பிளஸ் பாய்ண்ட் -ஜெ.திருமால் முத்து
காரணம் கண்டுபிடி!
இன்டர்வியூக்களில்
சில கேள்விகள் திரும்ப திரும்ப கிளிஷேவாக கேட்கப்படும். திரும்பத்
திரும்ப ரீப்பீட் என்று டென்ஷன் ஆகாமல் அக்கேள்வியின் காரணத்தை ஆழமாக உள்வாங்கினால்
உங்களுக்கு வேலை நிச்சயம்.
வேறு வேலைக்கு
ஏன் முயற்சிக்கிறீர்கள்?
வேலையை விட்டு
வருவதில் உறுதியாக இருக்கிறீர்களா என்பதை உறுதிசெய்வதற்காக கேட்கப்படும் கேள்வி இது. அந்த கம்பெனி வேஸ்டுங்க சார், மேனேஜர் முசுடு என்றெல்லாம் கம்ப்ளைண்ட் கொடுத்தால் வேலை காலி. புதிய வேலை தொடர்பான அப்டேட் தகவல்களோடு, தற்போது நேர்காணலுக்கு
வந்திருக்கும் நிறுவனத்திலுள்ள எதிர்கால வாய்ப்புகளை சொன்னால் சூப்பர்.
உங்களின் பிளஸ், மைனஸை
சொல்லுங்கள்?
" பிளஸ்
மைனஸெல்லாம் எவரெடி, நிப்பான் பேட்டரில இருக்கும் சார்.
கடையில வாங்கிப் பார்த்துக்கோங்க" என்றெல்லாம்
உடனே பொறுமை இழக்க கூடாது..ந்தால் எப்படி? பிளஸ், மைனஸை நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை விட,
உங்களைப் பற்றி நீங்கள் எவ்வளவு தெரிந்துவைத்துள்ளீர்கள் என்பதை அறிவதற்கான
கேள்வி இது.
உங்களின் வேலையில்
நீங்கள் சந்தித்து சவால்கள் என்னென்ன?
நீங்கள் உங்கள்
வேலையில் எதனை சவால்களாக நினைக்கிறீர்கள் என்பதை பற்றி அறிய போடும் கொக்கி இது. பிரச்னைகளை
எப்படி அணுகுகிறார், தீர்க்கிறார் என்பதை அறிய இது சூப்பர் கேள்வி.
அடுத்த ஐந்து ஆண்டுகளில்
நீங்கள் எப்படி இருப்பீர்கள்?
நான் தமிழக அமைச்சரவையில்
இடம்பிடித்திருப்பேன் என்று நீங்கள் கூறினாலும் அதை யாரும் பொய் என்று கூறவா போகிறார்கள்? நீங்கள்
தேடிவந்திருக்கும் வேலை மூலம் உங்கள் மனதிலுள்ள லட்சியத்தை அடைய முடியும் என நம்புகிறீர்களா
என்பதை அறிந்துகொள்ள இக்கேள்வி நேர்காணல்களில் தொடர்ந்து கேட்கப்படுகிறது.
உங்களது தோல்வி
முயற்சிகள் குறித்து கூறுங்கள்.
உங்களை பெத்த அவமானத்துக்கு
உள்ளாக்கும் கேள்வி இது என மூக்கு விடைத்தால் வேலை அம்பேல். தோல்வி
குறித்து விவாதித்தால்தானே அதிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்தும் பேசமுடியும்.
அதை குறிவைத்து கேட்கப்படும் கேள்வி இது.
ஆபீஸ் ரொமான்ஸ்
பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இது ஆபீஸ் கொள்கைகளை
எப்படி மதிக்கிறீர்கள் என்பதை அறிய உங்களை போட்டு வாங்கும் கேள்வி. நான் முதல்ல
வேலை செஞ்ச ஆபீஸ்ல வினோதினி, ரம்யா ன்னு ரெண்டு பிகர் மேல உசுரே
வெச்சிருந்தேன் சார் என்றெல்லாம் காதல் ஃபீவரில் உளறினால், வேலைக்கு
நோ சான்ஸ். கடமையில் கண்ணாக இருந்து பதில் சொன்னால் வேலைக்கு
வெல்கம் உண்டு.
(நன்றி: முத்தாரம்)