பசுமை பேச்சாளர்கள் 1 எட் பெக்லே ஜூனியர் -ச.அன்பரசு




பசுமை பேச்சாளர்கள் 1 - .அன்பரசு
எட் பெக்லே ஜூனியர்.
இயற்கை சூழலை காக்க இரண்டு விஷயங்கள் செய்யலாம். அரசும், தனியார் நிறுவனங்களுமே பார்த்துக்கொள்ளும் என நம்புவது. இல்லையென்றால் நாமே செய்வோம் என பொறுப்பை கையிலெடுப்பது. இதில் எட் பெக்லே ஜூனியர் இரண்டாவது ரகம்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1949 ஆம் ஆண்டு செப்.16 ஆம் தேதி பிறந்த எட் பெக்லே ஜூர், பல்வேறு திரைப்படங்களிலும் டிவி தொடர்களிலும் நடித்து களைத்த நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும் கூட.
லாஸ் ஏஞ்சல்ஸில் தன் மனைவியோடு சோலார் வீட்டில் வசித்துவரும் பெக்லே, தான் பங்கேற்ற பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு சைக்கிள் மிதித்து வந்து ஆச்சரியம் தருவார். மாற்றங்களை பிறரிடம் எதிர்பார்க்கும் உலகில் மாற்றங்களை தன்னிடமிருந்தே தொடங்குவது என செயல்படும் பெக்லே ஆச்சரியமானவர்தானே!

1970 ஆம் ஆண்டு முதன்முதலாக  எலக்ட்ரிக் வாகனத்தை தன் பயணத்திற்கு தேர்ந்தெடுத்தார் பெக்லே. வீகன் உணவுப்பழக்கத்தை கடைபிடிக்கும் இவர், 1585 சதுர அடியில் சோலார் ஆற்றலில் இயங்கும் பசுமை வீட்டை கட்டி பலரையும் வாயை பிளக்க வைத்தார். தன் நிலத்திலுள்ள செடிகளையும் கூட குறைவான நீர் தேவைப்படும் மண்ணுக்கேற்ற நாட்டுச்செடிகளை நட்டு பராமரித்து வருகிறார் எட் பெக்லே. நண்பர்களுடன் குறைவான கார்பன் வெளியிடும் போட்டி, தன் சூழல் நம்பிக்கைகளை தானே கிண்டல் செய்வது என எசகு பிசகாக எதையாவது செய்து சூழல் குறித்த கவனத்தை ஈர்த்துவருவது பெக்லே ஸ்பெஷல்.

சூழல் காக்கும் லைஃப்ஸ்டைலை தன் வாழ்வாக கொண்டாடிவரும் பெக்லே, சூழல் குறித்த உரைகளில் பார்வையாளர்களிடம் நகைச்சுவையோடு பிரச்னைகளை அதனை பேசி வசீகரிப்பது இவரின் தனித்துவம்.    

எழுதிய நூல்கள்
1.Living like ed: A guide to the eco-friendly life(2008),
2.Ed Begley Jr's Guide to Sustainable living: Learning to Conserve Reources and Manage an Eco-Conscious Life(2009)
3. A vegan Survival Guide for the Holidays(2014)
நன்றி: முத்தாரம் வார இதழ்