இடுகைகள்

மகேஷ்பாபு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாக்சியின் கவர்ச்சி தாராளத்தில் களைகட்டும் யுவராஜூ!

படம்
  யுவராஜூ   மகேஷ்பாபு பால் வடியும் முகத்துடன் பிளேபாயாக நடித்துள்ள படம். படத்தை யாருக்காக பார்ப்பது என்றால், தயங்கவே வேண்டாம். சாக்சி சிவானந்தின் கவர்ச்சிக்காக பார்க்கலாம். மூன்று பாடல்கள் அவருக்கென இருக்கிறது. ஒரு பாடல் சிம்ரனுக்காக. இன்னொரு பாடல் நாயகனின் அறிமுகம். மனதை திருடிவிட்டாய் படத்தில் பிரபுதேவா, கௌசல்யாவின் அறைக்கு குடிபோதையில் சென்று தூங்கும் பெண்ணை   கசகசா செய்வாரில்லையா அதே போல்தான் படத்தில் ட்விஸ்ட் உள்ளது. இதில் அந்த சமாச்சாரத்தில் ஆண் குழந்தையைப் பெற்று வளர்த்தே வருகிறார் சிம்ரன். இந்த உண்மையை தெரிந்துகொண்டு மகேஷ்பாபு தனது கல்யாணத்தை நிறுத்தி, சிம்ரனோடு சேர்கிறார். ஆனால், அதற்குள் சாக்சியோடு மழை நடனம் ஆடி, நிச்சயதார்த்தத்தின் போது முதுகு, இடுப்பு, உதடு என முத்தம் கொடுத்து பலவித இளமைக் குறும்புகளை செய்துவிடுகிறார். அதற்குப்பிறகுதான் உண்மை தெரிகிறது. யாருக்கு? முதலில் மகேஷூக்கு பிறகு சாக்சிக்கு. அப்படியும் கூட சிம்ரனுக்கு ரத்தவாந்தி ஏற்பாடு செய்திருக்கிறார். இயக்குநர். ஆனாலும் கூட இறுதியில் சாக்சிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மகேஷோடு வாழத்தான். வேறு எத...

மாஃபியாவை சட்டப்பூர்வமாக மாற்றும் அநீதியின் காவலன்! பிஸ்னஸ்மேன் - மகேஷ்பாபு

படம்
  பிஸ்னஸ்மேன் - மகேஷ்பாபு, காஜல், நாசர் பிஸ்னஸ்மேன் -தெலுங்கு அடடா... அப்பப்பா பாத்திரங்கள் - Character Sketch பிஸினஸ்மேன் சூர்யா பாய் (மகேஷ் பாபு) தெலுங்கு இயக்குநர் – பூரி ஜெகன்னாத்   சாதாரண ஆள், ஆந்திராவிலிருந்து மும்பைக்கு சென்று பெத்த மாஃபியா டான் ஆகும் கதை. அதற்கான காரண காரியங்களை இயக்குநர்கள் சிறப்பாகவே செய்கிறார்கள். அதெல்லாம் தாண்டி நாயக பாத்திரம் எந்தளவு உறுதியாக உள்ளது, என்னென்ன விதமான வலிகளைப் பொறுக்கிறது என்பதே,  படத்தைப் பார்ப்பவர்கள் எந்த வயதாக இருந்தாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பார்க்க வைக்கிறது. பேச வைக்கிறது. ‘’குற்றவாளி கிடையாது. ஆனால் குற்றவாளி போல யோசிப்பவன்” என மும்பை கமிஷனர் அஜய் கோபத்துடன் கூறும் அளவுக்கு சூர்யா அநீதியின் தலைவனாக வேலை பார்க்கிறான். கமிஷனர் அஜய் பரத்வாஜ், ‘’இனி மும்பையில் இனி எந்த டானும் இல்லை’’ என பிரஸ் கிளப்பில் கூட்டம் வைத்து பேசியபிறகுதான், மும்பைக்கு ரயிலில் வந்து இறங்குகிறான் சூர்யா. காட்சி ரீதியாகவே அவர் சொன்னதை உடைப்பதற்குத்தான் நாயகன் வருகிறான். பூரி ஜெகன்னாத்தின் ஆக்ரோஷ ஹீரோக்களில் இன்றும் ரசிக்க வைக்கும் வி...

தொழிலதிபரின் வாராக்கடனை கட்ட வைக்கும் அமெரிக்க கந்துவட்டி நாயகன்!

படம்
  சர்காரி வாரு பாட்டா பரசுராம் இசை  தமன் ஒளிப்பதிவு  மதி விசாகபட்டினத்தின் தொழிலதிபர் ராஜேந்திரநாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் ********* வாங்கி ஏமாற்றிய 1000 கோடி ரூபாய் பணத்தை அமெரிக்க கந்துவட்டி நிறுவனர் மகேஷ் எப்படி மீட்கிறார் என்பதே கதை.  குடும்ப படம், உணர்ச்சிகள் என படம் எடுத்த பரசுராம், தமிழ்ப்பட இயக்குநரான ஷங்கர் போல மக்கள் கருத்து கேட்டு கேட்கவிட்டு எடுத்துள்ள அதிசாகசப் படம்.  படத்தை உயிரோட்டமாக கொண்டு செல்ல உதவுபவர்கள் மகேஷ்பாபு, சுப்பராஜூவும்தான். கூடவே பக்கத்துணையாக தமன் இருக்கும்போது என்ன? காட்சிகளை உணர்வோட்டமாக மாற்றவும், ஆக்சன் காட்சிகளில் அட்ரினலின் சுரக்க வைக்கவும் தமனின் தப்புச்சத்தங்களால் முடிகிறது.  ஸ்டார் படங்களில் இருக்கும் அனைத்து சிக்கலும் மகேஷ்பாபுவின் படமான இதிலும் தலைகாட்டுகிறது. அதைத்தாண்டி முக்கியமான உணர்ச்சிகர காட்சிகள் சிலதை மட்டும் கவனிக்கலாம்.  மகேஷின் அப்பா, விவசாயம் செய்பவர். பயிருக்கு வாங்கிய கடனுக்கு சில நாட்கள் தவணை கேட்கிறார். ஆனால் அங்குள்ள அதிகாரி அம்மணி அதெல்லாம் முடியாது. கட்ட முடியவில்லை எனில் வீட்டை ஏலம் போடுவோம் என...

எக்ஸ்ட்ரா டோஸ் தேசபக்தி! - உனக்கு நிகர் யாருமில்லை!

படம்
சரிலேறு நீக்கெவ்வரு இயக்கம் - அனில் ரவிபுடி ஒளிப்பதிவு - ரத்னவேலு இசை - டிஎஸ்பி தேசப்பற்றை கவளம் கவளமாக பார்வையாளர்களுக்கு திகட்டும்படி ஊட்டி,  வேணாமுடா என அவர்களைக் கத்த வைக்கிற படம். ஆஹா! எப்போதும் போல அலட்டல் இல்லாமல் நடித்து பரவசப்படுத்துகிறார் மகேஷ். ஆக்ஷன் காட்சிகளில் நமக்கு திகிலேறுகிறது. விஜயசாந்திக்கு கம்பேக் படம். முதல் காட்சி தொடங்கி அனைத்து காட்சிகளிலும் வருகிறார். இயக்குநரே காமெடி ரசிகராக இருப்பதால் அனைத்து வசனங்களிலும் காமெடியும், ஃபேன்டசித்தனமும் தெறிக்கிறது. ஐயையோ இந்தப் படத்திற்கு ராஷ்மிகா எதற்கு? படம் பார்க்கும் பலருக்கும் இந்த கேள்வி மனதில் எட்டிப்பார்த்திருக்கும். பாடல்களைப் பார்த்தால் உங்களுக்கு காரணம் புரிந்திருக்கும். விஜயசாந்தி அத்தியாயமே ரொம்பநேரமாக நீள்வது போல படுகிறது. உண்மைக்காக போராடுபவர் எந்த நிலையிலும் அதைக் கைவிடாமல் இருக்கவேண்டும். குடும்பமாக இருப்பவர், உண்மைக்காக நெருக்கடி சந்தித்து அதனால் நேர்மையைக் கைவிடுகிறார் என்பது ஏற்றுக்கொள்வதாக இல்லை. உண்மையை விட ஆணின் உடல்வலிமை பெரியது என்பது மாதிரியான செய்திகள் எரிச்சலட...

விவசாயம்தான் எல்லாமே... மகர்ஷி சொல்லும் பிளாக்பஸ்டர் உண்மை!

படம்
மகர்ஷி வம்சி படிப்பள்ளி கே.யு . மோகனன் டிஎஸ்பி அமெரிக்கவாசி இந்தியர், தன் நண்பரைக் காண வந்து கிராமத்தின் பிரச்னையைத் தீர்ப்பதுதான் ஒன்லைன் கதை. ஆஹா.. வேறுயார் மகேஷ்பாபுதான். விவசாயம் சார்ந்த கதையை தோளில் அயராமல் தூக்கிச்சென்று நம் மனதில் உட்கார வைக்கிறாரே.. அதற்கே கைதட்டலாம். காலேஜ் போர்ஷன்கள், சற்று நெளிய வைத்தாலும் பின்பகுதியில் அசர வைத்துவிடுகிறார்.  அத்தனை சூழலுக்கும் ஈடுகொடுக்கும் மனவாடு தேச இசைஞர் டிஎஸ்பி இதிலும் பின்னி எடுத்திருக்கிறார். இதே கதா பாடல் நெஞ்சை நெகிழ வைத்து கண்களை நிறைய வைக்கிறது. பாடலில் குதூகலமாகவும், சண்டையில் நெருப்பாகவும், உணர்ச்சிக காட்சியில் ஏறத்தாழ நாம் பார்க்கும் கண்களாகவே மாறியிருக்கிறது கேமரா. அடச்சே... பூஜா ஹெக்டேதான். சர்க்கரைப் பொங்கலுக்கு வடகறியாக இருக்கும கதாபாத்திரம் இது. படத்தில் கமர்சியலுக்கு குத்தாட்டம் போட்டு உதவியது, நாயகனை திட்டுவது தாண்டி வேறு எதுவும் செய்யவில்லை. ஜெகதிபாபு எனும் திறமையான கலைஞரை, நாசரை வீணடித்திருக்கிறார்கள். கிளாப்ஸ் நோக்கம் அடிப்படையில் வெற்றிதான். விவசாயத்திற்கான பொருளாத...