரியர்,
நீர்நிலையை சுத்தப்படுத்த இறக்குமதி செய்யப்பட்ட கெண்டை மீன்கள் சூழலுக்கு
எப்படி கேடாக மாறின என்பதை விளக்கும் இந்நூல் இயற்கை காதலர்களுக்கு பிடித்தமானது.
Curators: Behind the
Scenes of Natural History Museums
by Lance Grande.
University of Chicago
Press, Rs. 2,329
வரலாற்று மியூசியங்கள்
பல்வேறு உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை எடுத்துக்காட்டும் ஒரே ஆதாரம். கி.மு. 530 ஆம் ஆண்டில் மெசோபோடோமினியன் நகரில் இளவரசி என்னிகால்டியால்
தோற்றுவிக்கப்பட்ட மியூசியமே உலகில் மிக பழமையானதாகும்.
இயற்கை வரலாற்று மியூசியத்தின் படைப்புகள், முக்கிய
ஆராய்ச்சியாளர்களை ஆசிரியர் அறிமுகப்படுத்துவது
நூலின் தரத்தை உயர்த்துகிறது.
Never Out of Season:
How Having the Food We Want When We Want It Threatens Our Food Supply and Our
Future
by Rob Dunn
Little Brown Rs.
1,130
நம் முன்னோர்கள்
பல்வேறு வகையிலான உணவு தானியங்களை பருவகாலங்களுக்கேற்ப உண்டனர். ஆனால்
இன்று அமெரிக்காவில் இன்றைக்கு அதிகம் உண்ணப்படுவது மக்காச்சோளம்தான். அதுவே சீனாவில் குறிப்பிட்ட சிலவகை அரிசிவகைகள்தான். மாறும் சூழ்நிலைகள், விவசாய முறைகள் என பலவற்றையும் விளக்கும்
ஆசிரியர் ராப் டன் உணவு உற்பத்தி என்பது வருங்காலத்தில் எவ்வளவு சிக்கலாக மாறும் என்பதை
திறமையாக விளக்குகிறார்.
Against Empathy: The Case for Rational Compassion
by Paul Bloom.
Ecco, Rs. 1756
ஒருவரின் மீது இரக்கம் கொள்வது நல்லது என்பதுதான் பெரும்பான்மையோர் எண்ணம். நம் பெற்றோர்
நமக்கு பிறர் மீது இரக்கம் காட்டுவது குறித்து கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் ஆசிரியர் பால், அப்படி இரக்கம் காட்டக்கூடாது
என்று வாதிடுகிறார். தனிப்பட்ட வாழ்க்கை உதாரணங்களுடன், இன்றைய உலகிற்கு
தேவை குறைந்த இரக்கம் என்று தீவிரமாக புதிய கருத்துகளை உரையாடல் போல முன்வைப்பது வாசிக்க
வைக்கிறது.
ADHD Nation:
Children, Doctors, Big Pharma, and the Making of an American Epidemic
by Alan Schwarz.
Scribner, 2016 Rs.
1822
ADHD நோய்
குறித்த விளக்கங்களை பரபரவென சொல்லிச்செல்லும் இந்நூல், அதன்
மீதான குற்றச்சாட்டுக்களை நம்பிக்கையான மொழியில் விவாதிக்கிறது. பல்வேறு ஏடிஹெச்டி பாதிப்புகளுக்கான சரியான தெரபி தீர்வுகளையும் ஆலன் இந்நூலில்
பரிந்துரைக்கிறார்.
The Perpetual Now: A
Story of Amnesia, Memory, and Love
by Michael D.
Lemonick
Doubleday, 2017
Rs.1819
சயின்டிஃபிக் அமெரிக்கன்
ஆசிரியரான மைக்கேல் டி லெமோனிக் எழுதியுள்ள முக்கியமான நூல் இது. முன்னுரையில்
"அனுபவத்தின் வழியே நாம் பெறும் நினைவுகள் நம்முள் பதிவாகவில்லையென்றால்
நம்மைப் பற்றிய அடையாளமே இருக்காது" என்று கூறுவது நூலின்
தன்மைக்கான சின்ன சாம்பிள். ஞாபக மறதி கொண்ட லானி சூ ஜான்சன் குறித்தான பல்வேறு கட்ட நினைவுகள் ஆராய்ச்சிகளை
விளக்கும் நூல் இது.
Suggestible You: The
Curious Science of Your Brain’s Ability to Deceive, Transform, and Heal
by Erik Vance.
National Geographic,
Rs.1692
உடலில் ஏற்படும்
நோய் அறிகுறிகளுக்கு சரியான சிகிச்சை அல்லது போலி மருந்துகள் கொடுத்தாலும் நோய் குணமாகிவிடுகிறது. எப்படி?
20 ஆண்டுகளாக பல்வேறு மருந்துபோலிகள் குறித்து அவை மூளையில் ஏற்படுத்தும்
விளைவுகளையும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள். பார்கின்சன், மனஅழுத்தம் போன்றவற்றுக்கு போலி மருந்துகள்
சிறப்பாக பலன்தருகின்றன. உண்மையான மருந்துகளை பயன்படுத்தவே ஆசிரியர்
முன்னுரிமை அளிக்கிறார். போலி மருந்துகள் குறித்த கண்டுபிடிப்புகள்,
அதன் தன்மை, வகைகள் குறித்தவை படிக்க சுவாரசிய
மொழியில் இனிமை.