பசுமை பேச்சாளர்கள் - 5 (எர்வின் மேஜிக் ஜான்ஸன்) -ச.அன்பரசு




பசுமை பேச்சாளர்கள் - 5
எர்வின் மேஜிக் ஜான்ஸன்
.அன்பரசு

1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள லான்சிங் நகரில் பிறந்த எர்வின் ஜான்ஸன் அமெரிக்காவின் சிறந்த பேஸ்கட்பால் விளையாட்டு வீரராகவும், மெகா தொழிலதிபராகவும் சாதித்தவர். ரியல் எஸ்டேட், ஸ்டார்பக்ஸ் கிளைகளின் ஏஜன்சி, தியேட்டர் என ஏராள தொழில்களில் வென்று காட்டியவர், எர்வின் ஜான்சன்.

ஒன்பது சகோதர சகோதரிகளை கொண்ட ஜான்சனுக்கு பேஸ்கட்பால் என்றால் கொள்ளை இஷ்டம். காலையில் 7.30க்கும் பயிற்சியைத் தொடங்கிவிடுவார். பள்ளி மேட்சுகளில் விறுவிறுவென பாய்ண்ட் எடுக்கும் இவரது வேகத்திற்குத்தான் மேஜிக் என்ற பட்டப்பெயர். 6 அடி 9 அங்குலத்தில் பல்கலைக்கழக மேட்சுகளில் சூப்பராக பாய்ண்டுகளை எடுத்து, லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணியில் 1979 ஆம் ஆண்டு இணைந்தார். பல்வேறு நூல்களையும் எழுதியுள்ள ஜான்சன், டிவிகளில் விளையாட்டு தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். 1996 ஆம் ஆண்டு மிகச்சிறந்த 50 விளையாட்டு வீரர்களில் ஒருவராக ஜான்ஸன் தேர்வானது  முக்கிய நிகழ்வு. இன்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணியின் துணைத்தலைவராகவும் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.

மேஜிக் ஜான்சன் ஃபவுண்டேஷன் என்ற பெயரிலான அமைப்பை ஏற்படுத்தி, ஹெச்ஐவி/எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு பல்வேறு அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகளிலும் வேலைவாய்ப்பு கல்வி குறித்து ஆக்கப்பூர்வமாக பேசி வருகிறார் ஜான்சன். அதைப்பேசுவதற்கான தைரியத்தை தன் வாழ்விலிருந்தே ஜான்ஸன் பெற்றுள்ளார். 1991 ஆம் ஆண்டு ஹெச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டு தன் விளையாட்டு வாழ்வை கைவிடும் துயரம் நேர்ந்தது. இன்றும் தளராத தன்னம்பிக்கை இல்லாமல் எப்படி ஒருவர் ஹெச்ஐவியை சமாளித்து வாழ முடியும்

'குழந்தைகளுக்கு தங்கள் மேல் நம்பிக்கை வருவதற்கு தேவை உங்களின் சிறியளவு ஆதரவுதான், நான் எனக்கு ஏற்பட்ட நோய் குறித்து சிந்திப்பது அதற்கு மருந்து சாப்பிடும் இருவேளை மட்டுமே, உங்கள் குழுவினருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதே முக்கியம், அவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் என்பதல்ல உள்ளிட்ட ஊக்கமொழிகளை பேசியதோடு தன் நிறுவனங்களிலும் அமல்படுத்தி வெற்றிகண்டவர் ஜான்ஸன் என்பதே நாம் அறிவதே முக்கியம்.

நன்றி: முத்தாரம் வார இதழ்       
  


பிரபலமான இடுகைகள்