சூழல் போராளிகளுக்கு மரியாதை! -முத்தாரம் கட்டுரை






சூழல் போராளிகளுக்கு மரியாதை! - .அன்பரசு

அமெரிக்காவில் நடைபெற்ற 2017 ஆண்டிற்கான கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசை இந்தியாவின் பிரஃபுல்லா சமன்தாரா உட்பட ஆறுபேர் பெற்றுள்ளனர்.

உரோ மெக்கர்ல், ஐரோப்பா

ஸ்லோவேனியாவைச் சேர்ந்த இயற்கை விவசாயியான மெக்கர்ல், தன் நிலத்திற்கு அருகில் அமையவிருந்த சிமெண்ட் ஆலையை எதிராக மக்களை திரட்டி போராடி சூழல் காத்து காற்று, நீர், மண் மூன்றின் அவசியத்தை பலருக்கும் உணர்த்தியுள்ளார்.
பிரஃபுல்லா சமன்தாரா, ஆசியா
ஒடிஷாவில் டோங்கிரியா கொந்த் பழங்குடிகளின் வாழ்விடமான நியமகிரி மலையை மாசுபடுத்திய அலுமினிய ஆலைக்கு எதிராக 12 ஆண்டுகள் சட்டத்தின் வழியில் போராடியவர் பிரஃபுல்லா சமன்தாரா.

மார்க் லோபஸ், அமெரிக்கா

அமெரிக்காவில் EYCEJ என்ற அமைப்பின் மூலம் அங்கு பல்வேறு தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகிய வேதிப்பொருட்கள் நீர்நிலைகளில் கலப்பதை எதிர்த்து  துணிச்சலான போராட்டக்காரர் மார்க் லோபஸ்.

ரோட்ரிகோ டாட், தெற்கு, மத்திய அமெரிக்கா

குவாத்திமாலாவின் அக்வா கலைன்டே என்ற இனக்குழுவின் தலைவராக உள்ள ரோட்ரிகோ, அங்கு சூழலுக்கு கேடுவிளைவித்த நிக்கல் தொழிற்சாலையை அகற்ற மக்களைக் காக்க, தனது குடும்பத்தில் இருமகன்களையே பலி கொடுத்தார். அர்ப்பணிப்பாக மக்களை ஒருங்கிணைத்து போராடிய ரோட்ரிகோவின் போராட்டத்தின் விளைவாக தற்போது அங்கு விவசாயமும், மீன்பிடித்தலும் அங்கு சிக்கலின்றி நடைபெறுகிறது.

ரோட்ரிக் முகாருகா கடெம்போ, ஆப்பிரிக்கா

காங்கோ நாட்டின் விருங்கா தேசியப்பூங்காவில் துளையிட்டு எடுக்கப்படும் எண்ணெய் தொழிலில் நடமாடும் லஞ்சம், ஊழல், கெடுக்கப்படும் இயற்கை வளங்களை குறித்த சேகரித்து வெளியிட்டு அந்நிறுவனத்தை மூட வைத்த சூழல் போராளி கடெம்போ. வேட்டைக்காரர்களால் விருங்கா தேசியப்பூங்காவின் காவலர்கள் கொல்லப்படுவது இதன் பல்லுயிர்தன்மைக்கு சான்று.

வெண்டி போமேன், ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ், ஹன்டர்வேலியின் கேம்பர்வெல் கிராமவாசியான வெண்டி போமேன், நிலக்கரிக்காக தன் நிலத்தை பறிக்கவிருந்த அரசை எதிர்த்து, சுரங்கத்தின் பாதிப்புகளை சுட்டிக்காட்டி வழக்கு பதிந்து இயற்கை வளத்தை சுரண்டும் நிறுவனத்தை விரட்டி கிராமத்தையே காப்பாற்றியது அரும்பெரும் சாதனை.