நூல்வெளி அறிமுகம் -ப.அனுஷா
நூல்வெளி! -ப.அனுஷா
Make Your Bed
by William H. McRaven
Rs. 10.80
வில்லியம் மெக்ராவன் தன் நீண்ட கால சீல் எனும் கப்பல்படை அனுபவங்களை டெக்ஸாஸ்
பல்கலையின் மாணவர்களுக்கு சொல்லக்காத்திருந்தார்.
மூன்றே மூன்று விதிகள்தான். 10 மில்லியன்
நபர்கள் அவரது பேச்சை ரசித்து கேட்கும்படியான இருந்தது. பாசிட்டிவ்
எண்ணம், க்யூட் கதைகள், பிராக்டிகல் முறை
என வாழ்வின் தவிப்பு தருணங்களிலும் மனதிற்கு தைரியம் தரும் நூல் இது.
The Power of Time
Perception
Jean Paul Zogby
Rs. 6.44
றெக்கை கட்டிப்பறக்கும்
நேரத்தை யாராலும் நிறுத்திவைக்கமுடியாது. ஆனால் அந்த நேரத்தை குறித்து அலர்டாக
இருந்தால் டன் கணக்கில் சாதிக்கலாமே! நம் மூளை காலத்தை எப்படி
புரிந்துகொள்கிறது, நேரத்தை
எப்படி உணர்ச்சிகள் உறிஞ்சுகின்றன, வாழ்வினை நேரத்தினை குறைத்து
நீட்டிப்பது எப்படி சொல்லித்தருகின்ற ரைமிங்காக சொன்னாலும் சூப்பர் டைமிங் நூல் இது.
Astrophysics for
People in a Hurry
Neil deGrasse Tyson
(Author)
Rs. 12.14
பால்வெளி வாழ்வு, அங்கு
காலத்தின் செயல்பாடு, உயிர்களை உள்ளடக்கிய பூமி, பிற கோள்களில் உயிர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு
ஆழமும் விரிவுமாக பதில் சொல்கிறார் நீல் டைசன்.
The Power of a Plant
Stephen Ritz
Rs.26.99
பள்ளி ஆசிரியராக 30 ஆண்டுகளுக்கு
மேலாக பணியாற்றியுள்ள ஸ்டீபன் ரிட்ஸ், தன் பள்ளியின் வகுப்பறையிலுள்ள
பிரச்னைகளை தீர்க்க தேர்ந்தெடுத்த வழி தாவரங்கள். கற்றலின் அடிப்படையே
தாவரங்களை வளர்ப்பது எனத்தொடங்கி, தன் பள்ளியில் மாணவர்களின்
கற்றல் திறன், ஒழுக்கம் உட்பட பல்வேறு செயல்பாடுகளையும் எப்படி
உருவாக்கி தன் பள்ளி உட்பட சவுத் பிராங்க்ஸ் என்ற ஊரை எப்படி மாற்றினார் என்பதை பேசும்
நூல் இது.
The Plant Paradox
Steven R., M.D.
Gundry
Rs. 16.79
குளூடேன் இல்லாத
டயட் உணவுகளுக்கான நூல்களே அமெரிக்காவில் உண்டு. ஆனால் உண்மையில் குளூடேன்
இல்லாத உணவுதான் ஆரோக்கியமான உணவா என்பது பற்றி பல்வேறு சுவையான தகவல்களோடு விளக்குகிறார்
ஆசிரியர் ஸ்டீவன். குளூடேனை விட ஆபத்தான லெக்டின் என்ற நச்சு
குறித்த அறிமுகம் முக்கியமானது. உணவு குறித்த அவசியமான கையேடு
இது.
The Genius of Birds
Jennifer Ackerman
Rs. 11.59
மனிதர்கள் வாழும்
உலகிலேயே வாழ்கிறது என்றால் பறவைகளுக்கு எவ்வளவு ஐக்யூ தேவை. இந்நூலில்
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள புத்திசாலி
பறவைகளை குறித்த தகவல்கள் சுவாரசியமான மொழியில் எழுதியுள்ளார் ஜெனிஃபர். 30
ஆயிரம் விதைகளை பல கி.மீ தொலைவில் மண்ணில் புதைத்து
பின் அதனை தேவைப்படும் போது சாப்பிடும் நட்கிராக்கர் குருவி போன்ற பறவைகளை இந்நூலில்
கண்டடையலாம்.
நன்றி: முத்தாரம் வார இதழ்