நீங்கள் காலேஜ் ட்ராப் அவுட்டா? - ராஜா திரையன்




நீங்கள் காலேஜ் ட்ராப் அவுட்டா? - ராஜா திரையன்

நீ காலேஜை விட்டு நின்னுட்டியா? லைஃப் போச்சு, எப்படி உருப்பட போறீயோ என காலேஜை கைவிட்ட லோக்கல் ஐன்ஸ்டீன்களான நம் பயலுகளை கரிச்சு கொட்டாத அப்பன் ஆத்தா உலகிலேயே கிடையாது. சரி இதில் யார் பெஸ்ட்? வீட்டுக்கு நல்லபிள்ளையாய் நடந்துகொண்டு நார்த்தங்காய் ஊறுகாயோடு தயிர்சாதம் எடுத்துக்கொண்டு போய் டிஸ்டிங்ஷனோடு டிகிரி வாங்கி, ஐடி கம்பெனிக்கு வேலைக்கு போய்க்கொண்டு இருப்பவர்களா, அல்லது காலேஜை விட்டு நின்று மனதிற்கு பிடித்த ஸ்டார்ட் அப் ஐடியாக்களில் உலகையே வியக்க வைத்துக்கொண்டிருப்பவர்களா? ஜாலி அலசல் பார்ப்போம் கமான் லெட்ஸ் கோ...

அமெரிக்காவில் 11,745 தலைவர்களை ஆராய்ந்தபோது, 94% விகிதத்தினர் காலேஜூக்கு அட்டனன்ஸ் போட்டுள்ளனர். இதில் 50% நபர்கள் எலைட் பள்ளியில் படித்துள்ளனர் என்பது முக்கியம். ஆனால் காலேஜில் கட்டிய காசுக்கு 80% முக்கிய தலைவர்கள் சரியாக சென்றுள்ளனர். இதில் 11 ஆயிரம் பேர் கடும் வறுமையில் இருந்தனர் என்று சொல்லும் நிலைமையிலெல்லாம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் பள்ளிகள் மொழிப்பயிற்சியை தாண்டிய ஒன்றை தருவதற்காகவெல்லாம் அணுகப்படபோவதில்லை.

ஜெயித்தவர்கள் அனைவருமே கல்லூரியில் கற்றுத்தரப்படும் விஷயங்களுக்கு முன்னமே பல்வேறு விஷயங்களை தானாகவே கற்றுக்கொண்டவர்கள். எப்படி தொழில் தொடங்குவது, ஐடியா, முதலீடு என்பதை அறிந்தவர்கள். ஆனால் அனைவருக்கும் இதே வாய்ப்பும் சிந்தனையும் தோன்றுவதில்லை. அமெரிக்காவில் 34 மில்லியன் மாணவர்கள் கல்லூரியில் படித்தாலும் டிப்ளமோ பெறாமல் டிராப்அவுட் ஆவது ஆண்டுக்கணக்கு.    


கல்லூரி இனி பெரிய மரியாதையாக பார்க்கப்பட வாய்ப்புமில்லை. ஏனெனில் கல்லூரி படிப்பு என்பது அனைவருக்கும் பொருத்தமானதல்ல. மிகப்பெரிய மாஸ் வெற்றியை என்னுடைய ஐடியா மூலம் அடைவேன் என்ற லட்சிய வெறி இல்லாதவர்கள், அமைதியாக பட்டை சாதம் சாப்பிட்டுவிட்டு நெட்வொர்க்கிங் புக்கை விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கலாம். காலேஜ் டிராப்அவுட் மில்லியனர் என்பதற்கு மார்க் ஸூக்கர்பெர்க், பில்கேட்ஸ் போன்ற சில அரிய சாம்பிள் மனிதர்களே உள்ளனர்.

 நன்றி: முத்தாரம் வார இதழ்



பிரபலமான இடுகைகள்