உயிர்கொல்லும் விஷ ஊசி! - விக்டர் காமெஸி
உயிர்கொல்லும்
விஷ ஊசி!
- விக்டர் காமெஸி
அர்கான்சாஸ் நகர
நீதிபதியின் உத்தரவுப்படி கடும் குற்றங்களில் ஈடுபட்ட 7 நபர்களுக்கும்
மரணதண்டனை விதிக்கப்பட்டது. எப்படி மரணம் நிகழும் தெரியுமா?
முதலில் நரம்பு வழியாக மிடாஸோலம் எனும் வேலியம் குடும்பவகை மருந்து ஊசி,
கோமாவிற்கு கொண்டு செல்ல போடப்படும். பின்,
அடுத்த வேக்குரோனியம் ப்ரோமைடு ஊசி(நரம்புதசைகளை
செயலிழக்கச்செய்வதோடு மூச்சு திணறவைக்கும்),அடுத்து பொட்டாசியம்
குளோரைடு இறுதியாக செலுத்தப்படும். இதிலுள்ள பொட்டாசியம் அயனிகள்
இதயச்செயல்பாட்டை நிறுத்தும்போது சாவு உறுதி.
விஷ ஊசி வழிமுறை அனைத்து மாநிலங்களுக்குமானதல்ல. சில மாநிலங்களில்
ஒரே ஊசிதான். ஆனால் வழிமுறை இதுதான். கத்தியால்
வெட்டுவது, சுடுவது, நச்சுவாயு அறை,
தூக்குதண்டனை இவற்றை விட விஷ ஊசி மிதமான தண்டனையாகவே பலருக்கும் தோன்றும்.
ஆனால் அமெரிக்க அரசமைப்பு சட்டப்படி 8 வது சட்டப்பிரிவு, குற்றவாளிக்கு குரூரமான தண்டனைகளை அளிப்பதை தடுக்கிறது.
1977 ஆம்
ஆண்டு விஷ ஊசிகளைப்பற்றி 3 கொள்கைகளை ஜே சாப்மன் வகுத்தார் எனினும்,
அவை குறித்த எந்த ஆதாரமோ, ஆராய்ச்சியோ கிடையாது.
"விஷ ஊசிகள் தொடர்ந்து பயன்பட்டாலும் அவை குறித்து முறையான ஆராய்ச்சி
விவரங்கள் குறைவு" என விரிவாக பேசுகிறார் இந்தியானா மருத்துவ
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் தெரஸா ஸிம்மர்ஸ்.இவர் பார்பிடியூரிக்
அமிலத்திலிருந்து எடுக்கும் ஊசியைப் பயன்படுத்துவது தெரஸாவின் ஆய்வுமுடிவு.
ஆனால் 2000 ஆம் ஆண்டில் பார்பியூரிக் அமிலத்திற்கு
கடும் டிமாண்ட். பின் இதனை பயன்படுத்த ஐரோப்பா முழுக்க தடை அமுல்படுத்தப்பட்டது.
ஓஹியோ, ப்ளோரிடாவில்,
மிடாஸோலம் கைதிகளுக்கு செலுத்தியபோது, திடீரென
கைதிகள் கோமாவின் பாதியில் இருமலோடும் உடல் எரிச்சல் பாதிப்புடன் எழுந்து உட்கார்ந்தது
பலருக்கு பீதியளித்தது. "மாநிலங்கள் இது குறித்த போதிய கவனம்
கொள்வதில்லை. மிடாஸோலம் மரணதண்டனைக்கான மருந்தல்ல என்பதை உணர்ந்தும்
கூட மீண்டும் மீண்டும் மருத்துவர்கள் மயக்கத்துக்கு பயன்படுத்தும் மருந்துகளையே அரசு
பயன்படுத்துவது தவறு " என்கிறார் மரணதண்டனை தகவல் மையத்தின்
இயக்குநரான ராபர்ட் டன்ஹம்.
நெதர்லாந்தில்
ஒருவரை விஷ ஊசி மூலம் கருணைகொலை செய்ய அரசின் பர்மிஷன் உண்டு. தனியறையில்
மருத்துவர் உடனிருக்க மரணம் நேருவது அவசியம். அமெரிக்காவில் 8வது விதிப்படி மரணதண்டனைக்கான விதிகள் கூறுவது விஷ ஊசிகளுக்கான மாற்று ஐடியாவை
தேடலாமே என்பதுதான். லூசியானா, உடா ஆகிய
மாநிலங்கள் துப்பாக்கிச்சூடு, நைட்ரஜன் கேஸ் சேம்பர் ஆகியவற்றின்
பக்கம் கவனம் திரும்பியுள்ளன.
நன்றி:முத்தாரம் வார இதழ்