வன்முறைப் போராட்டத்திற்கான மூல காரணம்!
வன்முறையைக் கொண்டாடும் திரைப்படங்கள் உலகமெங்கும் உண்டு. ஆங்கிலத்தில் வந்த திரைப்படங்களை அடியொற்றி இப்போது இந்தியா போன்ற ஏழை நாடுகளில் கூட அத்தகைய படங்களை உள்ளூர் மொழிகளில் உருவாக்குகிறார்கள். பழிவாங்குவதை, தங்கத்தின் மீது கொண்ட பேராசையை தாயின் கனவு, அண்ணனின் லட்சியம், தம்பியின் வாழ்க்கை என ஏதோ கதை சொல்லி கோடரி, கத்தி, வாள், துப்பாக்கி என பயன்படுத்தி ரத்தம் தெறிக்க கொல்கிறார்கள். இதில் புராண கோட்டிங் அடித்து தாழ்த்தப்பட்ட மனிதர்களைக் கொன்று அவர்கள் மீது சிறுநீர் கழிப்பவர்களை மக்கள் கேள்வி கேட்பதில்லை. பார்ப்பனன் தொந்தி வைத்துக்கொண்டு விளையாட்டை விளையாடுகிறான் என்பதை எதிர்க்கட்சிக்காரர் கூறிவிட்டார் என அதை ஊடகங்கள் ஊதிவிட்டு வெறுப்பை வளர்த்து வருகின்றன. இங்கு இறப்பவன் யார், அவனுக்கு சமூகத்தில் என்ன அந்தஸ்து, என்ன மதத்தைக் கடைபிடிக்கிறான் என்பதை அடிப்படையாக வைத்தே அவன் சாவுக்கான சமதர்ம நீதி தீர்மானிக்கப்படுகிறது. இப்படியான நிலப்பரப்பில் நாம் வன்முறையை கையில் எடுப்பதைப் பற்றி பேசுகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பனன், அவனுடைய ஆதரவு பெற்ற பொறுக்கித்தின்னும் இடைநிலை ச...